கோலா கிராய்-கோலா பிலா நெடுஞ்சாலை

கோலா கிராய்-கோலா பிலா நெடுஞ்சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை 34 (ஆங்கிலம்: Malaysia Federal Route 34; அல்லது Kuala Krai–Kuala Pilah Highway), (Central Spine Road) (CSR); மலாய்: Laluan Persekutuan Malaysia 34 அல்லது Lebuhraya Kuala Krai–Kuala Pilah அல்லது Lingkaran Tengah Utama (LTU) என்பது மலேசியா, கிளாந்தான்; பகாங்; நெகிரி செம்பிலான் மாநிலங்களில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டணமில்லா நெடுஞ்சாலை ஆகும். [1]

மலேசிய கூட்டரசு சாலை 34
Malaysia Federal Route 34
Laluan Persekutuan Malaysia 34
Central Spine Road

கோலா கிராய்-கோலா பிலா நெடுஞ்சாலை
Kuala Krai–Kuala Pilah Highway
Lebuhraya Kuala Krai–Kuala Pilah
Lingkaran Tengah Utama

வழித்தட தகவல்கள்
நீளம்:340 km (210 mi)
பயன்பாட்டு
காலம்:
2012 –
வரலாறு:2026-இல் நிறைவு பெறும்
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:கோலா கிராய், கிளாந்தான்
 34 கோத்தா பாரு–கோலா கிராய்

8 கூட்டரசு சாலை 8
185 சிம்பாங் பூலாய்–கோலா பேராங்

E8 2 AH141 கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலை

2 கூட்டரசு சாலை 2

9 கூட்டரசு சாலை 9
South முடிவு:சிம்பாங் பெலங்காய், பகாங் / கோலா பிலா, நெகிரி செம்பிலான்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
குவா மூசாங்; சுங்கை இயூ; செகார் பெரா; கம்போங் ரெலோங்; கோலா லிப்பிஸ்; ரவுப் / சுங்கை ருவான்; பெந்தோங்; காராக்; மெம்பாகா; கோலா பிலா; பகாவ்; சிரம்பான்
நெடுஞ்சாலை அமைப்பு

தீபகற்ப மலேசியாவின் மையத்தில் கட்டப்பட்டு வரும் இந்த நெடுஞ்சாலை 340 கிமீ (210 மைல்) நீளம் கொண்டது. கட்டி முடிக்கப்பட்டதும் இந்தச் சாலை, முன்னாள் இருவழி சாலைகளான கூட்டரசு சாலை 8 (குவா முசாங் நெடுஞ்சாலை) மற்றும் கூட்டரசு சாலை 9 (காராக்-தம்பின் நெடுஞ்சாலை) ஆகியவற்றை மாற்றி அமைக்கும்.

பொது

தொகு

கோலா கிராய்-கோலா பிலா நெடுஞ்சாலையின் கட்டுமானம்; கட்டுமானத் திட்டம் 3-இல் (Package 3) தொடங்குகிறது. இந்தத் திட்டம் மெராப்போவில் தொடங்கி கம்போங் ரெலோங் வரை நீடிக்கிறது. இது குவா மூசாங் நெடுஞ்சாலையில் தொடங்கி செகார் பெரா வழியாகச் செல்கிறது.

இந்தச் சாலைவழி, தற்போது மோசமான வாகன விபத்துகளுக்கு பெயர் பெற்ற இடமாக விளங்குகிறது. தற்போது கட்டப்பட்டு வரும் இந்த நெடுஞ்சாலையில் சுற்றுச்சூழலுக்கான நீண்ட கடவைகள் (Eco-viaducts) அமைக்கப்பட்டுள்ளன. வடக்கு ரவுப் முதல் காராக் வரையிலான கட்டுமானத் திட்டம் 5 (Package 5) அடுத்த கட்டமாகும்.

மாற்றுவழிப் போக்குவரத்து

தொகு

இந்தத் திட்டம் பெந்தோங் நகரைக் கடந்து சென்று, கூட்டரசு சாலை 8 (கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையுடன்) இணைக்கப்படும். அந்த வகையில், ரவுப் மற்றும் பெந்தோங் இடையிலான செங்குத்தான மலைப் பகுதியில் இருந்து ஒரு மாற்றுவழிப் போக்குவரத்திற்கு உதவுகிறது.

இந்த நெடுஞ்சாலை  E, மத்திய தண்டுவடச் சாலை (Central Spine Road) எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நெடுஞ்சாலையின் கட்டுமானம் 2012-இல் தொடங்கப்பட்டது; 2026-இல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்புக் கூறுகள்

தொகு
  • நான்கு வழிகள்; ஒவ்வொரு பாதையிலும் இரண்டு வழிகள்
  • வன விலங்குகள் கடப்பதற்கு ஒரு நீண்ட சுற்றுச்சூழல் வழிப்பாதை
  • சில பகுதிகளில் கான்கிரீட் போடப்பட்டுள்ளது
  • சாலை நெடுகிலும் கிலோமீட்டர் குறிப்பான்கள்

சாலைத் தரம்

தொகு

இந்த நெடுஞ்சாலையின் பெரும்பாலான பகுதி, ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. அத்துடன், சில பிரிவுகளில் விசையுந்து பாதைகளும் உள்ளன.[2]

விளக்கம்

தொகு

காட்சியகம்

தொகு
 
ரவுப் நகருக்கு அருகில் கட்டுமானத்தில் உள்ள சாலை

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.
  2. "Construction of roads in Malaysia implemented mainly by the Federal Government and State Government. However, since the mid-1980s, construction of toll roads has been started by private companies who then authorized by the government to charge tolls to road users" (PDF). www.piarc.org/. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.

வெளி இணைப்புகள்

தொகு