கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு

இந்திய அரசியல்வாதி
(கே. வி. ரெட்டி நாயுடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு (தெலுங்கு:కూర్మా వేంకటరెడ్డి నాయుడు, ஆங்கிலம்:Kurma Venkata Reddy Naidu, 1875-1942) சென்னை மாகாணத்தின் முந்நாள் பிரதமரும்[1] (முதல்வர்), நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவருமாவார். 1919 இல் நீதிக்கட்சியில் இணைந்த நாயுடு 1920-23 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் வளர்ச்சித் துறை அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் 1929-32 இல் தென்னாப்பிரிக்காவிற்கான பிரித்தானிய முகவராகவும், 1934-37 இல் இந்திய வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். 1936 சென்னை மாகாண ஆளுநர் எர்ஸ்கைன் பிரபு விடுப்பில் சென்ற போது அவருக்குப் பதிலாக தற்காலிக சென்னை ஆளுநராகப் பணியாற்றினார். 1937 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரசு ஆட்சியமைக்க மறுத்ததால் ஏற்பட்ட இழுபறிநிலையின் போது மூன்று மாதங்கள் சென்னை மாகாணத்தின் இடைக்கால அரசின் பிரதமராகப் பதவி வகித்தார். 1940-42 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பணியாற்றினார்.[2][3][4][5][6][7]

சர்
கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு
1940-41 இல் ரெட்டி நாயுடு
சென்னை மாகாணத்தின் பிரதமர்
பதவியில்
ஏப்ரல் 1, 1937 – ஜூலை 14, 1937
ஆளுநர்எர்ஸ்கைன் பிரபு
முன்னையவர்பொபிலி அரசர்
பின்னவர்சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி
சென்ன மாகாண ஆளுநர் (தற்காலிகம்)
பதவியில்
ஜூன் 18, 1936 – அக்டோபர் 1, 1936
பிரதமர்பொபிலி அரசர்,
பி. டி. ராஜன்
இந்திய வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினர்
பதவியில்
1934–1937
தலைமை ஆளுநர்வில்லிங்டன் பிரபு
லின்லித்கோ பிரபு
தென்னாப்பிரிக்காவிற்கான பிரித்தானிய ஏஜன்ட்
பதவியில்
19291932
ஆட்சியாளர்ஐந்தாம் ஜார்ஜ்
தலைமை ஆளுநர்ஹாலிஃபாக்ஸ் பிரபு
வில்லிங்டன் பிரபு
முன்னையவர்வி. எஸ். ஸ்ரீநிவாச சாஸ்திரி
பின்னவர்குன்வர் மகாராஜ் சிங்
வளர்ச்சித் துறை அமைச்சர், சென்னை மாகாணம்
பதவியில்
19201923
பிரதமர்சுப்பராயலு ரெட்டியார்
பனகல் அரசர்
ஆளுநர்வில்லிங்டன் பிரபு
பின்னவர்டி. என். சிவஞானம் பிள்ளை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1875
ஏலூரு , ஆந்திரா , இந்தியா இந்தியா
இறப்பு1942
அரசியல் கட்சிநீதிக்கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. "நடராசன் புகழுடம்பு எய்திய கதை". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-02-01.
  2. "Chief Ministers of Tamil Nadu since 1920". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2008-10-24.
  3. Ramanathan, K. V. (2008). The Satyamurti letters: the Indian freedom struggle through the eyes of a parliamentarian, Volume 1. Pearson Education India. pp. 301–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8131714888, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131714881.
  4. Menon, Visalakshi (2003). From movement to government: the Congress in the United Provinces, 1937-42. Sage. p. 75. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0761996206, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780761996200.
  5. Nagarajan, Krishnaswami (1989). Dr. Rajah Sir Muthiah Chettiar: a biography. Annamalai University. pp. 63–70.
  6. Full text of "Rajah Sir Annamalai Chettiar Commemoration Volume"
  7. Rajaraman, P. (1988). The Justice Party: a historical perspective, 1916-37. Poompozhil Publishers. pp. 206–212. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)

வெளி இணைப்புகள்

தொகு