சபர் மக்கள்
சபர் மக்கள் (Sabar people) (ஷபர் மற்றும் சவோரா) முண்டா இனத்தைச் சேர்ந்த ஆதிவாசி இனக்குழுவில் ஓர் அங்கமாகும். இவர்கள் முக்கியமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் வாழ்கின்றனர். காலனித்துவ காலத்தில், இவர்கள் குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டனர். மேலும் நவீன காலங்களில் சமூக களங்கம் மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.[2][3]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
ஒடிசா | 516,402 |
மேற்கு வங்காளம் | 108,707 |
வங்காளதேசம் | 2,000 |
மொழி(கள்) | |
இலோதி | |
சமயங்கள் | |
முதன்மையாக இந்து சமயம் (99.7%) சிறுபான்மையாக பௌத்தம் (0.2%) மற்றும் அனிமசம் (0.1%)[1] | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
முண்டா, ஹோ, சந்தால் மற்றும் முண்டா மொழி பேசும் மக்கள் |
சவோரா என்றும் அழைக்கப்படும் சபர் பழங்குடியினர் இந்து காவியமான மகாபாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.[4] கிழக்கு சிங்பூம் மாவட்டத்தின் சில பகுதிகளில் முக்கியமாக முசாபானியில், இவர்கள் கரியா என அழைக்கப்படுகிறார்கள்.[5] சாகித்திய அகாதமி விருது பெற்ற வங்காள எழுத்தாளரும் ஆர்வலருமான மகாசுவேதா தேவி இந்த வன பழங்குடியினருடன் இணைந்து பணியாற்றியதற்காக அறியப்படுகிறார்.
இந்த தனித்துவமான பழங்குடியினம் முதன்மையாக ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் மிட்னாபூர் மாவட்டத்தில் காணப்படுகிறது.
வரலாறு
தொகுபாரம்பரியமாக வனங்களில் வசிக்கும் இப்பழங்குடியினர் விவசாயத்தில் அனுபவம் இல்லாதவர்களாக இருக்கின்றனர். இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக காடுகளை நம்பியுள்ளனர். சமீப ஆண்டுகளில், இப்பகுதியில் நக்சல்வாதிகளின் கிளர்ச்சி பரவியதால், காவல் துறையினர் பெரும்பாலும் காடுகளுக்குள் இவர்கள் செல்வதை கட்டுப்படுத்துகின்றனர். 2004 ஆம் ஆண்டில், மிட்னாபூர் மாவட்டத்திலுள்ள அம்லாசோலே என்ற சபர் கிராமத்தில் ஐந்து பேர் பல மாத பட்டினிக்குப் பிறகு இறந்தனர். இது தேசிய ஊடகத்தால் விவாதிக்கப்பட்டது.[6] அதைத் தொடர்ந்து, தர்பார் மகிளா சமான்வே மன்றம் இப்பகுதியில் ஒரு பள்ளியைத் தொடங்கியது. இதற்கு கொல்கத்தாவைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்களால் ஓரளவு நிதியளிக்கப்பட்டது.[7]
ஜூன் 2008 இல், சபர் அவர்களின் மேற்கு வங்காள கிராமங்களில் பலவற்றில் கடுமையான வெள்ளத்தை சந்தித்தனர். பின்னர் கத்தோலிக்க தொண்டு நிறுவனங்களிடமிருந்து பெரும் அளவிலான உதவிகளைப் பெற்றது.
காலனித்துவ காலத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக பணியாற்றுவதற்காக நூற்றுக்கணக்கான சபர்கள் இன்றைய வங்காளதேசத்துக்கு குடிபெயர்ந்தனர். இன்று, அவர்களில் சுமார் 2000 பேர் வடகிழக்கு மாவட்டமான மௌல்விபஜார், நந்தராணி, ஹரிஞ்சாரா மற்றும் ராஜ்காட் போன்ற பகுதிகளில் வசிக்கின்றனர்.
தெற்கு 24 பர்கனா மாவட்டத்திலுள்ள பதர்பிரதிமா சமூகத் தொகுதியின் கீழுள்ள சுந்தரவனக் காடுகளில் மேற்கு வங்காளத்தின் மிட்னாபூர் மாவட்டத்திலிருந்து குடிபெயர்ந்த சபர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது சபர் சமூகத்தைச் சேர்ந்த 2500-3000 மக்கள் அங்கு வசித்து வருகின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sabar in India". Joshua Project.
- ↑ Dilip D'Souza on the Sabar tribe ரெடிப்.காம், 16 October 1999.
- ↑ Accused Of Being Accursed by Dilip D'Souza, ரெடிப்.காம், 10 June 1999.
- ↑ Orissa Tribes bharatonline.com'.
- ↑ Sabar Tribe india9.com.
- ↑ "Red Faced". இந்தியா டுடே. 28 June 2004. http://www.indiatoday.com/itoday/20040628/states2.html. பார்த்த நாள்: 17 October 2015. "Budhu Sabar, who lost his father Samay and sister Mongli earlier this year, has no doubt they starved to death. "My father had nothing but water for almost a fortnight before his death," says Budhu. "In the end he got fever and I watched him die without food.""
- ↑ "Missing mantris: Sex workers step in". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 20 March 2009. http://www.hindustantimes.com/special-news-report/Special/Missing-mantris-Sex-workers-step-in/Article3-391166.aspx. பார்த்த நாள்: 8 November 2018.
ஆதாரங்கள்
தொகு- Roy, H.M. (1986). Savara, The snake charmer. Calcutta: Institute of social research and applied anthropology.
- Roy, B.K. (1970). The Savar a Scheduled Tribe in West Bengal (PDF). Monograph Series, Part V-B (iv), Vol-I, West Bengal - Census 1961. Office of the Registrar General, India.
மேலும் வாசிக்க
தொகு- The Book of the Hunter, by மகாசுவேதா தேவி, translated by Sagaree and Mandira Sengupta, Seagull, 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7046-204-5.
- Hated, Humiliated, Butchered by மகாசுவேதா தேவி, Tehelka, 12 October 2007
- The Why-Why Girl, by மகாசுவேதா தேவி, illustrated by Kanyika Kini, Tulika Press, 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788181460189.