குட் நைட் (2023 திரைப்படம்)

குட் நைட் (Good Night) என்பது 2023 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம். அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகர் எழுதி இயக்கி இருக்கிறார். முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் மணிகண்டன், மீத்தா ரகுநாத் இயக்குனர் பாலாஜி சக்திவேல் மற்றும் ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் பகவதி பெருமாள், ரேய்ச்சல் ரெபேக்கா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளார்.

குட் நைட்
இயக்கம்விநாயக் சந்திரசேகரன்
தயாரிப்பு
 • யுவராஜ் கணேசன்
 • மகேஷ் ராஜ் பாசிலியன்
 • நாசரேத் பாசிலியன்
கதைவிநாயக் சந்திரசேகரன்
இசைஷான் ரோல்டன்
நடிப்பு
ஒளிப்பதிவுஜயந்த் சேது மாதவன்
படத்தொகுப்புபரத் விக்ரமன்
கலையகம்மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ்
எம்ஆர்பி என்டெர்டெய்ன்மென்ட்
விநியோகம்சக்தி ஃபிலிம் பேக்டரி
வெளியீடு12 மே 2023 (2023-05-12)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

12 மே 2023 அன்று தமிழகத்தில் வெளியிடப்பட்டது. விமர்சகர்களிடமிருந்து நேர்மறை விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்து திரையிடப்பட்டது.

கதை தொகு

மென்பொருள் துறையில் வேலைபார்க்கும் மோகன், தொடர்ந்து ஏற்படும் குறட்டை காரணமாக அவனது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளைச் சுற்றியே கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

நடிகர்கள் தொகு

 • மோகனாக மணிகண்டன்
 • அனுவாக மீத்தா ரகுநாத்
 • ரமேஷ், மகாவின் கணவர் ரமேஷ் திலக்
 • அனுவின் வீட்டு உரிமையாளராக பாலாஜி சக்திவேல்
 • பகவதி பெருமாள் ஹயக்ரீவன் பாலாஜி, மோகனின் முதலாளி
 • மஹாவாக ரைச்சல் ரபேக்கா, மோகனின் மூத்த சகோதரி
 • மோகனின் சக ஊழியரான ப்ரீத்தியாக கௌசல்யா நடராஜன்
 • மோகனின் அம்மாவாக உமா ராமச்சந்திரன்
 • மோகனின் சகாவாக நிகிலா சங்கர்
 • மோகனின் சக ஊழியராக ஜெகன் கிருஷ்ணன்
 • ஷாலினியாக ப்ரியாலயா, மோகனின் முன்னாள் காதல் ஆர்வலரும் சக ஊழியரும்
 • மோகனின் தங்கையாக ராகவியாக ஸ்ரீ ஆர்த்தி
 • அனுவின் வீட்டு உரிமையாளரின் மனைவியாக சைவம் கலா
 • ஆட்டோ டிரைவராக விநாயக் சந்திரசேகரன் (கேமியோ தோற்றம்)

உற்பத்தி தொகு

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் நடைபெற்றது. நவம்பர் 2022 இல் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்தது. திரைப்படத்தின் முதல் பார்வையை இயக்குனர் பா. ரஞ்சித் மற்றும் விஜய் சேதுபதி வெளியிட்டனர். படத்தின் முன்னோட்டம் நடிகர் ஜெயம் ரவி அவர்களால் வெளியிடப்பட்டது. திரை அரங்குகளில் 12 மே 2023 அன்று வெளியிடப்பட்டது.

இசை தொகு

படத்திற்கு இசையமைத்தவர் சீன் ரோல்டன் . [1]

Good Night
Soundtrack
வெளியீடு2023
ஒலிப்பதிவு2023
இசைப் பாணிஒலிச்சுவடு
நீளம்21:23
மொழிTamil
இசைத்தட்டு நிறுவனம்Think Music
இசைத் தயாரிப்பாளர்ஷான் ரோல்டன்
ஷான் ரோல்டன் காலவரிசை
August 16 1947
(2023)
Good Night
(2023)
Modern Love Chennai
(2023)
  வெளி ஒலியூடகங்கள்
  யூடியூபில் Good Night - Jukebox

அனைத்து பாடல்களும் மோகன் ராஜன் எழுதியவை

ட்ராக் பட்டியல்
இல்லை. தலைப்பு பாடகர்(கள்) நீளம்
1. "பாலபத்ரா" தேவா 3:39
2. "நான் காலி" சீன் ரோல்டன், கல்யாணி நாயர் 4:30
3. "சில் மக்கா" பிரதீப் குமார் 4:14
4. "போ" சீன் ரோல்டன் 3:07
5. "அன்பர்க்கும்" எம். லலிதா சுதா 2:13
6. "அருகாணி அங்கம்மா" மீனாட்சி இளையராஜா 2:34
7. "நான் காலி மறுபதிப்பு" சீன் ரோல்டன் 1:03
முழு நீளம்: 21:23

குறிப்புகள் தொகு

 1. "Good Night (Original Motion Picture Soundtrack)" (in ஆங்கிலம்). 12 May 2023. Archived from the original on 28 May 2023. பார்க்கப்பட்ட நாள் 28 May 2023.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்_நைட்_(2023_திரைப்படம்)&oldid=3869541" இலிருந்து மீள்விக்கப்பட்டது