சங்கர் (தமிழ்ப் போராளி)
கேணல் சங்கர் என்ற இயக்கப் பெயரால் அறியப்படும் வைத்திலிங்கம் சொர்ணலிங்கம் (Vaithilingam Sornalingam, செப்டம்பர் 1949-26 செப்டம்பர் 2001) என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படை மற்றும் கடற்படைப் பிரிவை நிறுவியவரும், வே. பிரபாகரனின் உறவினரும் ஆவார்.[1]
Colonel Shankar | |
---|---|
சங்கர் | |
தாய்மொழியில் பெயர் | சங்கர் |
பிறப்பு | வைத்திலிங்கம் சொர்ணலிங்கம் செப்டம்பர் 1949 இலங்கை |
இறப்பு | 26 செப்டம்பர் 2001 இலங்கை | (அகவை 51–52)
மற்ற பெயர்கள் | முகிலன் |
அறியப்படுவது | தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்டை, கடற்படைப் பிரிவை நிறுவியவர் |
இலங்கையில் கல்வி பயின்ற இவர், கனடாவில் சில காலம் பணியாற்றி இலங்கைக்குத் திரும்பி விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார்.[2]
துவக்ககால வாழ்க்கை
தொகுசொர்ணலிங்கம் தன் பெற்றோரின் ஆறு மகன்களில் இரண்டாவதாக 1949 செப்டம்பரில் பிறந்தார். இவர் வன்னியில் உள்ள மகா வித்தியாலயத்தில் படித்தார்.[2] பின்னர் 1959 மற்றும் 1969 இக்கு இடையில் இலங்கையின் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் உறைவிட மாணவராகப் பயின்றார். அங்கு இருந்தபோது, இவர் தாமோதரம் வீட்டில் வசித்து வந்தார். மேலும் தன் கல்லூரியின் சார்பில் துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடி விளையாட்டு வீரராகத் தன்னை நிரூபித்தார்.[3]
பின்னர் இவர் தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் வானூர்திப் பொறியியல் படித்தார். தனது படிப்பை முடித்த சிறிது காலம் கழித்து, இவர் கனடாவின் கியூபெக், மொண்ட்ரியால் நகருக்குச் சென்றார், அங்கு இவர் ஏர் கனடாவில் பணிபுரிந்தார்;[4][5] அங்கு இருந்தபோது, இவர் 1973 ஆம் ஆண்டிலேயே விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் இவர் முறையாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினராகவில்லை என்றாலும், தகவல் தொடர்பு சாதனங்கள், கப்பல்கள், வானலையுணரி (ரேடார்), ஆயுதங்கள் போன்றவற்றைப் பெறுவதற்குப் பொறுப்பான வெளிநாட்டுக் கொள்முதல் அலுவலகத்தை அமைப்பதில் இவர் உதவினார்.[2]
புலிகள் இயக்க உறுப்பினராக
தொகுகனடாவின் மொண்ட்ரியாவில், இருந்து சொர்ணலிங்கம் 1983 யூலையில் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்கிருந்து மீண்டும் இலங்கைக்குச் சென்றார்; இவர் நாடு திரும்பியதும், விடுதலைப் புலிகளின் முழுநேர உறுப்பினராக இணைந்து, இயக்கத்தை பலப்படுத்தும் பணிகளைத் தொடங்கினார்.
1985ஆம் ஆண்டு சென்னையில் தமிழ்த் தகவல் மையம் அருகே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இவரும் இவரது சகாக்களும் சேர்ந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் இராணுவத் தளபதி கண்ணனைக் கடத்திச் சென்றனர். முன்னர் புளொட் அமைப்பினால் கடத்தப்பட்ட பொட்டு அம்மானுக்காகப் பின்னர் கண்ணன் புலிகளால் பரிமாறப்பட்டார்.
இந்தக் காலகட்டத்தில், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இவரது மூன்று சகோதரர்கள் இறந்தனர்: ஒரு சகோதரரான மனோகரன் இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட பின்னர் சயனைடு உண்டு தற்கொலை செய்து கொண்டார்; "லெப்டினன்ட் சித்தார்த்" என்ற வசீகரன், மன்னாரில் தாக்குதலுக்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பில் இறந்தார், மேலும் மூன்றாவது சகோதரர் இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரைப் பற்றி மேலதிக செய்திகள் எதுவும் தெரியாத நிலையில் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. 2000 ஆம் ஆண்டில், சொர்ணலிங்கம் பிரபாகரனுடன் நோர்வே தூதுவர் எரிக் சோல்ஹெய்முடனான அவரது சந்திப்பில், மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டார்;[2] இவரும் அரசியல் பிரிவு தலைவரும் சு. ப. தமிழ்ச்செல்வன் மட்டுமே அந்தச் சந்திப்பில் பிரபாகரனுடன் நெருக்கமாக இருக்குமளவுக்கு நம்பிக்கையுள்ளவராக இருந்தார்.[6]
இறப்பு
தொகுசொர்ணலிங்கம் 26 செப்டம்பர் 2001 அன்று காலை 10:45 மணியளவில் ஒட்டுசுட்டானில் இருந்து புதுக்குடியிருப்புக்கு தனியே ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வன்னிக்கு அருகே உள்ள காட்டுப் பகுதியில் கிளைமோர் கண்ணிவெடியில் கொல்லப்பட்டார்.[6]
கங்கை அமரன், சு. ப. தமிழ்ச்செல்வன் உட்பட விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்களைக் கொல்ல அந்த நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகளின் ஒரு பகுதிதான் சொர்ணலிங்கத்தின் கொலையாகும்.[7]
இவர் இறந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு விடுதலைப் புலிகள் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்தத் தாக்குதலுக்கு இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவித்தாக்கும் படையணியே காரணம் எனக் கூறப்பட்டது. மேலும் இலங்கை அரசாங்கம் மற்றும் இந்திய அமைதி காக்கும் படையின் கொள்கைகளை எதிர்த்து 14 ஆண்டுகளுக்கு முன்னர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட திலீபனின் நினைவு தினத்தை ஒட்டியே இவர் கொல்லப்பட்ட நாள் குறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.[8]
அரசாங்க செய்தித்தாள்கள் புலிகளின் குற்றச்சாட்டை நிராகரித்ததுடன், அதற்குப் பதிலாக விடுதலைப் புலிகளின் உள் அதிகாரப் போட்டியே இந்தத் தாக்குதல்களுக்குக் காரணம் என்று கூறியது.[6] இவரது இறுதிச் சடங்குகள் முள்ளியவளையில் உள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில் நடைபெற்றது. இவரது அண்ணன், ஐக்கிய இராச்சியத்தில் ஒரு மருத்துவராக உள்ளார்.[2]
ATM Interworking in Broadband Wireless Applications என்ற புத்தகம் இவரது நினைவாக அர்ப்பணிக்கப்பட்டது.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ Salter, Mark (2015). To end a civil war: Norway's peace engagement in Sri Lanka (in English). London: Hurst. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84904-574-2. இணையக் கணினி நூலக மைய எண் 1041254492.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Jeyaraj, D.B.S. (13 October 2001), "Death of a Tiger", The Hindu, archived from the original on 28 November 2001, பார்க்கப்பட்ட நாள் 3 January 2007
- ↑ Mr. V. Sornalingam passes away, ஹாட்லிக் கல்லூரி, பார்க்கப்பட்ட நாள் 3 January 2007
- ↑ Fair, C. Christine (2004), Urban Battle Fields of South Asia: Lessons Learned from Sri Lanka, India and Pakistan, Rand Corporation, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8330-3682-7
- ↑ Jane's Information Group (2001). "Jane's terrorism & security monitor." (in English). Jane's Terrorism & Security Monitor.: 5. இணையக் கணினி நூலக மையம்:48926648. https://www.worldcat.org/oclc/48926648.
- ↑ 6.0 6.1 6.2 Jayawardhana, Walter (29 September 2001), "Air Wing leader killed was specialicing (sic) in suicide bombing by micro light aircraft", LankaWeb, பார்க்கப்பட்ட நாள் 3 January 2007
- ↑ Jeyaraj, D.B.S. (13 October 2001), "Predators and Prey", The Hindu, archived from the original on 18 December 2001, பார்க்கப்பட்ட நாள் 3 January 2007
- ↑ "LTTE condemns assassination of senior leader", TamilNet, 26 September 2006, பார்க்கப்பட்ட நாள் 3 January 2007
- ↑ Subramaniam, Sivananda; Sreetharan, Muthuthamby (2002), ATM Interworking in Broadband Wireless Applications, Norwood, Massachusetts: Artech House, p. v, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58053-285-3