குருநானக் கல்லூரி, சென்னை

சென்னையில் உள்ள கலை அறிவியல் கல்லூரி

குருநானக் கல்லூரி (Guru Nanak College, Chennai) என்பது தமிழ்நாட்டின், சென்னை, வேளச்சேரியில் அமைந்துள்ள ஒரு கலைக் கல்லூரி ஆகும். சீக்கியர்களின் வழிகாட்டியான குரு நானக் தேவ் அவர்களின் 500வது பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் குருநானக் கல்லூரி 1971 ஆம் ஆண்டில் குரு நானக் கல்விச் சங்கத்தின் ஒரு பிரிவாக நிறுவப்பட்டது. இக்கல்லூரியானது சிறுபான்மை சமூகக் கல்லூரியாக நடத்தப்பட்டு வருகிறது. [1]இதன் ஆடுகளத்தை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் பராமரித்து வருகிறது.

குருநானக் கல்லூரி
குறிக்கோளுரைPro Bono Publico
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
"For the benefit of all"
வகைPublic
உருவாக்கம்1971
நிறுவுனர்Lt.Col.G.S Gill
முதல்வர்முனைவர் எம். ஜி. இரகுநாதன்
அமைவிடம்வேளச்சேரி சாலை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்Urban
சேர்ப்புசென்னைப் பல்கலைக்கழகம் என்ஏஏசி ஏ தகுதி
இணையதளம்http://gurunanakcollege.edu.in/

வரலாறுதொகு

1971ம் ஆண்டு தமிழக அரசால் சென்னை வேளச்சேரி - தாம்பரம் சாலையில் இலவசமாக வழங்கப்பட்ட 20 ஏக்கர் பரப்பளவு இடத்தில் லெப்டினன்ட் கர்னல் ஜிஎஸ் இதில் அவர்களின் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டது இந்த குருநானக் கல்லூரி ஆகும் ஆகும். உலகளாவிய சகோதரத்துவம், சமூகங்களுக்கு இடையேயான வேற்றுமையை கலைதல் கலைதல் வேற்றுமையை கலைதல் கலைதல் மற்றும் அனைத்து சமூகங்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபடுதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்தது முதல் அரசாங்க சட்டத்தின்படி இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது அதுபோக பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.1970ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாதம் தமிழ் நாட்டின் அப்போதைய கவர்னராக இருந்த சர்தார் உஜ்ஜல் சிங் அவர்களால் அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் முன்னிலையில் அடித்தளம் இடப்பட்டது.சென்னை பல்கலைக்கழகத்தில் இயைவு பெற்ற இந்த கல்லூரியில் ஆரம்பத்தில் பல்கலைக்கழக புதுமுக பாடப்பிரிவுகள் 6ம் இளங்கலை பிரிவில் கணிதம், வேதியியல் மற்றும் பொருளாதாரம் என மூன்று பாடங்களும் நடத்த அனுமதியளிக்கப்பட்டது. அதன்படி 1971ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் முறைப்படி அப்போதைய தமிழக கவர்னர் உயர்திரு கே.கே.ஷா அவர்களால் அப்போதைய தமிழக கல்வித்துறை அமைச்சர் முனைவர் நெடுஞ்செழியன் அவர்கள் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு ஜூலை மேலும் மூன்று இளங்கலை படிப்புகள் படிப்புகள் (ஆங்கிலம், உயிரியல் மற்றும் வர்த்தகம்) ஆரம்பிக்கப்பட்டது. மேலும் கல்லூரி வளாகத்தில் குருத்துவாரா ஆரம்பிக்கப்பட்டது1973 ஏப்ரல் மாதத்தில் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சர்தார் குர்நாம் சிங் அவர்களால் கல்லூரி விடுதி அறையும் உணவு கூடமும் திறந்துவைக்கப்பட்டது அதே ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதைய பஞ்சாப் முதல்வர் கியானி செயில் சிங் (பிற்காலத்தில் இந்தியாவின் ஜனாதிபதி ஆனவர்) அவர்களால் குருநானக் பவன் என்ற பெயரில் கல்லூரிக்கான மன்றம் அடித்தளம் இடப்பட்டது.1974-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தேசிய மாணவர் படையில் வான் படை முகாமும் 1975 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தேசிய மாணவர் படை முகாமும் ஆரம்பிக்கப்பட்டது.1978 கல்வியாண்டு முதல் பல்கலைக்கழக புகுமுக வகுப்புகள் நிறுத்தப்பட்டது. மேலும் தேசிய மாணவர் படை ஆரம்பிக்கப்பட்டது.1980 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் குருநானக் கல்லூரியில் வர்த்தகப் பிரிவில் முதுகலை பாட திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.1981 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பொருளாதார பிரிவில் முதுகலை பட்டம் பட்டம் ஆரம்பிக்கப்பட்டது அதே ஆண்டு சுயநிதிப் பிரிவில் மாலை கல்லூரி தொடங்கப்பட்டது.அதைத்தொடர்ந்து வருடாவருடம் நிறுவனங்களின் செயலாளர், இயற்பியல், தாவரவியல் போன்ற பாடப்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டது.1985-ஆம் ஆண்டு கல்வி ஆண்டு ஆண்டு முதல் முனைவர் பட்ட பிரிவுகள் வர்த்தகப் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 1986ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதியில் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதியில் வேதியியல் பாடப்பிரிவில் முதுகலைப் படிப்பு தொடங்கப்பட்டது. இது அக்கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்ட மூன்றாவது முதுகலை பாடத்திட்ட பிரிவாகும்.1993 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து அதுவரை ஆண்கள் கல்லூரியாக இருந்த இந்த குருநானக் அதுவரை ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து அதுவரை ஆண்கள் கல்லூரியாக இருந்த இந்த குருநானக் அதுவரை ஆண்கள் கல்லூரியாக இருந்த இந்த குருநானக் கல்லூரி மாணவிகளையும் சேர்த்து இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்டது.2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த கல்லூரி கல்லூரி ஐஎஸ்ஓ 9001:2000 தர மேலாண்மைச் சான்றிதழை பெற்றது. மேலும் மேலாண்மை பாடப்பிரிவுகள் கல்லூரி பாடத்திட்டத்தில் கல்லூரி பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டது.2011ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இரண்டு நேரங்களில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது. காலை 08.30 மணி முதல் மதியம் 1.40 வரை அரசு உதவி பெறும் கல்விப்பிரிவுகளும் அதன் பின்பு மதியம் 1.45 முதல் இரவு 7.00 மணி வரை சுயநிதி பாடப்பிரிவுகளும் இயங்கிவருகிறது.2013ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த குருநானக் கல்லூரி, தன்னாட்சி கல்லூரிகளுக்கான தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் ஏ சான்றிதழை பெற்றது. 2015 ஆம் ஆண்டு மே மாதம் இந்த கல்லூரி தன்னாட்சி அந்தஸ்தை அடைந்தது. மேலும் பல புதிய பாடத்திட்டங்கள் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறாக ஒவ்வொரு வருடத்திலும் பல புதிய பாடப்பிரிவுகள் கலை, அறிவியல் மற்றும் பொருளாதாரப் பிரிவுகளில் அறிமுகப்படுத்தி வருகிறது. [2]

வழங்கப்படும் படிப்புகள்தொகு

இக்கல்லூரியானது இரு வேலை நேரங்களில் இயக்கப்படுகிறது.

 • இ.க - ஆங்கிலம், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் மூலோபாய படிப்பு
 • இளம் அறிவியல் - கணிதம், இயற்பியல், வேதியியல், தாவர உயிரியல் மற்றும் தாவர உயிரி தொழில்நுட்பம், மேம்பட்ட விலங்கியல் மற்றும் உயிர்த்தொழில்நுட்பம், கணினி அறிவியல், காட்சித் தொடர்பியல்.
 • இளம் அறிவியல் - 6 சிறப்பு பாடப்பிரிவுகளாக
 • இளம் அறிவியல் (ஹான்ஸ்)
 • இளம் வணிக நிர்வாகம்
 • இளம் கணிணி பயன்பாடு
 • முதுகலை - பொருளாதாரம்
 • முதுகலை அறிவியல் - வேதியியல், கணிதம், விலங்கியல்
 • முதுகலை வணிகவியல்
 • எம்சிஏ
 • முதுகலை வணிக நிர்வாகம்

எம்.எஸ்.டபிள்யூ சமூக பணி

 • ஆய்வியல் நிறைஞர் - பொருளாதாரம், விலங்கியல்
 • முனைவர் - பொருளாதாரம், பாதுகாப்பு ஆய்வுகள், வர்த்தகம், விலங்கியல், தாவரவியல்

இவ்வாறு மொத்தம் 58 பாடப்பிரிவுகள் இக்கல்லூரியில் கற்பிக்கப்படுகிறது.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்தொகு

இந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் பலர் பல்வேறு கல்வி நிலையங்களில் முனைவர்களாக, பேராசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இந்திய ஆட்சிப் பணி, வங்கித்துறை, இந்திய கப்பற்படை, விமானப்படை போன்றவற்றிலும் பணிபுரிந்து வருகின்றனர்.[3]

மேலும் காண்கதொகு

குறிப்புகள்தொகு

 1. gurunanakcollege.edu.in/introduction
 2. gurunanakcollege.edu.in/milestones
 3. gurunanakcollege.edu.in/alumni

வெளி இணைப்புகள்தொகு

 • "Gurunanak College". gurunanakcollege.edu.in/. 2019-02-27 அன்று பார்க்கப்பட்டது.