கோலா குபு பாரு மருத்துவமனை
கோலா குபு பாரு மருத்துவமனை (மலாய்: Hospital Kajang; ஆங்கிலம்: Kajang Hospital) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு சிலாங்கூர் மாவட்டம், கோலா குபு பாரு நகர்ப் பகுதியில் அரசு நிதியுதவி பெறும் மாவட்ட மருத்துவமனை ஆகும்.
அமைவிடம் | மருத்துவமனை சாலை, கோலா குபு பாரு, சிலாங்கூர் Jalan Hospital, Kuala Kubu Bharu, கோலா குபு பாரு, சிலாங்கூர், மலேசியா |
---|---|
ஆள்கூறுகள் | 3°33′58″N 101°39′12″E / 3.56611°N 101.65333°E[1] |
மருத்துவப்பணி | பொது மருத்துவச் சேவை |
நிதி மூலதனம் | மலேசிய அரசு நிதியுதவி |
வகை | மாவட்ட மருத்துவமனை |
அவசரப் பிரிவு | 24 மணி நேர சேவை |
படுக்கைகள் | 150 |
நிறுவல் | 1936 |
வலைத்தளம் | கோலா குபு பாரு மருத்துவமனை Hospital Kuala Kubu Bharu Kuala Kubu Bharu Hospital |
பட்டியல்கள் | |
வேறு இணைப்புகள் | மலேசிய மருத்துவமனைகளின் பட்டியல் |
சிலாங்கூர், உலு சிலாங்கூர் மாவட்டத்தின் மேற்கில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை, கோலா குபு பாரு, கெர்லிங், ராசா, பத்தாங்காலி, அம்பாங் பெச்சா பகுதிகளில் இருந்து வரும் நோயாளிகளுக்கு மருத்துவச் சேவைகளை வழங்குகிறது.
பொது
தொகுகோலா குபு பாரு மருத்துவமனை மருத்துவச் சிறப்பு சேவைகளை வழங்கும் ஒரு மாவட்ட மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 10 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். இங்குள்ள ஏழு நோயாளிக் கூடங்களில் (வார்டுகளில்) 150 படுக்கைகள் உள்ளன. கோலா குபு பாரு மருத்துவமனை 13 முக்கிய பிரிவுகளைக் கொண்டுள்ளது.[2]
வரலாறு
தொகுகோலா குபு பாரு மருத்துவமனை 1936-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. பழைய கோலா குபு நகரம் வெள்ளத்தால் அழிக்கப்பட்ட பிறகு இந்த மருத்துவமனை புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது. அந்தக் கட்டத்தில், இந்த மருத்துவமனை கோலா குபு பாரு பகுதியைச் சுற்றியுள்ள பிரித்தானிய வீரர்கள், ஈயச் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு சேவை செய்தது.
தொடக்கத்தில், இந்த மருத்துவமனை 4 வார்டுகள், ஒரு நிர்வாக கட்டிடம் / வெளிநோயாளர் பிரிவு மற்றும் ஓர் அறுவை சிகிச்சை அறை ஆகியவற்றைக் கொண்டிருந்தது. இந்த மருத்துவமனையின் தற்போதைய பரப்பளவு 37 ஏக்கர்; மற்றும் கட்டமைப்புகள் கொண்ட பகுதி ஏறக்குறைய 16 ஏக்கர் ஆகும்.[2][3]
புள்ளிவிவரங்கள்
தொகு2022-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்[4]
- படுக்கைகள் - 150
- அறுவை சிகிச்சைகள் - ?
- பிரசவங்கள் - 65
- அவசரப் பிரிவு சிகிச்சை - 27217 (2021)
- மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டவர்கள் - 3895
- சிகிச்சை பெற்றவர்கள் - 61213
- சிறப்பு சிகிச்சை பெற்றவர்கள் - 2878
- இரத்தச் சுத்திகரிப்பு செய்தவர்கள் - 7479
- இறப்புகள் - 69
முகவரி
தொகுHospital Kuala Kubu Bharu
44000 Kuala Kubu Bharu
Tel : +6(03) +603 - 6064 1333, +603 - 6064 1334, +603 - 6064 4032, +603 - 6064 4035
[5]
Emel : h_kkb@moh.gov.my
இணையத் தளம்: jknselangor
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Hospital Kuala Kubu Bharu - Kuala Kubu Bharu". wikimapia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 July 2024.
- ↑ Support, Altfa Technologies (1 January 1970). "There are 10 medical officers on duty to treat patients in this hospital". Hospital Kuala Kubu Bharu (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 July 2024.
- ↑ "Kuala Kubu Bharu Hospital was built in 1936. This hospital was moved to a new place after the old town was destroyed by floods". web.archive.org. 11 November 2014. Archived from the original on 11 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 17 July 2024.
- ↑ "Hospital Kuala Kubu Bharu - Statistik - Statistik 2018 Hingga 2022". jknselangor.moh.gov.my. பார்க்கப்பட்ட நாள் 17 July 2024.
- ↑ "Hospital Kuala Kubu Bharu - Lokasi". jknselangor.moh.gov.my. பார்க்கப்பட்ட நாள் 17 July 2024.