கொல்லேறு பறவைகள் சரணாலயம்

கொல்லேறு பறவைகள் சரணாலயம் (Kolleru Bird Sanctuary) என்பது இந்தியாவின் ஆந்திராவில் உள்ள ஒரு பறவைகள் சரணாலயம் ஆகும். இது 673 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இச்சரணாலயம் 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நவம்பர் 1999இல் நிறுவப்பட்டது. இந்த சரணாலயம் கொல்லெறு ஏரி ஈரநிலத்தின் ஒரு பகுதியைப் பாதுகாக்கிறது. இது 2002ஆம் ஆண்டில் சர்வதேச முக்கியத்துவத்திற்கான ராம்சார் சாசனம் அடிப்படையில் ராம்சார் ஈரநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[1][2]

கொல்லேறு பறவைகள் சரணாலய ஆந்திரப்பிரதேசம்
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
ஏலூறு அருகில் பறவைகள்
Map showing the location of கொல்லேறு பறவைகள் சரணாலய ஆந்திரப்பிரதேசம்
Map showing the location of கொல்லேறு பறவைகள் சரணாலய ஆந்திரப்பிரதேசம்
கொல்லேறு பறவைகள் சரணாலயம்
அமைவிடம்ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அருகாமை நகரம்ஏலூரு
ஆள்கூறுகள்16°37′N 81°12′E / 16.617°N 81.200°E / 16.617; 81.200[1]
பரப்பளவு673 km2 (166,000 ஏக்கர்கள்)
நிறுவப்பட்டதுநவம்பர் 1999 (1999-11)
நிருவாக அமைப்புஆந்திரப் பிரதேசம் வனத்துறை
தெரியப்பட்டது19 August 2002[1]

நிலவியல்

தொகு

கொல்லேறு பறவைகள் சரணாலயம் ஆந்திராவின் இரண்டு முக்கிய மாவட்டங்களை உள்ளடக்கியது. அவை கிருஷ்ணா மாவட்டம் மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டம் ஆகும். கிருஷ்ணா நதி மற்றும் கோதாவரி டெல்டாவிற்கும் இடையே ஏலூரு நகரத்திலிருந்து 10 முதல் 25 கி.மீ வரை பரவியுள்ளது.[3]

தாவரங்கள்

தொகு

இந்த சரணாலயத்தில் காணப்படும் முக்கிய தாவரம் பிராக்மிட்ஸ் கர்கா.[4] இது 10 அடி உயரம் வரை வளரும் ஒரு களைச் செடியாகும். இக்களைச் செடி சில வகையான பறவைகளுக்குத் தங்குமிடமாக உள்ளது. நீர் வாழ் தாவரங்கள் நிம்பேயே நொச்சாலி, நிம்போய்டெசு இண்டிகம், ஓடெல்யா அலிசொமிடெசு, நெச்சாமன்ந்ரா அல்டெர்னிஃபொலியா, லிம்னோபிலா இண்டிகா, வால்சுநீரியா ஸ்பைரலிசு, பிளைக்சா ஆக்டாண்ட்ரா, வள்ளல், இசுரிபசு அர்டிசுலேடசு, பாச்பாலிடிய்ம் ஜெர்மினேடம், சம்பு மற்றும் பார்ஜிமைட்சு கற்க.[5]

விளிம்பு தகராறு

தொகு

சம்வுயரக் கோட்டு வரைபு என்பது வரைபடத்தில் வரையப்பட்ட கோடுகள், கடல் மட்டத்திலிருந்து சமமான உயரத்தில் உள்ளதைக் குறிக்கும் (கடல் மட்டத்தைக் குறிக்கும்). கடந்த காலங்களில், ஏரியின் நீர்மட்டம் பருவமழையின் போது 7 முதல் 10 வரையிலான விளிம்பிலிருந்தது, மேலும் இது வறண்ட காலங்களில் 3க்கு சரிந்தது. விளிம்பு 3 இல் உள்ள பகுதி 135 சதுர கிலோமீட்டர் மற்றும் விளிம்பு 10 இல் உள்ள பகுதி 901 சதுர கிலோமீட்டர் ஆகும்.

மீன் பண்ணைகள் மற்றும் சாலைகள் ஏரியின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளதால் இந்த நிலைமைகள் இனி இருக்காது. சூர்யவன்ஷா வாடிஸ்[6] என அழைக்கப்படும் உள்ளூர் மீன்பிடி சமூகம், 13ஆம் நூற்றாண்டின் காலத்திலிருந்து கிழக்கு கங்கா வம்ச ஆட்சியின் போது, கொல்லேறு ஏரியில் சந்ததியினரின் உரிமைகளைக் கொண்டிருந்தனர். இவர்கள் அரசிடம் +5 விளிம்பிலிருந்து (308) +3 வரையறைக்கு (135) கி.மீ 2 )விளிம்பினை குறைக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். தங்களை, இவர்கள் லாங்குலா கஜபதி ராஜு காலத்திலிருந்து பறவைகளின் பாதுகாவலர்கள் என்று வலியுறுத்தினர்.[7]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Kolleru Lake". Ramsar Wetlands. Ramsar. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016.
  2. "Kolleru Bird Sanctuary". www.sanctuariesindia.com. Archived from the original on 2016-05-12. பார்க்கப்பட்ட நாள் 2021-04-19.
  3. Ramsar convention, Wet land. "Kolleru Lake". www.rainwaterharvesting.org.
  4. Wetlands of the World I: Inventory, Ecology and Management edited by Dennis F. Whigham, D. Dykyjová, S. Hejný (page-382)
  5. Kolleru Lake, Flora. "C.P.R. Environmental Education Centre". www.cpreec.org. Archived from the original on 2021-04-19. பார்க்கப்பட்ட நாள் 2021-04-19.
  6. Kolleru lake. "Panchayat reigns supreme". www.indiaenvironmentportal.org.
  7. The imperial gazetteer of India, Volume 8 by Sir William Wilson Hunter

வெளி இணைப்புகள்

தொகு