சஞ்சீவ் கபூர்
சஞ்சீவ் கபூர் (Sanjeev Kapoor) (பிறப்பு: 1964 ஏப்ரல் 10) இந்தியவைச் சேர்ந்த பிரபல சமையல்காரரும், தொழில்முனைவோரும், பிரபல தொலைக்காட்சி ஆளுமையுமாவார். இவர், ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான "கானா கசானா"வை தொகுத்து வழங்கினார். இது ஆசியாவில் 120 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. 2010இல் 500 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டிருந்தது.[1] 24 X 7 புட் அன்ட் லைப்ஸ்டைல் என்ற தொலைக்காட்சி நிறுவனத்தின் புட் புட் என்ற புதிய தொலைக்காட்சி நிறுவனத்தின் உலகின் முதல் சமையல்காரர் ஆவார். [2]
சஞ்சீவ் கபூர் | |
---|---|
பிறப்பு | 10 ஏப்ரல் 1964 அம்பாலா, பஞ்சாப், இந்தியா (தற்போதைய அரியானா, இந்தியா) |
கல்வி | புதுடெல்லி, பூசாவில் உள்ள உணவு & ஊட்டச்சத்து உணவக மேலாண்மை தொழில்நுட்பக் கழகம் |
பணி | வாலுவர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் & தொழில் முனைவு |
பாணி | இந்திய உணவுமுறை |
தொலைக்காட்சி | சிக்னேச்சர், கசானா, தி எல்லோ சில்லி, பின் யின் கஃபே, கோல்ட் லீஃப் பங்கெட்ஸ், சுரா வே |
வாழ்க்கைத் துணை | அல்யோனா கபூர் |
விருதுகள் | பத்மசிறீ (2017) |
வலைத்தளம் | |
Sanjeev Kapoor |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுகபூர், ஏப்ரல் 1964 இல் இந்தியாவின் அரியானா மாநிலத்தில் அமைந்துள்ள அம்பாலாவில் பிறந்தார். தனது குழந்தைப் பருவத்தை பல வட இந்திய நகரங்களில் கழித்தார்.[3][4] புதுடெல்லியின் பூசாவில் உள்ள உணவு & ஊட்டச்சத்து உணவக மேலாண்மை தொழில்நுட்பக் கழகத்திலிருந்து உணவக மேலாண்மைச் சான்றிதழ் பட்டம் பெற்ற பின்னர் 1984ஆம் ஆண்டில் விருந்தோம்பல் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர், அலியோனா என்பவரை மணந்தார். இவரது மனைவி டர்மெரிக் விஷன் பிரைவேட் லிமிடெட் என்ற இவரது வணிகத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார்.[5]
வாரணாசி, நியூசிலாந்து போன்ற பல்வேறு இடங்களில் பல உணவகங்களில் பணியாற்றிய பின்னர், 1992ஆம் ஆண்டில் மும்பையில் உள்ள சென்டார் விடுதியில் இளைய நிர்வாக சமையல்காரரானார். எச் அண்ட் எஃப்எஸ் வழங்கிய சிறந்த நிர்வாக சமையல்காரர் (செஃப்) விருது மற்றும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இந்திய சமையல் சங்கங்களின் கூட்டமைப்பு வழங்கிய மெர்குரி தங்க விருது ஆகியவற்றையும் பெற்றவர். சிங்கப்பூர் வான்வழி நிறுவனத்தின் சர்வதேச சமையல் குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இவர் உள்ளார்.[6]
விருதுகள்
தொகு- நான்காவது மிக உயர்ந்த இந்திய தேசிய மரியாதையான பத்மசிறீ (2017) [7]
- புதுடெல்லியின் உலக உணவு இந்தியா 2017 இல் 918 கிலோ கிச்சடியை நேரடியாக சமைத்ததன் மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்தார்.[8]
- ஆர்வர்டு சங்கம் வெளியிட்ட சஞ்சீவ் கபூர் பற்றிய ஆய்வு [9]
- இந்தியத் தொலைக்காட்சிக் கழக விருது (2015) - பிரபலமான சமையல்காரர் & தொழில்முனைவோருக்கு (ஜைகா-இ-ஹிந்த்)
- சிறந்த சமையல் நிகழ்ச்சிக்கான இந்திய தொலைக்காட்சி அகாடமி விருதுகள் (2010, 2004, 2002) (கானா கசானா)
- இந்திய உணவு வகைகளின் புகழ் மற்றும் பங்களிப்புக்காக இந்திய அரசால் 'இந்தியாவின் சிறந்த சமையல்காரர்' என்ற தேசிய விருது [10]
- 'இந்தியாவின் மிகவும் நம்பகமான 100 நபர்களின்' ரீடர்ஸ் டைஜஸ்ட் தனது பட்டியலில் 31 வது இடத்தையும், போர்ப்ஸ் தனது பட்டியலில் 'சிறந்த 100 இந்திய பிரபலங்களின்' பட்டியலில் 34 வது இடத்தையும் இவருக்கு அளித்தது.[11]
- மாஸ்டர் செஃப் இந்தியா சீசன் 3 மற்றும் 4 க்கான நடுவர்களின் குழுவில் இருந்தார்.[12]
மேற்கோள்கள்
தொகு- ↑ Monica Bhide (24 February 2010). "India's chef to millions". தி வாசிங்டன் போஸ்ட். https://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/02/23/AR2010022301324.html. பார்த்த நாள்: 24 January 2011.
- ↑ "Sanjeev Kapoor's Food Channel in HD". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 20 December 2010 இம் மூலத்தில் இருந்து 2013-06-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130614073324/http://articles.timesofindia.indiatimes.com/2010-12-20/people/28241632_1_astro-food-food-alyona-kapoor.
- ↑ Khan, Imran H. (12 March 2004). "A Recipe for Success". The Daily Star இம் மூலத்தில் இருந்து 29 March 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200329204830/http://archive.thedailystar.net/magazine/2004/03/02/venture.htm. பார்த்த நாள்: 29 March 2020.
- ↑ Sen, Paromita (31 March 2010). "My Fundays". The Telegraph இம் மூலத்தில் இருந்து 29 March 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200329205119/https://www.telegraphindia.com/telekids/my-fundays-31-03-2010/cid/543994. பார்த்த நாள்: 29 March 2020.
- ↑ "Sanjeev Kapoor's Food Channel in HD". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 20 December 2010 இம் மூலத்தில் இருந்து 2013-06-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130614073324/http://articles.timesofindia.indiatimes.com/2010-12-20/people/28241632_1_astro-food-food-alyona-kapoor."Sanjeev Kapoor's Food Channel in HD" பரணிடப்பட்டது 2013-06-14 at the வந்தவழி இயந்திரம். The Times of India. 20 December 2010.
- ↑ "Inside Story Chef Sanjeev Kapoor". sanjeevkapoor.com. 2013-06-26. பார்க்கப்பட்ட நாள் 2018-01-13.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ "918 Kgs Of Khichdi, It's A Guinness World Record!". 2017-11-04.
- ↑ "Sanjeev Kapoor: The Recipe for Success". 2019-04-25.
- ↑ "Top 10 Chefs in India – Most Famous and Successful".
- ↑ "Sanjeev Kapoor, the only chef in Forbes 100, ranks higher than ever before". 2017-12-22.
- ↑ "Master Chef Season 4 Cast".