கெடா மலாய் மொழி
கெடா மலாய் மொழி (ஆங்கிலம்: Kedah Malay; மலாய்: Bahasa Melayu Kedah; ஜாவி: بهاس ملايو قدح ; தாய் மொழி: ภาษามลายูไทรบุรี; கெடா மலாய்: Pelat Utagha; Phasa Malāyū Saiburī) என்பது ஆஸ்திரனேசிய மொழிக் குடும்பத்தின் மலாய-பொலினீசிய மொழிகள் துணைக் குடும்பத்தைச் சார்ந்த ஒரு மொழியாகும்.
கெடா மலாய் மொழி Kedah Malay Bahasa Melayu Kedah | |
---|---|
بهاس ملايو قدح ภาษามลายูไทรบุรี | |
Pelat Utagha Bahasa Melayu Kedah, Bahasa Melayu Utara | |
நாடு(கள்) | மலேசியா தாய்லாந்து மியான்மர் இந்தோனேசியா |
பிராந்தியம் | கெடா பினாங்கு, பெர்லிஸ், பேராக் (கிரியான், மஞ்சோங், லாருட், மாத்தாங், செலாமா) தாய்லாந்து திராங், சத்துன், ரானோங், தனிந்தாரி, லங்காட் மாநிலம் அச்சே |
இனம் | கெடா மலாய் மக்கள் தாய்லாந்து மலாய் மக்கள் பர்மிய மலாய் மக்கள் சாரிங் அலுசு மலாய் மக்கள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 2.6 மில்லியன் (2004)[1] |
ஆஸ்திரோனீசிய
| |
பேச்சு வழக்கு | கெடா வட்டாரம்
வடக்கு கெடா
பெர்லிஸ் லங்காவி
பினாங்கு
வடக்கு பேராக்
சத்துன்
Jaring Halus
|
இலத்தீன் எழுத்துகள், அராபிய எழுத்துகள், தாய்லாந்து எழுத்துகள் | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | meo |
மொழிக் குறிப்பு | keda1251[2] |
மலேசியாவில் கெடா. பினாங்கு, பெர்லிஸ் மாநிலங்கள்; பேராக் மாநிலத்தின் கிரியான் மாவட்டம், மஞ்சோங் மாவட்டம், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம்; தாய்லாந்து நாட்டின் திராங், சத்துன், ரானோங், தனிந்தாரி, லங்காட் மாநிலம்; இந்தோனேசியாவின் அச்சே மாநிலம் போன்ற இடங்களில் இந்த மொழி பரவலாகப் பேசப்படுகிறது.
பொது
தொகுவரலாற்று அடிப்படையில், தாய் மொழியின் தாக்கத்தினால் கெடா மலாய் மொழியின் பயன்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டன. அதற்கு முன்பு, தென்மேற்கு தாய்லாந்தில், கெடா மலாய் மொழியின் பயன்பாடு மிகவும் பரவலாக இருந்தது. தாய்லாந்து மொழியின் கலப்பு இல்லமல் கெடா மலாய் மொழி பயன்படுத்தப்பட்டது.
மியான்மரில் உள்ள கவ்தாங் மாவட்டத்தில் கெடா மலாய் மொழியின் பயன்பாட்டை இன்றும் காணலாம். தென்மேற்கு தாய்லாந்தில் ரானோங் மற்றும் கிராபி; இந்தோனேசியா சுமத்திராவில் ஜாரிங் ஆலஸ், லங்காட், அச்சே மற்றும் பாங்காக்கிற்கு வடக்கே உள்ள மத்திய தாய்லாந்து பகுதிகளில், கெடா மலாய் மொழி பேசுபவர்களில் பெரும்பாலோர் கெடாவிலிருந்து புலம்பெயர்ந்த குடியேறிகளின் வழித்தோன்றல்கள் ஆகும்.[3]
வரலாறு
தொகுதீபகற்ப மலேசியாவில், வடக்குப் பகுதியின் பேச்சுவழக்கைப் பொருத்த வரையில், கெடா மலாய் மொழியை, பல கிளைமொழிகளாகப் பிரிக்கலாம். ஓர் இடத்தில் பயன்படுத்தப்படும் கெடா மலாய் மொழி மற்றோர் இடத்தில் சற்றே மாறுபட்டுக் காண்கிறது.[4]
- கெடா பெர்சிசிரான் பேச்சுவழக்கு - (Kedah Persisiran)
- கெடா உத்தரா பேச்சுவழக்கு - (Kedah Utara)
- திராங் சத்துன் பேச்சுவழக்கு - (Kedah Thai)
- கெடா பாலிங் பேச்சுவழக்கு - (Kedah Malay)
தாய்லாந்து திராங், சத்துன் பகுதிகளில் பயன்படுத்தப்படும் கெடா மலாய் மொழி, தாய்லாந்து மொழியால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், கெடா பாலிங் மாவட்டத்தில் உள்ள மலேசிய மக்கள்; கெடா மலாய் மொழியைச் சற்றே மாறுபட்ட நிலையில் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் பயன்பாட்டில் மற்றொரு வட்டார மலாய் மொழியான கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழியின் தாக்கங்கள் உள்ளன.[5]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ கெடா மலாய் மொழி
Kedah Malay
Bahasa Melayu Kedah at Ethnologue (18th ed., 2015) - ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Kedah Malay". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ Asmah Haji Omar 2017, ப. 38.
- ↑ Mohd Noor Aswad 2019.
- ↑ Yunisrina Qismullah Yusuf et al. 2021, ப. 68–69.
மேலும் படிக்க
தொகு- Hendon, Rufus S. (1966). The Phonology and Morphology of Ulu Muar Malay: (Kuala Pilah District, Negri Sembilan, Malaya). Yale University Publications in Anthropology, 70. New Haven: Dept. of Anthropology, Yale University.
நூல்கள்
தொகு- Yunisrina Qismullah Yusuf; Stefanie Pillai; W. A. Wan Aslynn; Roshidah binti Hassan (2021). "Vowel Production in Standard Malay and Kedah Malay Spoken in Malaysia". Linguistics International Journal 15 (1): 65–93. https://connect.academics.education/index.php/lij/article/view/19.
- Asmah Haji Omar (2017). "Language in Kedah in Late 19th Century-Language Situation in a Malay State in Late 19th Century". Malaysian Journal of Languages and Linguistics 6 (2): 36–47. doi:10.24200/mjll.vol6iss2pp36-47. https://mymla.org/journals/index.php/MJLL/article/view/138.
- Ajid Che Kob (1997). "Word Final Nasal in Malay Dialects". In Odé, Cecilia; Stokhof, Wim (eds.). Proceedings of Seventh International Conference on Austronesian (in ஆங்கிலம்). Amsterdam: Rodopi. pp. 35–43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789042002531.
- Mohd Noor Aswad (2 November 2019). "Getting to know the unique Baling dialect". New Straits Times. https://www.nst.com.my/news/nation/2019/11/535086/getting-know-unique-baling-dialect.
- Strife, Fiq (2 November 2007). "Kamus Dialek Melayu-Kedah" [Kedah Malay Dialect Dictionary]. Dunia Melayu Kedah. பார்க்கப்பட்ட நாள் 22 May 2021.