கொச்சி கடல்வழி மெற்றோ

கொச்சி கடல்வழி மெற்றோ (Kochi Water Metro) என்பது கொச்சி மெற்றோ தொடருந்து நிறுவனத்தால் முன்மொழியப்பட்ட பெருநகர் கொச்சி பிராந்தியத்தின் ஒருங்கிணைந்த படகு தொடருந்து போக்குவரத்து திட்டமாகும்.[2] இது இந்தியாவிலும் தெற்காசியாவிலும் உள்ள முதல் போக்குவரத்து அமைப்பாகும். இது கொச்சியின் 10 தீவுகளைப் பிரதான நிலப்பகுதியான எர்ணாகுளத்துடன் இணைக்கும் திட்டமாகும். இதில் 78 மின்கலன் மூலம் இயக்கப்படும் மின்சார கலப்பின படகுகள் 38 முனையங்கள் மற்றும் 16 வழித்தடங்களில் 76 கிலோமீட்டர்கள் வரை பயணிக்கிறது. போக்குவரத்து அணுகல் குறைவாக உள்ள ஆறுகளின் ஓரத்தில் உள்ள புறநகர்ப் பகுதிகளுக்கு இணைப்புச் சேவையாகவும் இது செயல்படுகிறது. இந்த திட்டம் அக்டோபர் 2019-ல் இறுதி சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றது. இதன் முதல் பாதை வைட்டிலா மற்றும் தகவல் பூங்கா இடையே 2021 பிப்ரவரியில் துவங்கப்பட்டது.[3] 25 ஏப்ரல் 2023 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இதன் முழுப்பயன்பாடு 2035ஆம் ஆண்டுக்குள் முழுமைபெற்று பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தினசரி 1.5 லட்சம் பயணிகள் பயணம் செய்வர்.[4]

கொச்சி கடல்வழி மெற்ரோ
Kochi Water Metro
பொது தகவல்
உள்ளூர்ப் பெயர்കൊച്ചി വാട്ടർ മെട്രോ
உரிமையாளர்கேரள அரசு (74%)
கொச்சி மெற்றோ தொடருந்து நிறுவனம் (26%)
முக்கிய இடங்கள்கொச்சி, கேரளம், இந்தியா
பயண வகைFerry
தடங்களின் எண்ணிக்கை16 (திட்டமிடப்பட்டது)
2 (செயல் பாட்டில்)
தடத்தின் இலக்கம்
நிறுத்தங்கள்38 (கட்டமானத்தில்)
2 (முடிந்தது)
4 (செயல் பாட்டில்)
தினசரி பயணிகள்34,000 (நிலை 1 முடிவில்)
150,000 (முழுமையுற்றவுடன்)
தலைமையகங்கள்ஜெ. எல். என். அரங்க மெற்றோ நிலையம், 4வது தளம், கல்லூர், கொச்சி, கேரளா
இணையதளம்https://kochimetro.org/water-transport/
செயற்பாடு
தொடக்கம்26 ஏப்ரல் 2023; 12 மாதங்கள் முன்னர் (2023-04-26)[1]
நடத்துநர்(கள்)கொச்சி மெற்றோ தொடருந்து நிறுவனம்
வாகனங்களின் எண்ணிக்கை23
Headway15 நிமிடங்கள்
தொழிநுட்பத் தரவுகள்
திட்ட நீளம்76 கி.மீ
சராசரி வேகம்8 கடல் மைல்
அதியுயர் வேகம்12 கடல் மைல்

நிலை 1, 3 வழித்தடங்களைக் கொண்டுள்ளது. இதில் வைட்டிலா - தகவல் பூங்காத் தடம் 15 பிப்ரவரி 2021 அன்று திறக்கப்பட்டது.[5] நிலை 1, 2024-ல் முழுமையாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஒரு நாளைக்கு 34,000 பயணிகளுக்குச் சேவை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினசரி 1.5 லட்சம் பயணிகளுடன் முழு மெற்றோ அமைப்பு 2035ஆம் ஆண்டில் முழுமையாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கண்ணோட்டம் தொகு

நவீனமயமாக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட மற்றும் வை-பை வசதியுடன் இயக்கப்படும் கட்டுமரம் பயணிகள் படகுச் சேவைக்கென இரண்டு வகை திட்டங்கள் முன்மொழியப்பட்டன. மின்சார உந்துவிசை படகுகள் 50 மற்றும் 100 பயணிகள் திறன் கொண்டவை. இவை மணிக்கு 15 முதல் 22 கிலோமீட்டர்கள் வரை வேகமாகச் செல்லும் வேகத்தில் இயங்குகின்றன. படகுகளில் தற்காலப் பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறிய மின்கலம் மூலம் இயக்கப்படும் படகுகள் குறுகிய தூரப் பயணத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன.[6] பல்வேறு வழிகளில் 10 முதல் 20 நிமிடங்கள் வரை உயர்மட்ட பாதை தூரம் மாறுபடும். படகு குழாமில் தானியங்கி நிறுத்து அமைப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய மிதவைகளுடன் முன்மொழியப்பட்டுள்ளது. இம்மிதவைகள் வசதியாக இருக்கும் வகையில் உள்ளிழுக்கும் அமைப்புகளால் மூடப்பட்டிருக்கும்.[7]

உள்கட்டமைப்பின் ஒரு பகுதியாக, நுண்ணறிவு வழிசெலுத்தல் அமைப்பு மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையமும் முன்மொழியப்பட்டுள்ளன. மேலும் இவை நகரின் போக்குவரத்து அமைப்புடன் ஒருங்கிணைக்கப்படும். கொச்சி மெற்றோவால் செயல்படுத்தப்படும் தானியங்கி கட்டண வசூல் முறை கடல் வழிப் போக்குவரத்து அமைப்பிற்கு விரிவுபடுத்தப்படும். இதனால் மெற்றோ தொடருந்திலும் படகுகளிலும் ஒரே பயணச்சீட்டினைப் பயன்படுத்திப் பயணிக்கலாம்.

படகுச் சேவையை தவிர, படகு குலாம் மற்றும் தீவுகளுக்கு புதிய மற்றும் ஏற்கனவே உள்ள அணுகல் சாலைகளின் மேம்பாட்டையும் இந்த திட்டம் மேம்பாட்டில் கொண்டுள்ளது. தேவார மற்றும் பிழலாவில் இரண்டு படகுத் தளங்கள் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளன. கொச்சியில் உள்ள உப்பங்கழிகள் மற்றும் தீவுகளை ஒட்டிய பகுதிகளில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த திட்டம் முயல்கிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.[8] கொச்சி கப்பல் கட்டும் தளம் 2022 சனவரியில் 23 மின்சார படகுகளில் முதலாவது படகு தொகுதியினை வழங்கியது.[9]

நிலை 1, 3 வழித்தடங்களைக் கொண்டுள்ளது. இதில் வைட்டிலா - தகவல் பூங்காப் பிரிவு 15 பிப்ரவரி 2021 அன்று திறக்கப்பட்டது.[10] வைப்பீன் தீவு - கேரள உயர்நீதிமன்ற தடம் 26 ஏப்ரல் 2023 அன்று சேவையைத் தொடங்குகிறது. வைட்டிலா - காக்கநாடு தடம் 27 ஏப்ரல் 2023 முதல் பயன்பாட்டிற்கு வருகின்றது. நிலை 1, 2024-ல் முழுமையாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஒரு நாளைக்கு 34,000 பயணிகளுக்குச் சேவை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2035ஆம் ஆண்டுக்குள் முழு கடல்வழி மெற்றோ அமைப்பும் முழுமையாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தினசரி 1.5 லட்சம் பயணிகள் பயணம் செய்யலாம். இத்திட்டம் முழுமையாக செயல்பட்டதும் ஆண்டுக்கு 44,000 டன் கார்பன் வெளியேற்றம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழித்தடங்களும் படகுத்தளமும் தொகு

கொச்சி பெரும்பாலும் உப்பங்கழிகளால் சூழப்பட்டு அரபிக்கடல் எல்லையாக உள்ளது. இது நூற்றுக்கணக்கான நீர்வழிகளால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பொது போக்குவரத்து அமைப்பை மிகவும் அணுகக்கூடியதாகவும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் மாற்றுவதற்கான வழியை வழங்குகிறது. வில்லிங்க்டன் தீவு, கும்பளம் வைப்பீன் தீவு, எடகொச்சி, நெட்டூர், வைட்டிலா, ஏலூர், காக்கநாடு, மற்றும் முளவுக்காடு ஆகிய தீவு வாசிகளின் பயணப் பிரச்சனைகளைக் கொச்சி நீர் மெற்றோ தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.[11] முதற்கட்டமாக, உயர் நீதிமன்றம் முதல் வைப்பின் வரையிலும், வைட்டிலா முதல் காக்கநாடு வரையிலும் எட்டு மின்சார கலப்பின படகுகளுடன் நீர் மெற்றோ இரண்டு வழித்தடங்களில் பயணத்தினை தொடங்கியது.[12]

நிதியுதவி தொகு

நீர் மெற்றோ திட்டத்தின் மொத்த செலவு 1,137 கோடி (US$140 மில்லியன்) ஆகும். கேஎப்டபுள்யூ மேம்பாட்டு வங்கி 85 மில்லியன் யூரோக்களை நீண்ட கால மென் கடனாக வழங்கும். கேரள அரசு 102 கோடி (US$13 மில்லியன்) அளிக்கும்.[13]

செயல்பாடுகள் தொகு

கட்டணம் தொகு

மெற்றோ பயணக் கட்டணம் குறைந்தபட்சமாக 20 ரூபாயாகவும் அதிகபட்சமாக 40 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாராந்திர பயணக் கட்டண சலுகையாக 180 ரூபாய்க்குப் பயண அனுமதிச் சீட்டு கிடைக்கிறது. அதே சமயம் மாதாந்திர சலுகை பயண அனுமதிச் சீட்டு 600 ரூபாய்க்கும் காலாண்டு கட்டணமாக 1500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒற்றை பயண சீட்டுகள் மற்றும் பல்வேறு பயண அனுமதிச்சீட்டுகள் முனையங்களில் உள்ள பயணச்சீட்டு நிலையங்களில் கிடைக்கும். கொச்சி மெற்றோ ஒன்று அட்டையினைப் பயன்படுத்தி நீர் மெற்றோவில் பயணிக்கலாம். கொச்சி ஒன்று செயலி மூலம் முன்பதிவு செய்யப்பட்ட அலைபேசி க்யூஆர் குறியீட்டைப் பயன்படுத்தியும் பயணிக்க முடியும்.[14]

சேவைகள் தொகு

முதற்கட்டமாகக் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த சேவை வழங்கப்படும். பயண நெருக்கடி நேரங்களில் 15 நிமிட இடைவெளியில் உயர்நீதிமன்றம் - வைப்பின் வழித்தடத்தில் ஒரு சேவை இருக்கும்.[15]

மேலாண்மை தொகு

கொச்சி மெற்றோ தொடருந்து நிறுவனம் கொச்சி நீர் மெற்றொவின் நிர்வாகப் பொறுப்புகளை கவனித்துக் கொள்கிறது.

நிலையங்கள் தொகு

நிலை 1-ல் சேவையில் உள்ள நிலையங்கள் தொகு

பன்னாட்டு ஈர்ப்பு தொகு

நவம்பர் 2022-ல், பன்னாட்டு கடல்சார் அமைப்பு அதிகாரிகள் தங்கள் பசுமைப் பயணம் 2050 திட்டத்தின் ஒரு பகுதியாக கொச்சிக்கு வருகை தந்தனர். இவர்கள் கொச்சி கடல்வழி மெற்றோ திட்டத்தின் தனித்துவமான முயற்சிகளுக்காக பாராட்டினர். "எங்கள் வருகையின் நோக்கம், கடல்வழி மெற்றோ, நிலையான நகர்ப்புற நீர் போக்குவரத்தில் ஒரு முன்னோடி முயற்சியின் அடிப்படையில் கேரளாவின் ஈர்க்கக்கூடிய சாதனைகளைப் பற்றி அறிந்துகொள்வது மற்றும் வணிக நம்பகத்தன்மை, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் சமூக தாக்கத்தை ஏற்படுத்துவது சாத்தியம் என்பதை உலகெங்கிலும் உள்ள மற்றவர்களுக்குக் காண்பிப்பதாகும். இத்தகைய சேவைகள் மூலம். மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கும் கடல்வழி மெற்றோ சேவை விரிவுபடுத்தப்படும் என்று நம்புகிறோம்”; என பன்னாட்டு கடல்சார் கூட்டாண்மை மற்றும் திட்டங்களின் தலைவர் ஜோஸ் மாத்திக்கல் கூறினார்.[16]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. April 25, Amit Chaturvedi (25 April 2023). "India's First Water Metro To Be Inaugurated In Kochi Today: 5 Points" (in en) இம் மூலத்தில் இருந்து 25 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230425025045/https://www.ndtv.com/india-news/indias-first-water-metro-to-be-inaugurated-in-kochi-on-tuesday-5-points-3974915. 
  2. "Water metro tops priority list". 23 June 2016. பார்க்கப்பட்ட நாள் 22 July 2016.
  3. "Water metro clears last environmental hurdle". 30 Oct 2019. பார்க்கப்பட்ட நாள் 23 Dec 2019.
  4. "Kochi Water Metro by July? Hopefully..." The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-04-08.
  5. "Kochi will have to wait longer for Water Metro". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-04-08.
  6. "Kochi Water Metro project moves ahead in full steam". Manorama Online. 18 June 2016. பார்க்கப்பட்ட நாள் 22 July 2016.
  7. Staff Reporter (2022-12-19). "KMRL floats tender for Design and construction of Kochi Water Metro Project". Metro Rail News (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-09.
  8. . 18 June 2016. 
  9. "Cochin Shipyard handovers India's first Water Metro ferry to Kochi Metro". Urban Transport News. பார்க்கப்பட்ட நாள் 28 January 2022.
  10. "Kochi will have to wait longer for Water Metro". The New Indian Express. Archived from the original on 8 April 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-04-08.
  11. "3 Water Metro Terminals Ready For Functioning | Kochi News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Mar 6, 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-12-27.
  12. "PM Modi on 2-day Kerala visit, will launch India's first water metro, meet church leaders". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-24.
  13. "KMRL, German bank to sign pact for Water Metro". New Indian Express. 22 July 2016. பார்க்கப்பட்ட நாள் 22 July 2016.
  14. "കാത്തിരിപ്പിന് മണിക്കൂറുകൾ മാത്രം ,രാജ്യത്തെ ആദ്യ വാട്ടർമെട്രോ സർവീസ്, മോദി നാളെ ഉദ്ഘാടനം ചെയ്യും". www.asianetnews.com. பார்க்கப்பட்ட நாள் 2023-04-24.
  15. Desk, 24 Web (2023-04-23). "കൊച്ചി വാട്ടർ മെട്രോ: റൂട്ട്, സമയം, നിരക്ക് | അറിയേണ്ടതെല്ലാം". Twentyfournews.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-24.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  16. Bureau, BL Kochi (2022-11-15). "IMO praises Kochi Water Metro project". www.thehindubusinessline.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொச்சி_கடல்வழி_மெற்றோ&oldid=3773369" இலிருந்து மீள்விக்கப்பட்டது