சந்திராசாமி

சந்திராசாமி (Chandraswami) (இயற்பெயர்:நேமி சந்த் ஜெயின்) (பிறப்பு: 29 அக்டோபர்-1949 – இறப்பு: 23 மே 2017)[1][2] பிரலமான தாந்திரீகர், ஜோதிடர் மற்றும் ஆன்மிகத் தலைவராக அறியப்பட்டவர்.[3][4][5] இவருக்கு தில்லியில் ஆசிரமம் அமைக்க, முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நிலம் ஒதுக்கினார். பி. வி. நரசிம்ம ராவ் 1991-இல் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் அந்நிலத்தில் விஸ்வ தர்ம சன்ஸ்தான் எனும் பெயரில் ஆசிரமம் நிறுவினார்.

மேலும் முன்னாள் இந்தியப் பிரதமர்களான பி. வி. நரசிம்ம ராவ், வி. பி. சிங், சந்திரசேகர் மற்றும் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர்களின் நெருங்கிய நண்பராக சந்திரசாமி விளங்கினார். சந்திராசாமி மீது நிதி முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் இருந்தது. இலண்டன் தொழிலதிபரை ஏமாற்றிய குற்றச்சாட்டில் 1996-ஆம் ஆண்டு சந்திராசாமி கைது செய்யப்பட்டார். மேலும் அந்நிய செலாவணி விதிமுறைகளை மீறியதாக பல குற்றச்சாட்டுகள் இவர் மீது இருந்தன.[6]

இராஜீவ் காந்தி படுகொலை வழக்கில்

தொகு

1998-இல் நிறுவப்பட்ட ஜெயின் ஆணையம், இராஜீவ் காந்தி படுகொலை சதியில் தொடர்புடையவர்களாக கருதப்பட்டவர்களில் சந்திராசாமியும் ஒருவர். ஆனால் இந்திய அரசு 1998-இல் நியமித்த பல்நோக்கு ஒழுங்குநடவடிக்கை கண்காணிப்பு முகமை சந்திராசாமியை 2017-ஆம் ஆண்டில் சாகும் வரை விசாரிக்கவில்லை.

இதற்கிடையே பிப்ரவரி 2008-ஆம் ஆண்டில் சந்திராசாமி இலண்டன் செல்வதற்கு இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்தது.[7] 2011-ஆம் ஆண்டில் அந்நில செலாவணி முறைகேடு வழக்கில், இந்திய உச்ச நீதிமன்றம், சந்திராசாமிக்கு 9 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.[8] நவம்பர் 2013-ஆம் ஆண்டில் சந்திராசாமியை வெளிநாடுகளுக்குச் செல்ல ஒரு மாத அளவிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.[9]

இராஜீவ் காந்தி படுகொலையில் நேரில் தொடர்புடைய ஒற்றைக் கண் சிவராஜனுக்கு பெங்களூரில் அடைக்கலம் அளித்த வழக்கில் தொடர்புடைய ரங்கநாத் என்பவர், சோனியா காந்தியிடம் சந்திராசாமிக்கும், இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக புகார் கூறினார். இருப்பினும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் ஆட்சிக்காலத்திலும் இராஜீவ் கொலை வழக்கில் சந்திராசாமியின் பங்கு குறித்து பல்நோக்கு ஒழுங்குநடவடிக்கை கண்காணிப்பு முகமை விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.

மறைவு

தொகு

சிறுநீரகச் செயலிழப்பால் சந்திராசாமி தில்லி அப்போல்லோ மருத்துவமனையில் தமது 66-வது அகவையில் 23 மே 2017 அன்று காலமானார்.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. "Adoring the godman". இந்தியா டுடே. 1994-11-30.
  2. article.wn.com/view/2002/11/13/NEWSLINE_ANCHOR_Chandraswami_celebrates_b_day_with_villagers/[Full citation needed]
  3. "Rao's spiritual adviser behind bars: Another setback for Congress party". CNN. 1996-05-03 இம் மூலத்தில் இருந்து 2002-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20020116184657/http://www.cnn.com/WORLD/9605/03/godman.arrested/. 
  4. "Elijah Interfaith, Sharing Wisdom Fostering Peace #MakeFriends". elijah-interfaith.org. பார்க்கப்பட்ட நாள் 2020-10-28.
  5. "Shri Chandraswamiji Maharaj Ji". Archived from the original on 2011-10-14.
  6. "SC grounds Chandraswami's plans for foreign visit". தி இந்து. 2008-02-26 இம் மூலத்தில் இருந்து 2016-04-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160426180321/http://bhagydarpan.in/. 
  7. SC says no to Chandraswami's foreign trip
  8. Mahapatra, Dhananjay (2011-06-16). "SC gives Chandraswami a week to pay up Rs 9 crore FERA penalty". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2012-09-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120910203541/http://articles.timesofindia.indiatimes.com/2011-06-16/india/29664712_1_nemi-chand-jain-fera-penalty-amount. 
  9. SC grounds Chandraswami's plans for foreign visit
  10. சர்ச்சை சாமியார் சந்திராசாமி காலமானார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திராசாமி&oldid=3914121" இலிருந்து மீள்விக்கப்பட்டது