கோவில்பட்டி தொடருந்து நிலையம்
கோவில்பட்டி தொடர்வண்டி நிலையம் (Kovilpatti railway station) தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்துக்குட்பட்ட ஒரு தொடர்வண்டி நிலையம் ஆகும். இத்தொடர்வண்டி நிலையம் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது .
கோவில்பட்டி தொடர்வண்டி நிலையம் | |
---|---|
அனைத்து வகை ரயில்களும் நின்று செல்லும் நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | வேலாயுதபுரம் ரோடு , கோவில்பட்டி , தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு |
ஆள்கூறுகள் | 9°10′57″N 77°52′23″E / 9.1826°N 77.8731°E |
ஏற்றம் | 4 மீட்டர் |
உரிமம் | இந்திய ரயில்வே |
இயக்குபவர் | தென்னக ரயில்வே |
தடங்கள் | வாஞ்சி மணியாச்சி - மதுரை இருப்புப் பாதை |
நடைமேடை | 2 |
இருப்புப் பாதைகள் | 3 |
இணைப்புக்கள் | வாடகையுந்து, மூவுருளி (Auto) மற்றும் சிற்றுந்துகள் |
கட்டமைப்பு | |
மாற்றுத்திறனாளி அணுகல் | ஆம் |
மற்ற தகவல்கள் | |
நிலை | பயன்பாட்டில் உள்ளது |
நிலையக் குறியீடு | CVP |
மண்டலம்(கள்) | தென்னக ரயில்வே |
கோட்டம்(கள்) | மதுரை |
வரலாறு | |
மின்சாரமயம் | ஆம் |
வரலாறு
தொகுதொடக்ககாலத்தில், கோவில்பட்டி தொடர்வண்டி நிலையம் நீராவி என்ஜின்களுக்கு நீரேற்ற பயன்படுத்தப்பட்டது. லாயல் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் லட்சுமி டெக்ஸ்டைல்ஸ் போன்ற நிறுவனங்களின் வருகையால் இந்நகரம் வளர்ச்சியடைந்தது.
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
தொகுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 75 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[1][2][3]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மதுரை கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, கோவில்பட்டி தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 12.72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[4][5][6][7]
தொடர்வண்டி சேவை
தொகுஇத்தொடர்வண்டி நிலையம் மதுரையிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், போன்ற தென்மாவட்டப் பகுதிகளை இணைக்கும் இருப்பு பாதையில் அமைந்துள்ளதால், அப்பகுதிகளுக்குச் செல்லும் பெரும்பாலான தொடர்வண்டிகள் இங்கு நின்று செல்கின்றன.
அனைத்து வகை ரயில்களும் இங்கு நின்று செல்வதால், இத்தொடர்வண்டி நிலையம் மதுரை கோட்டத்தின் மிக முக்கிய தொடர்வண்டி நிலையங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.[8][9]
- தூத்துக்குடி
- திருநெல்வேலி
- நாகர்கோவில்
- கன்னியாகுமரி
- திருவனந்தபுரம்
- திருச்செந்தூர்
- புனலூர்
- கொல்லம்
- மதுரை
- திருச்சிராப்பள்ளி
- சென்னை எழும்பூர்
- ஹௌரா
- தாதர்
- மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் முனையம்
- புரட்சித்தலைவர் டாக்டர் எம் . ஜி . இராமச்சந்திரன் மத்திய தொடருந்து நிலையம்
- கோயம்புத்தூர்
- மைசூர்
- பெங்களூர்
- டெல்லி
- ஈரோடு
- ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி - கத்ரா
- ஓகா
- குருவாயூர்
- கச்சேகுடா
போன்ற நாட்டின் பல பகுதிகளுக்கு கோவில்பட்டி தொடர்வண்டி நிலையத்திலிருந்து தொடர்வண்டி சேவை உள்ளது .
மேற்கோள்கள்
தொகு- ↑ "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980.
- ↑ https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
- ↑ https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
- ↑ https://m.dinakaran.com/article/News_Detail/1319841
- ↑ https://x.com/GMSRailway/status/1713079689802395925
- ↑ https://www.hindutamil.in/news/tamilnadu/972211-amrit-bharat-station-project-allocation-of-rs-73-crore-for-reconstruction-of-15-railway-stations-on-virudhunagar-madurai-division-1.html
- ↑ https://timesofindia.indiatimes.com/city/chennai/southern-railway-to-redevelop-34-stations-in-tamil-nadu/articleshow/108027373.cms
- ↑ "Statement showing Category-wise No.of stations in IR based on Pass. earning of 2011" (PDF). பார்க்கப்பட்ட நாள் 15 January 2016.
- ↑ "PASSENGER AMENITIES - CRITERIA= For Categorisation Of Stations" (PDF). Archived from the original (PDF) on 4 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2016.