குந்தியா ஆறு

குந்தியா ஆறு (Gundia River) தென்னிந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலத்தில் நேத்ராவதி ஆற்றின் இரண்டாவது துணை ஆறாகும். இந்த ஆறு மற்றும் இதன் கிளை ஓடைகளின் குறுக்கே நீர்மின் திட்டம் அமைக்கக் கர்நாடக அரசு முன்வைத்துள்ள திட்டம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் சர்ச்சையையும் எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது.

வடிநிலம்

தொகு

குந்தியா ஆறு குமாரதாரா ஆற்றின் துணை ஆறாகும், இது நேத்ராவதி ஆற்றில் இணைகிறது. குந்தியா ஆற்றின் பிரதான நீரோடைகளில் யெட்டினகோல், கெரிகோல், ஹொங்கடஅல்லா மற்றும் பெட்டகும்ப்ரி கால்வாய்கள் மற்றும் ஆற்றுப் படுகை தெற்கு கன்னட மாவட்டம் மற்றும் ஹாசன் மாவட்டங்களைச் சுற்றியுள்ளன.[1][2]

பல்லுயிர் வளம்

தொகு

குந்தியா ஆற்றுப் படுகை மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். இப்பகுதி பல்லுயிர் செழுமையிடமாக உள்ளது. வெப்பமண்டல பசுமைமாறா மற்றும் பகுதி பசுமையான காடுகள், இலையுதிர் காடுகள், புதர்க்காடுகள், புல்வெளிகள் மற்றும் கரையோர தாவரங்கள் உட்பட பல தாவர வகைகள் காணப்படுகின்றன. இவற்றில் 119 மர வகைகள் உட்பட 239 தாவர சிற்றினங்கள் இப்பகுதியில் உள்ளன. காகினஹாரா மற்றும் கெம்பஹோல் காப்புக்காடுகள் குந்தியா படுகையில் உள்ளன.[3][4]

பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கம் மற்றும் பன்னாட்டுப் பறவைகள் பாதுகாப்பு வலையமைப்பின்படி கெம்பகோல் பகுதி இந்தியாவின் முக்கியமான பறவைகள் வாழும் பகுதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[4] குந்தியா படுகையில் காணப்படும் சில அரிய மற்றும் அகணிய உயிரிகளில் திருவாங்கூர் பறக்கும் அணில், மலபார் வெள்ளை கறுப்பு இருவாச்சி, சோலைமந்தி, தேவாங்கு மற்றும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவாகப் பெயரிடப்பட்ட அருகிய தவளை இனமான இந்திரானா குந்தியா ஆகியவை அடங்கும். இத்தவளை இங்கு மட்டுமே காணப்படுகிறது[4][5] மைசூர் யானைகள் காப்பகத்துடன் பிஸ்லே காப்புக் காடுகளை இணைக்கும் யானை வழித்தடத்தின் ஒரு பகுதியாகவும் புலிகள் காணப்படும் பகுதியாகவும் இது உள்ளது.[3]

குந்தியா நீர்மின் திட்டம்

தொகு

குந்தியா நீர்மின் திட்டம் கர்நாடகா மின் கழகம் மூலம் கட்டப்பட உள்ளது. இரண்டு கட்டங்களில் 400 மெகாவாட் நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நோக்கமாக இத்திட்டம் கொண்டுள்ளது. மின்சார உற்பத்தி மட்டுமின்றி, தும்கூர், கோலார், சிக்பள்ளாப்பூர் மற்றும் பெங்களூரு ஊரக மாவட்டங்களுக்கு நீர்ப்பாசனத்திற்காகத் தண்ணீரைத் திருப்பிவிடவும் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.[6] இருப்பினும், இந்த திட்ட முன்மொழிவு உள்ளூர் விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமிருந்து எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதவ் காட்கில் தலைமையிலான மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு இந்த திட்டத்தை விலக்கிக்கொள்ள பரிந்துரைத்தது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Expert panel against Gundia project". INTACH. Archived from the original on 26 December 2013. பார்க்கப்பட்ட நாள் 25 December 2013.
  2. Dudani, Sumesh (December 2010). "BIODIVERSITY, ECOLOGY AND SOCIO-ECONOMIC ASPECTS OF GUNDIA RIVER BASIN". Lake 2010: Wetlands, Biodiversity and Climate Change. https://www.academia.edu/1434374/BIODIVERSITY_ECOLOGY_AND_SOCIO-ECONOMIC_ASPECTS_OF_GUNDIA_RIVER_BASIN?login=&email_was_taken=true. பார்த்த நாள்: 25 December 2013. 
  3. 3.0 3.1 "Biodiversity, Ecology and Socio-Economic Aspects of Gundia River Basin in the context of proposed Mega Hydro Electric Power Project". பார்க்கப்பட்ட நாள் 25 December 2013.
  4. 4.0 4.1 4.2 "Criticism rising on Karnataka's Gundia project". India Together. 25 December 2009. http://www.indiatogether.org/2009/dec/env-gundia.htm. பார்த்த நாள்: 25 December 2013. 
  5. "Hydel project across Gundia river finds no favour with expert panel". DNA. 16 September 2010. http://www.dnaindia.com/bangalore/report-hydel-project-across-gundia-river-finds-no-favour-with-expert-panel-1438691. பார்த்த நாள்: 25 December 2013. 
  6. "Another Dam Threat To The Western Ghats". Tehelka. 2 November 2011 இம் மூலத்தில் இருந்து 30 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131030083139/http://www.tehelka.com/another-dam-threat-to-the-western-ghats/. பார்த்த நாள்: 25 December 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குந்தியா_ஆறு&oldid=3641234" இலிருந்து மீள்விக்கப்பட்டது