கும்மட்டிகளி

கும்மட்டிகளி (Kummattikali) என்பது தென்னிந்திய மாநிலமன கேரளாவின் பிரபலமான வண்ணமயமான முகமூடி-நடனம் ஆகும். இது திருச்சூர் மாவட்டம், பாலக்காடு மாவட்டம், வயநாடு மாவட்டம், தெற்கு மலபாரின் சில பகுதிகளில் பரவலாக உள்ளது. ஓணம் பண்டிகையின் போது, கும்மட்டிகளி கலைஞர்கள் வீடு வீடாகச் சென்று சிறிய பரிசுகளை சேகரித்து மக்களை மகிழ்விக்கிறார்கள். இவ்வகை நடனங்கள் திருச்சூர் மாவட்டத்தில் ஓணத்தின் போது பரவலாக நிகழ்த்தப்படுகிறது. [1] இங்கு மட்டும் 60க்கும் மேற்பட்ட கும்மட்டிகளி அணிகள் உள்ளன. கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பத்ரகாளி கோயிலில் கும்மட்டிகளியின் அழகிய அல்லது அசல் வடிவத்தைக் காணலாம். [2]

வீடு வீடாகச் செல்லும் கும்மட்டிகளி கலைஞர்கள், திருச்சூர் .

உடைகள்

தொகு

கும்மட்டிகளியின் உடைகள் என்பது மிகவும் சுவாரசியமானதாகும். [3] கிருட்டிணன், பத்ரகாளி, நாரதர், அனுமன், கிராதன், தாரிகன், அல்லது வேட்டைக்காரர்களின் முகங்களை சித்தரிக்கும் வண்ணமயமான மர முகமூடியை நடனக் கலைஞர்கள் அணிந்து கொள்கின்றனர். இந்த முகமூடிகள் பொதுவாக சப்ரோஃபைட், பலா மரம், ஏகாளி மரம், பிளம் மரம் அல்லது பவள மரத்தால் ஆனவை. [4]

நடனக் கலைஞர்கள் வண்ணம் பூசப்பட்ட புல்லிலிருந்து நெய்த பாவாடைகளை அணிவார்கள். சிலர் தங்கள் முழு உடலையும் புல் கொத்துகளால் மூடி மறைத்துக் கொள்கிறார்கள். இந்த ஆடைகள் மருத்துவ குணங்கள் கொண்டதாக அறியப்படும் 'கும்மட்டி புல்லு' என்ற சிறப்பு புல்லிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. முகமூடியுடன் வெளிப்புறமாக இணைக்கப்பட்ட 'தல்லா' பல் இல்லாத திறந்த வாயின் தோற்றத்தை அளிக்கிறது. நடனக் கலைஞர்கள் 'கும்மட்டிகளி' என்று அழைக்கப்படும் மீதமுள்ள விவசாய விளைபொருட்களின் நீண்ட குச்சிகளைப் பிடித்து கையாளுகின்றனர். இதிலிருந்தே நடனம் அதன் பெயரைப் பெற்றது. அவர்களின் நடனம் சைவ புராணங்களுடன் தொடர்புடையது. இந்த புராணத்தின் படி, 'தம்மா' என்ற ஒரு வயதான பெண் ஒரு குச்சியின் உதவியுடன் நடந்து செல்கிறாள், இந்த பெண் ஒவ்வொரு உயிரினத்தின் 'தாய்' என்ற அடையாளத்தைக் குறிக்கிறது.

கும்மட்டிகளி நடனக் கலைஞர்கள் வீடு வீடாகச் செல்லும்போது வெல்லம், அரிசி அல்லது சிறிய அளவு பணத்தை சேகரிக்கிறார்கள். பார்வையாளர்கள், குறிப்பாக குழந்தைகள் இவர்களின் நடிப்பில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள்.

செயல்திறன்

தொகு
 
பத்மநாபசுவாமி ஓவியத்தாலும் (மேலே), கிருஷ்ணலீலா (கீழே) ஓவியத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் ஒனவில்லு

வில் போன்ற கருவியை ஒத்த ஒனவில் எனப்படும் கருவியின் நரம்பை மீட்கச் செய்வதன் மூலம் நடனத்திற்கான இசையை வழங்குகிறார்கள். இவ்வகையான வில்லுவைத் தயாரிக்க பாக்கு மரம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், நரம்புகளை ஒரு சிறிய மூங்கில் குச்சியின் மூலம் இசைக்கிறார்கள். [5]

இது ஒரு பழங்கால நாடக கலை / நடன வடிவம் என்பதால் கும்மட்டிகளியின் கருப்பொருள்கள் பெரும்பாலும் இராமாயணம், தாரிகாசுர வதம், சிவனின் கதை, மஞ்சன் நாயரே பாட்டு போன்ற நாட்டுப்புறக் கதைகளிலிருந்து எடுக்கப்படுகிறது. மகாபலி சக்கரவர்த்தியின் வருடாந்திர வருகை ஓணம் எனப்படும் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வடக்குநாதன் கோவிலில் உள்ள சிவபெருமான், தனது பூதகணங்களை கேரளாவுக்கு வருகை தரும் மகாபலியை கௌரவிப்பதற்காக ஒரு நடனத்தை செய்யுமாறு கேட்டுக் கொண்டார் என்பது புராணக்கதை. ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் கலை வடிவத்தை அரங்கேற்ற ஒரு குறிப்பிட்ட நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. [6]

கேரள நாட்டுப்புறக் கலையை சடங்கு மற்றும் சடங்கு அல்லாத இரண்டு பரந்த பிரிவுகளாக வகைப்படுத்தலாம் சடங்குகளை மேலும் பிரிக்கலாம் - பக்தி, ஒரு குறிப்பிட்ட கடவுள் மற்றும் தெய்வம் மற்றும் மந்திர கலை வடிவங்களைப் பிரியப்படுத்துவதற்காக நிகழ்த்தப்படுகிறது. தெய்யம், திர, பூதம் மற்றும் திர, கன்னியர்களி, கும்மட்டிகளி, முதலியன பக்தி கலை வடிவங்களாக உள்ளன.

குறிப்புகள்

தொகு
  1. https://wannabemaven.com/wp-content/uploads/2019/09/chasing-Onam-AirAsia.pdf
  2. "Onam Festival: Kummattikali". Archived from the original on 2021-02-09. பார்க்கப்பட்ட நாள் 2021-02-20.
  3. Kummattikali Video
  4. "News Article: Kummattikali dancers add shimmer to Onam festivities". Archived from the original on 2018-09-30. பார்க்கப்பட்ட நாள் 2021-02-20.
  5. India Travel Times: Kummattikali, the Kerala folk dance by Juhan Samuel
  6. https://m.dailyhunt.in/news/india/english/east+coast+daily+eng-epaper-eeastco/kummattikali+the+colourful+mask+dance+seen+during+onam+in+thrissur-newsid-72780700
"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்மட்டிகளி&oldid=3707697" இலிருந்து மீள்விக்கப்பட்டது