கைகையவன்சி இராச்சியம்
கைகையவன்சி இராச்சியம் (Kingdom of Haihaiyavansi) என்பது கிழக்கு இந்தியாவில் உள்ள மகாநதியின் மேல் பகுதியில் இருந்த ஒரு பேரரசு ஆகும். இது இன்றைய சத்தீசுகர் மாநிலத்தையும், மேற்கு-மத்திய ஒடிசாவின் மத்திய பகுதியை உள்ளடக்கியிருந்தது. பொ.ச.12 முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை கைகையவன்சிகளால் இந்த இராச்சியம் ஆளப்பட்டது. இவர்கள் திரிபுரியின் காலச்சூரிகளின் ஒரு கிளையினராக இருந்தனர். மேலும் பல ஆண்டுகளாக தாய் வம்சத்தின் அடிமைகளாக ஆட்சி செய்தனர்.
இரத்னபுரியின் காலச்சூரிகள் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
11ஆம் நூற்றாண்டு–12ஆம் நூற்றாண்டு | |||||||||
தலைநகரம் | இரதன்பூர் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | 11ஆம் நூற்றாண்டு | ||||||||
• முடிவு | 12ஆம் நூற்றாண்டு | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
இராச்சியம்
தொகுமேல் நருமதை பள்ளத்தாக்கில் மையமாக இருந்த பத்தாம் நூற்றாண்டு காலச்சூரி அல்லது சேதி நாட்டின் கிழக்கு மாகாணமாக இந்த இராச்சியம் உருவானது. நவீன ஜபல்பூருக்கு அருகிலுள்ள தேவாரை (திரிபுரி) தலைநகராகக் கொண்டு காலச்சூரிகள் ஆட்சி செய்தனர்.[1] பதினொன்றாம் நூற்றாண்டில் இரத்தினபுரி கிளை, மேல் மகாநதிப் படுகையில் குடியேறியது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் அது சுதந்திர அரசானது.[2][3] ஆறு நூற்றாண்டுகளுக்கும் மேலாக மகாநதியின் மேல் பகுதி இரத்தினபுரி காலச்சூரிகளின் வம்சாவளியைச் சேர்ந்த கைகையவன்சி மன்னர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இந்த இராச்சியம் வடக்கு மற்றும் தென்னிந்தியாவிற்கு இடையேயான முக்கிய பாதைகளுக்கு கிழக்கே அமைந்திருந்தது. மேலும் 13-16 ஆம் நூற்றாண்டுகளில் முஸ்லிம் படையெடுப்புகளில் இருந்து தன்னைத் தடுத்துக் கொண்டது. பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு வம்சப் பிளவு இராச்சியத்தை வடக்கு, இரதன்பூரில் உள்ள பழைய கிளைக்கும் தெற்கே இராய்ப்பூரில் உள்ள இளைய கிளைக்கும் இடையில் பிரித்தது.
18-ஆம் நூற்றாண்டின் மராத்தியப் படையெடுப்புகளுடன் இராச்சியம் முடிவுக்கு வந்தது. போன்சலே குலத்தைச் சேர்ந்த மராட்டியர்கள் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெராரில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். மேலும் 1743-இல் அண்டை நாடான கோண்டு இராச்சியமான தியோகரைக் கைப்பற்றினர். போன்சலேயர்கள் நாக்பூரைத் தங்கள் தலைநகராகக் கொண்டு, கிழக்கை கைகையவன்சி இராச்சியமாக விரிவுபடுத்தினர். மேலும் கிழக்கே வங்காளம் மற்றும் ஒடிசாவிற்குள் தாக்குதல் நடத்துவதற்கு ஒரு தளமாகப் பயன்படுத்தினார்கள். இராய்கர் 1741-இல் போன்சலேக்களிடம் வீழ்ந்தது. மேலும் 1744 வாக்கில் மராத்திய அரசின் மீதான கட்டுப்பாடு உறுதியாக நிறுவப்பட்டது.
இதனையும் பார்க்கவும்
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Kalachuri Dynasty". பார்க்கப்பட்ட நாள் 2009-03-31.
- ↑ Om Prakash Misra 2003, ப. 14.
- ↑ Richard Salomon 1996, ப. 154.
- Richard G. Salomon (professor of Asian studies) (1996). "British Museum stone inscription of the Tripurī Kalacuri prince Valleka". Indo-Iranian Journal 39 (2): 133–161. doi:10.1163/000000096790084999.
- .
- .