குல்மோகர் பூங்கா

இந்தியாவின் தில்லியில் உள்ள சுற்றுப்புற நகரம்

குல்மோகர் பூங்கா (Gulmohar Park) இந்தியாவின் தெற்கு தில்லியில் உள்ள ஒரு சுற்றுப்புற நகரப் பகுதியாகும். இந்த பூங்கா அவுசு காசு மற்றும் கௌதம் நகர் இடையே அமைந்துள்ளது. சிவப்பு-பூக்கள் கொண்ட குல்மோகர் மரங்கள் அதிகம் இங்கு காணப்படுவதால் குல்மோகர் பூங்கா என்று பெயரிடப்பட்டது. அருகிலுள்ள குடியிருப்பு காலனியும் குல்மோக பூங்கா பத்திரிகையாளர் குட்ட்டியிருப்பு அல்லது சுருக்கமாக குல்மோக பூங்கா என்று அழைக்கப்படுகிறது. மேலும் இப்பகுதி 1970 ஆம் ஆண்டுகளில் பத்திரிகையாளர்கள் குழுவால் நிறுவப்பட்டது. இன்று உயர்மட்ட வணிகர்கள், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சினிமா நட்சத்திரம் அமிதாப் பச்சன் போன்றவர்கள் வசிக்கும் முக்கியப் பகுதியாக வளர்ந்துள்ளது.[1] [2]

குல்மோகர் பூங்கா
Gulmohar Park
தில்லியின் சுற்றுப்புற நகரம்
குல்மோகர் பூங்கா Gulmohar Park is located in டெல்லி
குல்மோகர் பூங்கா Gulmohar Park
குல்மோகர் பூங்கா
Gulmohar Park
இந்தியா, தில்லியில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 28°33′36″N 77°12′44″E / 28.559873°N 77.212158°E / 28.559873; 77.212158
Country இந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்தெற்கு தில்லி மாவட்டம்
பெருநகரம்புது தில்லி
மொழிகள்
 • அலுவல்பூர்வம்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அ.கு.எண்
திட்டமிடல் முகமைதில்லி மாநகராட்சி

குல்மோகர் பூங்காவைச் சுற்றி தெற்கே பல்பீர் சக்சேனா சாலை மற்றும் அவுசு காசு , மேற்கில் யூசுப் சாராய், குல்மோகர் உயர்ரக சுற்றுப்புறம் மற்றும் கவுதம் நகர், வடக்கே நீதி பாக் மற்றும் கிழக்கில் ஆகத்து கிராந்தி சாலை மற்றும் சிரி கோட்டை ஆகியவை உள்ளன.

43 ஏக்கர்கள் (170,000 m2) பரப்பளவு கொண்ட இப்பகுதியில் உள்ளே 13 பூங்காக்கள் உள்ளன. இது நான்கு தொகுதிகளாக (ஏ, பி, சி, டி) பிரிக்கப்பட்டுள்ளது. மற்றும் டி.டி.ஏ. சந்தை மற்றும் குடியிருப்பாளர்களின் மன்றமான குல்மோகர் மன்றம் ஆகியவை இங்குள்ளன. காலனியின் உள்ளே இராணுவக் குடியிருப்பின் ஒரு பகுதியான காவல் நிலையம் உள்ளது.

ஆர்வமூட்டும் பகுதிகள்

தொகு

சிரி கோட்டை அரங்கம், சிரி கோட்டை விளையாட்டு வளாகம், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், தேசிய அழகுநய தொழினுட்ப நிறுவனம், அட்கோ பிளேசு மற்றும் யூசுப் சாராய் சமூக மையம் ஆகியவை குல்மோர் பூங்காவிற்கு அருகிலுள்ள முக்கிய அடையாளங்களாகும்.

அணுகல்

தொகு

இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம் (முனையம் 1 - உள்நாடு) குல்மோகர் பூங்காவிலிருந்து 12.9 கி.மீ. இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம் (முனையம் 2 - பன்னாடு) குல்மோகர் பூங்காவிலிருந்து 19.87 கி.மீ. அசுரத் நிசாமுதீன் இரயில் நிலையம் குல்மோகர் பூங்காவிலிருந்து 9.98 கி.மீ

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.tribuneindia.com/2001/20011120/ncr1.htm#6
  2. "Gulmohar Park PinCode Delhi". citypincode.in. பார்க்கப்பட்ட நாள் 2014-03-09.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்மோகர்_பூங்கா&oldid=3319278" இலிருந்து மீள்விக்கப்பட்டது