கோலா தெம்பிலிங்

கோலா தெம்பிலிங் (ஆங்கிலம்: Kuala Tembeling; மலாய்: Kuala Tembeling; சீனம்: 瓜拉淡贝林); என்பது மலேசியா, பகாங் மாநிலம், ஜெராண்டுட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். ஜெராண்டுட் நகரில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது.

கோலா தெம்பிலிங்
Kuala Tembeling
பகாங்
கோலா தெம்பிலிங் படகுத் துறை
கோலா தெம்பிலிங் படகுத் துறை
Map
ஆள்கூறுகள்: 4°4′20.37″N 102°19′19.38″E / 4.0723250°N 102.3220500°E / 4.0723250; 102.3220500
நாடு மலேசியா
மாநிலம் பகாங்
மாவட்டம்ஜெராண்டுட்[1]
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
27020
மலேசியத் தொலைபேசி+6-0930
மலேசியப் போக்குவரத்து எண்C

மலேசிய தேசியப் பூங்காக்களில் மிக முக்கியமான தாமான் நெகாரா (Taman Negara) பூங்காவிற்குச் செல்லும் நுழைவாயில் நகரமாக கோலா தெம்பிலிங் விளங்குகிறது. அத்துடன் தீபகற்ப மலேசியாவின் தித்திவாங்சா மலைத்தொடரின் (Titiwangsa Mountains Range) அடிவாரத்தில், சில கி.மீ. அப்பால் இந்த நகரம் அமைந்துள்ளது.[2]

பொது

தொகு

தெம்பிலிங் ஆறு (Tembeling River) மற்றும் ஜெலாய் ஆறு (Jelai River) ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் கோலா தெம்பிலிங் அமைந்துள்ளது. கோலா தெம்பிலிங்கில் உள்ள படகுதுறை மூலமாக தாமான் நெகாராவிற்குச் செல்லும் மாற்று இடமாகவும் (Transfer Point) செயல்படுகிறது.[3]

இந்த படகுதுறை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது. ஏனெனில் அவர்களில் பெரும்பாலோர் தெம்பிலிங் ஆற்றின் அழகிய இயற்கைக் காட்சிகளை அனுபவிக்க விரும்புகிறார்கள். இந்த படகுத் துறையில் இருந்து தாமான் நெகாராவை சுமார் 2 - 3 மணிநேர படகுப் பயணத்தின் மூலமாகச் சென்று அடையலாம்.[4]

தாமான் நெகாரா

தொகு

தாமான் நெகாரா 4,343 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. உலகிலேயே மிகப் பழைமையான வெப்ப மண்டல மழைக்காடுகளைக் கொண்ட வனப்பூங்கா என்றும் புகழ்பெற்றது. இந்தக் காடுகள் 130 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை.[5]

1938 - 1939-ஆம் ஆண்டுகளில், இந்த வனப் பூங்காவிற்கு கிங் ஜார்ஜ் V தேசியப் பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டது. மலேசியா விடுதலை அடைந்த பின்னர், தாமான் நெகாரா என்று பெயர் மாற்றம் கண்டது. தாமான் (Taman) என்றால் மலாய் மொழியில் பூங்கா அல்லது வனம்; நெகாரா (Negara) என்றால் நாடு என்று பொருள்படும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Longitude latitude in Kuala Tembeling, Pahang, Malaysia GPS coordinates". www.longitude-latitude-maps.com. பார்க்கப்பட்ட நாள் 26 June 2023.
  2. Minihane, Joe (3 October 2012). "Getting to and doing Taman Negara, Malaysia by yourself". Lonely Planet. பார்க்கப்பட்ட நாள் 15 April 2020.
  3. "Taman Negara National Park is the perfect place if you love rainforest and outdoor activities. Experience walking on the world's longest canopy walkway, visiting the aborigine village, trekking under rainforest canopy, climbing the highest mountain in Peninsular Malaysia, caving, fishing, camping, observing wildlife,". Taman Negara. பார்க்கப்பட்ட நாள் 9 April 2022.
  4. "Kuala Tembeling: This route is popular among foreign tourists as most of them want to enjoy the river and panoramic view along Sungai Tembeling which takes about 2. 5 – 3 hour boat ride to Kuala Tahan, Taman Negara". Taman Negara. 3 March 2017. பார்க்கப்பட்ட நாள் 26 June 2023.
  5. The Taman Negara is a grandmother to the rest of the world’s rainforests. During the Ice Ages, when immense glaciers covered much of the Earth, Malaysia was blessed with a location far enough away from the ice that its forest started to develop 130 million years ago

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

  பொதுவகத்தில் தாமான் நெகாரா தேசியப் பூங்கா பற்றிய ஊடகங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலா_தெம்பிலிங்&oldid=3744899" இலிருந்து மீள்விக்கப்பட்டது