சகீப் மஹ்மூத்


சகீப் மஹ்மூத் (பிறப்பு: பிப்ரவரி 25, 1997) ஓர் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர். இவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் லங்காஷயர் அணிக்காக விளையாடுகிறார் . இவர் ஓர் வலது கை வேகப்பந்து வீச்சாளரும், வலது கை துடுப்பாட்டகாரரும் ஆவார். 2015 டிசம்பரில் இவர் 2016 வயதுக்குட்பட்ட 19 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெற்றார்.[2] இவர் 2019 நவம்பரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அளவில் அறிமுகமானார்.

சகீப் மஹ்மத்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சகீப் மஹ்மத்
பிறப்பு25 பெப்ரவரி 1997 (1997-02-25) (அகவை 24)
பிரிங்ஹாம், West Midlands, இங்கிலாந்து
உயரம்6 ft 2 in (188 cm)[1]
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை வேகப்பந்து வீச்சாளர்
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 257)9 பிப்ரவரி 2020 எ தென் ஆப்ரிக்கா
கடைசி ஒநாப4 ஆகத்து 2020 எ அயர்லாந்து
இ20ப அறிமுகம் (தொப்பி 89)3 நவம்பர் 2019 எ நியூசிலாந்து
கடைசி இ20ப10 நவம்பர் 2019 எ நியூசிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2015–தற்போது வரைLancashire (squad no. 25)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ODI T20I FC LA
ஆட்டங்கள் 4 3 16 31
ஓட்டங்கள் 12 7 154 129
மட்டையாட்ட சராசரி 12.00 7.00 14.00 18.42
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 12 4 34 45
வீசிய பந்துகள் 197 60 2,136 1,499
வீழ்த்தல்கள் 5 3 42 55
பந்துவீச்சு சராசரி 31.20 38.33 28.90 25.85
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/36 1/20 4/48 6/37
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 1/– 1/– 8/–
மூலம்: Cricinfo, 10 ஆகத்து 2020

இவரது பந்துவீசும் செய்கையினால் பந்துவீசும் வேகம் 90 மைல் வேகத்தை எளிதாக அடைய முடிகிறது. இவரின் பந்துவீச்சால் பாக்கித்தான் கிரிக்கெட் வீரர் வகார் யூனிஸுடன் ஒப்பிடப்பட்டார்.[3]

தொழில்தொகு

இவரது பெற்றோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இதன் காரணமாக 2019 ஜனவரி மாத இந்திய சுற்றுப்பயணத்தின் போதும், பிப்ரவரில் இங்கிலாந்து லயன்ஸ் அணியில் சேர்ந்து விளையாட முடியாமல் போனது. இறுதியில் இவருக்காக டாம் பெய்லி மாற்றப்பட்டார்.[4]

ஏப்ரல் 2019 இல், லங்காஷயர் அணிக்காக பட்டியல் ஏ போட்டிகளில் விளையாடியபோது அடுத்தடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனை நிகழ்த்தியதன் மூலம் தொடர்ந்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை பெற்றார்.முதல் பந்து வீச்சாளர் ஆனார். இதனை இவர் 2019 ராயல் லண்டன் ஒருநாள் கோப்பையில் நிகழ்த்தினார்.[5]

செப்டம்பர் 2019 இல், நியூசிலாந்திற்கு எதிரான தொடருக்காக இங்கிலாந்தின் டெஸ்ட் மற்றும் ட்வென்டி 20 சர்வதேச அணிகளில் இடம் பெற்றார்.[6] இவர் நவம்பர் 3, 2019 அன்று நியூசிலாந்திற்கு எதிராக டி20 போட்டியில் இங்கிலாந்துக்காக தனது முதல் அறிமுக ஆட்டத்தை ஆடினார்.[7] அதற்கு அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இங்கிலாந்தின் ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) அணியில் மஹ்மூத் இடம் பெற்றார்.[8] பிப்ரவரி 9, 2020 அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்துக்காக ஒருநாள் போட்டியில் விளையாடி தனது முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.[9] பிப்ரவரி 28, 2020 அன்று, இலங்கைக்கு எதிரான தொடருக்கான இங்கிலாந்தின் டெஸ்ட் அணியில் இவர் சேர்க்கப்பட்டார், காயமடைந்த மார்க் வூட்டிற்கு பதிலாக விளையாடினார்.[10]

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகீப்_மஹ்மூத்&oldid=3075895" இருந்து மீள்விக்கப்பட்டது