குகூர்
குகூர் (Kugur) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் பெங்களூர் மாவட்டத்தில் உள்ள ஆனேகல் வட்டத்தில் உள்ள ஒரு பண்பாட்டு பாரம்பரிய சிற்றூர் ஆகும். இது சர்ஜாபுரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. [1] [2]
குகூர் | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 12°42′N 77°42′E / 12.7°N 77.7°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூர் |
வட்டம் | ஆனேகல் |
பரப்பளவு | |
• மொத்தம் | 300.51 km2 (116.03 sq mi) |
ஏற்றம் | 915 m (3,002 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 1,137 |
• அடர்த்தி | 3.8/km2 (9.8/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
நிலவியல்
தொகுஇது பெங்களூருக்கு கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த சிற்றூர் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அருகில் பாயும் இந்த ஆற்று நீரைக் கொண்டு வேளாண்மை செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் நெல், கரும்பு பயிரிடப்படுகிறது. பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் பிற பயிர்களும் வளர்க்கப்படுகின்றன. இந்த சிற்றூர் கரும்பு, பட்டு, பால் ஆகியவற்றிற்கு மிகவும் பிரபலமானது.
கல்வி
தொகுஆனேக்கல் வட்டத்தில் உள்ள இரண்டாவது அரசு உயர்நிலைப் பள்ளியானது 1983இல் இங்கு தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளி 30-ஏக்கர் (120,000 m2) பரப்பளவில் வளர்ந்துள்ளது. பள்ளி வளாகம், அதன் சொந்த கணினி ஆய்வகம் மற்றும் பள்ளியைச் சுற்றியுள்ள பசுமையான இயற்கைக்காட்சிகளோடு உள்ளது. இன்ஃபோசிஸ் அறக்கட்டளை 2000 ஆம் ஆண்டில் பள்ளிக்கு 14 கணினிகளை வழங்கியது. கடந்த பத்து ஆண்டுகளாக இடைநிலை பள்ளி இறுதித் தேர்வில் பெங்களூர் மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்று இப்பள்ளி சாதனை படைத்துள்ளது. மாநில அளவிலான சடுகுடு, கோக்கோ, ஓட்டம், நீளம் தாண்டுதல் ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களையும் மாணவர்கள் பெற்றுள்ளனர்.
இந்த ஊர்வாசிகள் 95% எழுத்தறிவு பெற்றுள்ளனர். இது இந்த மாவட்டத்தில் மிக உயர்ந்த நிலையாகும். பெண்கள் அதிகாரம் பெறுவதற்காக தேனா வங்கியின் குகூர் கிளையின் உதவியுடன் கிராமத்தைச் சேர்ந்த நடுத்தர வருவாய்ப் பெண்களால் ஸ்த்ரீ சக்தி உருவாக்கப்பட்டது. இது கடந்த ஆறு ஆண்டுகளாக கூட்டுறவு அடிப்படையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.
குகூர் பண்பாடு சார்ந்த கிராமமாகும். நாட்டுப்புறப் பண்பாடு இன்னும் உயிரோடு இருக்கிறது. இளைஞர்கள் கோலாட்டம், டோலு குனித்தா, நாதசுவரம் போன்ற கலைகளுக்காக அணிகளை உருவாக்கியுள்ளனர். இந்த அணிகள் மாநில ஆண்டு இளைஞர் கலாச்சார விழா மற்றும் பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளன.
வரலாறு
தொகுஊரில் உள்ள ஆற்றங்கரையில் சிறிய ஆனால் மிகவும் பழமையான சிவன் கோயில்கள் உள்ளன. அங்கு சனிபகவான், முனீசுவரன் ஆகியோருக்கு கோயில்கள் உள்ளன.
போசளர் காலத்து சிலைகளை ( நடுகல், மாஸ்தி கல் ) இக்கிராமத்தில் காணலாம். மேலும் ஒரு நூற்றாண்டு பழமையான கிராம தேவதை ( துக்களம்மா ) சிலையும் உள்ளது. தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஒரு நூற்றாண்டு பழமையான சிவலிங்கமும் உள்ளது.
போக்குவரத்து
தொகுகிருஷ்ணராஜபுரம் மார்கெட்டில் இருந்து பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 323B எண் கொண்ட பேருந்தும், பெங்களூர் கெம்பேகௌடா பேருந்து நிலையத்திலிருந்து 327G எண் கொண்ட பேருந்துகள் வழியாக இந்த சிற்றூரை அடையலாம்.