கீழ்க்குடி ஊராட்சி
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
கீழ்க்குடி ஊராட்சி (Keelkudi Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1076 ஆகும். இவர்களில் பெண்கள் 525 பேரும் ஆண்கள் 551 பேரும் உள்ளனர்.
கீழ்க்குடி | |
— ஊராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவாரூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | தி. சாருஸ்ரீ, இ. ஆ. ப [3] |
ஊராட்சித் தலைவர் | |
மக்களவைத் தொகுதி | நாகப்பட்டினம் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | நன்னிலம் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 1,076 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
அடிப்படை வசதிகள்
தொகுதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
அடிப்படை வசதிகள் | எண்ணிக்கை |
---|---|
குடிநீர் இணைப்புகள் | 120 |
சிறு மின்விசைக் குழாய்கள் | 2 |
கைக்குழாய்கள் | 19 |
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் | 4 |
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் | |
உள்ளாட்சிக் கட்டடங்கள் | 7 |
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் | 2 |
ஊரணிகள் அல்லது குளங்கள் | 10 |
விளையாட்டு மையங்கள் | 1 |
சந்தைகள் | |
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் | 50 |
ஊராட்சிச் சாலைகள் | 22 |
பேருந்து நிலையங்கள் | 1 |
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் | 5 |
சிற்றூர்கள்
தொகுஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:
1.கீழ்க்குடி- நன்னிலம் வட்டத்திற்கு உட்பட்ட இவ்வூர் புத்தாற்றின் வடகரையில் அதன் பாசனப்பரப்பில் அமைந்துள்ளது. இவ்வூர் கீழ்க்குடி ஊராட்சின் தலைமை ஊராக உள்ளது. இவ்வூர் திருவாஞ்சியத்தின் கீழ்கோடியில் இருப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம் என்று திருவாரூர் மாவட்ட இடப்பெயர்கள் என்ற நூலை எழுதிய அ. ஜான் பீட்டர் குறிப்பிடுகிறார். மேலும் இவ்வூர் திருவாஞ்சியத்தின செய் ஊராக இருந்திருக்காலம் என்பது அவருடைய கருத்தாக உள்ளது. இவ்வூரில் 2009-10 காலப்பகுதியல் களஆய்வு மேற்கோண்ட இரா. சுரேஷ் என்ற ஆய்வாளர் ஆவணம் -இதழ் 21 என்ற ஆண்டு ஆய்விதழில் நன்னிலம் வட்டார தொல்லியல் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இவ்வூரின் மதுரை வீரன் திடலுக்கு கிழக்கில் (சர்வே எண்-68) புதிதாக வெட்டப்பெற்றுள்ள சிறிய குளத்தில் நுண்கற்கால செதில்கள் மற்றும் 3.5 அடி விட்டம் உடைய உறை கிணறுகள் கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளார். இவ்வூரில் இடைக்கால கலைப்பாணியை கொண்ட பிடாரி அம்மன் மற்றும் பிள்ளையார் கோயில்கள் உள்ளன.
2.வீராக்கண் -நன்னிலம் வட்டம் கீழ்க்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஊராக வீராக்கண் உள்ளது. இவ்வூர் நன்னிலம் நகரப்பகுதியில் இருந்து நேர் மேற்கில் 2.5 கி.மீ தொலைவில் புத்தாற்றின் (விக்கிரமசோழப் பேராறு) வடகரையில் அதன் பாசனப்பரப்பில் அமைந்துள்து. இவ்வூர் முடிக்கொண்டான் ஆற்றின் தென்கரை வரை விரிந்து பரவியுள்ளது. இவ்வூருக்கு தெற்காக கீழகரம் என்ற ஊர் உள்ளது. இவ்வூரானது இடைக்கால பனையூர் (திருப்பனையூர் நாட்டுக்கு உட்பட்டு இருந்தனை கீழகரம் (கீழையம்) ஆதிபுரீஸ்வரர் (திருவாத்தீஸ்வரமுடையார்) கோயிலில் உள்ள மாறவர்வர்மன் வீரபாண்டியன் (1334–1380.) 21-ஆவது ஆட்சி ஆண்டு கால நில விற்பனை ஆவண கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. இக்கல்வெட்டு வாயிலாக இவ்வூரின் இடைக்கால பெயர் விராக்கநல்லூர் என்று அறியமுடிகிறது. மேலும் தமிழிசைத் தேவாரப் பேரறிஞரும், சைவ சித்தாந்த உலகின் இசைஞானி என்றும் போற்றப்படுபவர். திருமுறைகளைப் பொருள் விளங்குமாறு இசைத்தவர். பண்ணிசையில் பெரும் புலமை பெற்றிருந்தவருமான தருமபுரம் ப. சுவாமிநாதன் (மே 29, 1923 - 15 அக்டோபர் 2009) அவர்கள் இவ்வூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
3.கீழகரம் - நன்னிலம் வட்டம் கீழ்க்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சிற்றூராக கீழகரம் உள்ளது. இவ்வூர் நன்னிலம் நகரப்பகுதியில் இருந்து நேர் மேற்கில் 2 கி.மீ தொலைவில் முடிக்கொண்டான் ஆற்றின் தென்கரைக்கு அருகில் அமையப்பெற்றுள்ளது. இவ்வூர் இடைக்கால பனையூர் நாட்டுக்கு உட்பட்ட இருந்தனை இவ்வூர் ஆதிபுரீஸ்ரர் கோயிலில் உள்ள இவ்வூர் சோழர்காலத்தில் கீழையம், கீழையகம் என்ற பெயரிலும் பாண்டியர் காலத்தில் கீழையமான ஜனநாத அத்திபாக்கம் என்ற பெயரிலும் மாற்றம் பெற்றிருக்கிறது. தற்போது கீழகரம் என்று வழங்கப்படுகிறது. சுந்தரர் தேவாரத்தில் வைப்புதலமாக கருதி இவ்வூர் ஆதிபுரீஸ்வரர் கோயில் சிறப்பித்து பாடப்பெற்றுள்ளது.
இவ்வூருக்கு மேற்கில் உள்ள சுக்கிரவார கட்டளை என்ற ஊர் உள்ளது. இவ்வூர் மாரியம்மன் கோயிலுக்கு வலது புறம் உள்ள புளியமரத்த திடலில் இரும்பு கால கருப்பு சிவப்பு மட்கல ஓடுகள் தென்படுகின்றன.
சான்றுகள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "நன்னிலம் வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
{{cite web}}
: Unknown parameter|https://web.archive.org/web/20160305033159/http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=
ignored (help) - ↑ 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
5. நன்னிலம் வட்ட கல்வெட்டுகள் தொகுதி-3-469.
6.அ.ஜான்பீட்டர் (2006) திருவாரூர் மாவட்ட இடப்பெயர்கள். முக்கடல் பதிப்கம்.சென்னை-91
7..ஆவணம்-இதழ் -21 (2011) தமிழ்நாட்டு தொல்லியல் கழகம் -தஞ்சாவூர்
8.திருவாரூர் மாவட்ட தொல்லியல் வரலாறு (2000) -தமிழக தொல்லியல் துறை சென்னை.
9.. இரா.சுரேஷ் -நன்னிலம் வட்டார உழுகுடி சமூகமும் வாழ்விடங்களும். வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வுகள் பொ.600-1600) தமிழ்ப்பல்கலைகழகம்-(கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறைக்கு முனைவர் பட்டத்திற்கு சமர்க்கபடவுள்ள ஆய்வேடு)