கெராம்பிட் தொடருந்து நிலையம்

கெராம்பிட் தொடருந்து நிலையம் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kerambit Railway Station மலாய்: Stesen Keretapi Kerambit) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், பகாங், லிப்பிஸ் மாவட்டம், கெராம்பிட் சிறுநகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.[1]

கெராம்பிட்
| Seremban Line கேடிஎம் இண்டர்சிட்டி

Kerambit Railway Station
கெராம்பிட் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்கெராம்பிட், லிப்பிஸ் மாவட்டம், பகாங்  மலேசியா
ஆள்கூறுகள்4°07′02″N 102°11′58″E / 4.11722°N 102.19944°E / 4.11722; 102.19944
உரிமம் மலாயா தொடருந்து
தடங்கள்தீபகற்ப கிழக்குக் கரை வழித்தடம்
நடைமேடை1 பக்க நடைப்பாதை; 1 தீவு மேடை
இருப்புப் பாதைகள்3
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking இலவசம்
துவிச்சக்கர வண்டி வசதிகள் உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
வரலாறு
திறக்கப்பட்டது1914
மின்சாரமயம்இல்லை
சேவைகள்
முந்தைய நிலையம்   கேடிஎம் இண்டர்சிட்டி   அடுத்த நிலையம்
   
லிப்பிஸ்
தும்பாட்
 
 Ekspres Timuran 
கிழக்கு நகரிடை சேவை
 
ஜெராண்டுட்
ஜொகூர்
லிப்பிஸ்
(முனையம்)
 
 Shuttle Timur 
கிழக்கு நகரிடை சேவை
 
மேலா
கிம்மாஸ்
அமைவிடம்
Map
கெராம்பிட் தொடருந்து நிலையம்

உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, இந்த நகரத்தின் பெயர் மலாய் சொற்றொடரான 'கெரா ஆம்பில்' (Kera Ambil) என்பதிலிருந்து பெறப்பட்டது. கெராம்பிட் நகரத்தில் ஏராளமான வாழைத் தோட்டங்கள் இருந்ததாகவும்; அந்தத் தோட்டங்களின் வாழைப் பழங்களை அப்பகுதியில் உள்ள குரங்குகள் தங்கள் விருப்பப்படி பறித்துச் சென்றதாலும்; அந்த இடத்திற்கு அப்பெயர் வந்ததாக அறியப்படுகிறது.[1]

இந்த நிலையம் பகாங் மாநிலத்தின் தலைநகரான குவாந்தான் நகரில் இருந்து சுமார் 263 கி.மீ.;கோலாலம்பூரில் இருந்து 189 கி.மீ.; தொலைவில் உள்ளது.[2]

பொது

தொகு

கெராம்பிட் நிலையம் கிழக்கு நகரிடை சேவையில், கெராம்பிட் மற்றும் அதன் அருகிலுள்ள சிறு சிறு நகரங்களுக்கும் இடையிலான ஒரு தொடர்பு மையமாக விளங்குகிறது. கெராம்பிட் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், அதன் சுற்றுப்புறக் கிராமங்களுக்கும் சேவை செய்கிறது. கெராம்பிட் நகரின் பெயரால் இந்த நிலையத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.[1][3]

கோலா லிப்பிஸ் குவா மூசாங் வழித்தடம்

தொகு

கெராம்பிட் தொடருந்து நிலையம், உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் கெராம்பிட் நகரத்திற்குப் பயணிக்க ஒரு பொதுப் போக்குவரத்துத் தேர்வாகவும் உள்ளது. 1920 முதல் 1960 வரையிலான காலப்பகுதியில் பல கிராமவாசிகளுக்கு தொடருந்துகள் முதன்மையான போக்குவரத்து முறையாக இருந்ததால், கெராம்பிட்டில் உள்ள தொடருந்து நிலையம் மலேசியாவின் சுதந்திரத்திற்கு முன்பே இருந்தே இயங்கி வருகிறது.

தனியார் பேருந்துச் சேவைகளைக் காட்டிலும் பொதுத் தொடருந்துச் சேவைகளைப் பயன்படுத்தவே இங்குள்ள மக்கள் விரும்புகின்றனர். அத்துடன் இந்த நிலையம் கோலா லிப்பிஸ் - குவா மூசாங் வழித்தடத்திற்கான முனையமாகவும் செயல்படுகிறது.

நிலைய வசதிகள்

தொகு
  • தீவு / பக்க மேடைகள்
  • காத்திருப்புப் பகுதி
  • பொது கழிப்பறைகள்
  • வாகன நிறுத்துமிடம்
  • வாடிக்கையாளர் சேவை அலுவலகம்
  • பானங்கள் விற்பனை இயந்திரங்கள்

தொடருந்து சேவைகள்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Kerambit Railway Station is located in Kerambit, a small town in the district of Kuala Lipis within the state of Pahang". www.easybook.com. பார்க்கப்பட்ட நாள் 15 April 2024.
  2. "Kerambit Railway Station". Transport Malaysia. 3 February 2011. பார்க்கப்பட்ட நாள் 15 April 2024.
  3. "Kerambit Railway Station • RailTravel Station". RailTravel Station. பார்க்கப்பட்ட நாள் 15 April 2024.
  4. "Train Schedule KTMB". ktmb.com.my. பார்க்கப்பட்ட நாள் 1 March 2024.

வெளி இணைப்புகள்

தொகு