கோவிந்த் சகாராம் சர்தேசாய்

இந்தியாவின் மகாராஷ்டிராவைச் சேர்ந்த வரலாற்றாசிரியர்

கோவிந்த் சகாராம் சர்தேசாய் (Govind Sakharam Sardesai) (17 மே 1865 - 29 நவம்பர் 1959) ரியாசத்கர் சர்தேசாய் என்றும் பிரபலமாக அழைக்கப்படும் இவர் இந்தியாவின் மகாராட்டிராவைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் ஆவார். மராத்தியில் எழுதப்பட்ட தனது ரியாசாத் மூலம், இவர் 1848 வரை இந்திய வரலாற்றின் 1,000 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு கணக்கை முன்வைத்தார். மராட்டியர்களின் புதிய வரலாறு என்ற மூன்று தொகுதிகளை ஆங்கிலத்திலும் எழுதினார். இவரின் பணி 1957 இல் இந்திய அரசின் பத்ம பூசண் விருதுடன் அங்கீகரிக்கப்பட்டது. [1]

கோவிந்த் சகாராம் சர்தேசாய்
பிறப்பு17 மே 1865
கோவில், இரத்தினகிரி மாவட்டம், மகாராட்டிரா
இறப்பு29 நவம்பர் 1959
கம்சேத், புனே, மகாராட்டிரா
குறிப்பிடத்தக்க விருதுகள்பத்ம பூசண்

சுயசரிதை

தொகு

இவர், இந்திய மாநிலமான மகாராட்டிரத்தின் 35 மாவட்டங்களில் ஒன்றான இரத்தினகிரி மாவட்டத்தில் கோவில் கிராமத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். இரத்னகிரியில் தனது உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும், புனே மற்றும் மும்பையில் கல்லூரிக் கல்வியையும் பெற்றார். பின்னர் இவர் 1889 இல் பரோடா சுதேச அரசுப் பணியில் சேர்ந்தார். அதன்பிறகு, மகாராசா மூன்றாம் சாயாசிராவ் கெய்க்வாட் இவரை அவரது தனிச்செயலாளராகவும், பின்னர் இளவரசர்களின் ஆசிரியராகவும் நியமித்தார்.

பணிகள்

தொகு
 
சர்தேசாய், கையொப்பத்துடன், சுமார் 1938

மகாராசாவின் ஊக்கத்தோடு, அரச நூலகத்தில் உள்ள பெரிய புத்தகங்களையும், வரலாற்று ஆவணங்களையும் அணுகுவதன் மூலம், இவர் ஏராளமான வரலாற்றுத் தரவுகளைத் தொகுத்து பல புத்தகங்களை எழுதினார். இங்கிலாந்து, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பாவிற்கான பயணங்களின் போது இவர் பெரும்பாலும் மகாராசாவுடன் சென்றார். இது வரலாற்றைப் பற்றிய தனது பார்வையை விரிவுபடுத்த இவருக்கு உதவியது. இவர், மராத்தி ரியாசத்தின் எட்டு தொகுதிகளையும், முசல்மணி ரியாசத்தின் மூன்று தொகுதிகளையும், பிரிட்டிசு ரியாசத்தின் இரண்டு தொகுதிகளையும் எழுதினார்.

மேற்கண்ட முயற்சியில் வரலாற்றாசிரியர் திரியம்பக் சங்கர் செச்வால்கர் இவரது உதவியாளராக பணியாற்றினார். அவர், பேசுவாக்கள் குறித்த இவரது ஒரு தொகுதிக்கு முன்னுரை எழுதியிருந்தார். செச்வால்கர் சில முரண்பாடான வரலாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருந்ததால் இவர் அவரிடம் முன்னுரை எழுதச் சொன்னார்.

1925 இல் பரோடா மாநிலப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, புனேவுக்கு அருகிலுள்ள கம்செத் என்றக் கிராமத்தில் குடியேறினார். சதுநாத்து சர்க்காரின் ஆலோசனையின் பேரில், பேசுவா தப்தாரைத் திருத்தி வெளியிடும் பணியை மேற்கொள்ளுமாறு மும்பை அரசு இவரிடம் கேட்டுக் கொண்டது. மோடி மராத்தி எழுத்து முறையில் 27,332 அடங்கிய கிட்டத்தட்ட 35,000 ஆவணங்களை இவர் ஆய்வு செய்தார்; ஆங்கிலத்தில் 7,482; குசராத்தியில் 129; மற்றும் பாரசீக மொழியில் 29. அதைத் தொடர்ந்து, 7,801 பக்கங்களைக் கொண்ட 45 தொகுதி பேசுவா தப்தார் மற்றும் 8,650 ஆவணங்களை இவர் வெளியிட்டார்.

பின்னர், சதுநாத்து சர்க்காருடன் இணைந்து, இவர் 7,193 பக்கங்களைக் கொண்ட பூனா ரெசிடென்சி என்றக் கடிதத் தொடர்பைத் திருத்தி வெளியிட்டார். மேலும் 4,159 கடிதங்களை உள்ளடக்கியது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சில ஆதாரங்களின் உதவியுடன், இவர் தனது 80 வயதில் , மராட்டியர்களின் புதிய வரலாறு என்ற நூலை எழுதினார்.

இறப்பு

தொகு

இவர், 1959 நவம்பர் 29, அன்று தனது 94 வயதில் கம்செத்தில் காலமானார்.

குறிப்புகள்

தொகு
  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 சூலை 2015.

மேலும் காண்க

தொகு