குத்துக்கல்வலசை


குத்துக்கல்வலசை (Kuthukalvalasai) இந்தியாவின் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமமாகும்.[4][5] குத்துக்கல்வலசை கிராமம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது. குற்றாலம் அருவிகள் இக்கிராமத்தின் அருகாமையில் உள்ளதால் இது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு நகரமாக தென்காசி அமைந்துள்ளது. இவ்வூர் பருவ மழைத் தூறலுக்குப் பெயர் போனது. மக்கள் இதை சாரல் மழை என்றும் அழைப்பதுண்டு.

குத்துக்கல்வலசை
—  கிராமம்  —
குத்துக்கல்வலசை
இருப்பிடம்: குத்துக்கல்வலசை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°58′N 77°18′E / 8.97°N 77.3°E / 8.97; 77.3
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

புவியியல் தொகு

இவ்வூரின் அமைவிடம் 8°58′N 77°18′E / 8.97°N 77.3°E / 8.97; 77.3 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 மீட்டர் (469 அடி) உயரத்தில் இருக்கின்றது.

தென்காசி புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் இங்கு (மதுரை ரோட்டில்) அமைந்துள்ளது. இவ்வலுவலகம் 2013 வருடம் முதல்வர் ஜெயலலிதா துவங்கி வைத்தார்.

கல்வி நிறுவனங்கள் தொகு

கல்லூரிகள் தொகு

  • செயின்ட் மேரி கல்லூரி.

பள்ளிகள் தொகு

  • ஆர்.சி.தொடக்க பள்ளி
  • ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் பள்ளி.
  • ஆக்‌ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி.

வங்கிகள் தொகு

  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, குத்துக்கல் வலசை
  • தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, குத்துக்கல் வலசை

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள் தொகு

  • குத்துக்கல் - குத்துக்கல்வலசை (தென்காசியிலிருந்து திருமலைக் கோவில் செல்லும் சாலையில் உள்ளது).
  • உலக அம்மன் கோவில் (தென்காசி).
  • குற்றாலம் அருவி மற்றும் மலை பகுதிகள்.
  • மௌன சாமி மடம் (குற்றாலம்).
  • திருமலைக் கோவில்.
  • குண்டாறு நீர்த் தேக்கம் (செங்கோட்டை).
  • அடவிநயினார் நீர்த்தேக்கம் (மேக்கரை).
  • அச்சங்கோவில் (கேரள மாநிலம்).
  • ஆரியங்காவு (கேரள மாநிலம்).

கோயில்கள் தொகு

அருள்மிகு சைவகாளியம்மன் கோவில் குத்துக்கல்வலசை

அருகே இருக்கும் கிராமங்கள் தொகு

  • அய்யாபுரம்.
  • கனக்கபிள்ளைவலசை.
  • இலத்தூர்.
  • வேதம்புதூர்
  • இலஞ்சி உட்பட பல கிராமம் உள்ளன.

பகுதிகள் தொகு

  • அண்ணா நகர் (மதுரை ரோடு).
  • மௌன சாமி நகர் (ஆர் டி ஓ அலுவலகம் கிழக்கு)
  • காமராஜ் நகர் (மதுரை ரோடு)
  • பாரதி நகர் (குற்றாலம் ரோடு)
  • திரு நகர் (குற்றாலம் ரோடு)
  • சிவந்தி நகர் (தென்காசி ரோடு).
  • கே ஆர் காலனி (தென்காசி ரோடு)
  • கௌரி நகர்

போக்குவரத்து தொகு

தொடருந்துகள் தொகு

பேருந்துகள் தொகு

இங்கிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், அம்பாசமுத்திரம், பாபநாசம், செங்கோட்டை, சங்கரங்கோவில், கோவில்பட்டி, இராஜபாளையம், மதுரை, தேனி, குமுளி, விருதுநகர், திருப்பூர், சென்னை, கோயம்புத்தூர் எனத் தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், கேரள மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கும், பெங்களூரு, திருப்பதி, பாண்டிச்சேரி போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் பேருந்து வசதி உள்ளது.

வானூர்தி தொகு

இவ்வூருக்கு அருகிலுள்ள விமான நிலையங்கள்:

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-03-18.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-07. பார்க்கப்பட்ட நாள் 2014-03-18.
  6. "Tenkasi". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குத்துக்கல்வலசை&oldid=3847222" இலிருந்து மீள்விக்கப்பட்டது