சபாக் பெர்ணம் மக்களவைத் தொகுதி

(சபாக் பெர்ணம் மக்களவை தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சபாக் பெர்ணம் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sabak Bernam; ஆங்கிலம்: Sabak Bernam Federal Constituency; சீனம்: 沙白安南联邦选区 என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், சபாக் பெர்ணம் மாவட்டம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P092) ஆகும்.

சபாக் பெர்ணம் (P092)
மலேசிய மக்களவைத் தொகுதி
சிலாங்கூர்
Sabak Bernam (P092)
Federal Constituency in Selangor
சிலாங்கூர் மாநிலத்தில்
சபாக் பெர்ணம் மக்களவைத் தொகுதி

மாவட்டம்சபாக் பெர்ணம் மாவட்டம்
சிலாங்கூர்
வாக்காளர் தொகுதிசபாக் பெர்ணம் தொகுதி
முக்கிய நகரங்கள்சபாக் பெர்ணம்
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்2018
கட்சி பெரிக்காத்தான்
இதற்கு முன்னர்
நடப்பில் இருந்த தொகுதி
2022
மக்களவை உறுப்பினர்கலாம் சலான்
(Kalam Salan)
வாக்காளர்கள் எண்ணிக்கை51,842[1]
தொகுதி பரப்பளவு344 ச.கி.மீ[2]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022




2022-இல் சபாக் பெர்ணம் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (82.1%)
  சீனர் (13.1%)
  இதர இனத்தவர் (0.2%)

சபாக் பெர்ணம் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டில் முதல் தேர்தல் நடைபெற்றது. அத்துடன் அதே 1959-ஆம் ஆண்டில் இருந்து சபாக் பெர்ணம் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.

சபாக் பெர்ணம் மாவட்டம்

தொகு

சபாக் பெர்ணம் மாவட்டத்திற்கு வடக்கில் பேராக் மாநிலம்; கிழக்கில் உலு சிலாங்கூர் மாவட்டம்; தெற்கில் கோலா சிலாங்கூர் மாவட்டம்; மேற்கில் மலாக்கா நீரிணை ஆகியவை உள்ளன.

சபாக் பெர்ணம் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: சபாக்; சுங்கை பெசார்; செகிஞ்சான். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் சபாக் பெர்ணம் நகரம் ஆகும்.

சபாக் பெர்ணம் அமைவிடம்

தொகு

இந்த நகரம் ஒரு கடலோர நகரமாகும். மலாக்கா நீரிணையை ஒட்டி அமைந்து இருக்கும் இந்த நகரம், பெர்ணம் ஆற்றின் (Bernam River) தெற்கே, பேராக் சிலாங்கூர் மாநிலங்களின் எல்லையில் உள்ளது.

சபாக் பெர்ணம் மாவட்டம், சிலாங்கூர் மாநிலத்தின் நெல் விளையும் கேந்திரப் பகுதி. அந்த வகையில் சபாக் பெர்ணம் மாவட்டத்தின் முக்கியப் பொருளாதார நடவடிக்கை விவசாயம். இந்த மாவட்டம் சிலாங்கூர் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மாவட்டம். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.

நிர்வாகப் பகுதிகள்

தொகு

சபாக் பெர்ணம் மாவட்டம், சபாக் பெர்ணம் நகராட்சி மன்றத்தால் நிர்வாகம் செய்யப் படுகிறது.

சபாக் பெர்ணம் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்

தொகு
  1. பாகன் நக்கோத்தா ஒமார் (Bagan Nakhoda Omar)
  2. பாஞ்சாங் பெண்டேனா (Panchang Bendena)
  3. பாசிர் பாஞ்சாங் (Pasir Panjang)
  4. சபாக் (Sabak)
  5. சுங்கை பாஞ்சாங் (Sungai Panjang)

சபாக் பெர்ணம் வாக்குச் சாவடிகள்

தொகு

2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), சபாக் பெர்ணம் மக்களவைத் தொகுதி 32 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[3]

சட்டமன்ற தொகுதி தேர்தல் வட்டாரம் குறியீடு வாக்குச் சாவடி
சுங்கை ஆயர் தாவார்
(Sungai Air Tawar)
(N01)
Parit Baharu Baruh 092/01/01 SJK (C) Poay Chneh Parit Baru Sungai Air Tawar
Sungai Tengar Utara 092/01/02 SRA Al-Ittikhadiah Sungai Tengar
Sungai Air Tawar 092/01/03 SK Seri Mawar Sungai Air Tawar
Sungai Bernam 092/01/04 SJK (T) Ladang Sungai Bernam
Sungai Air Tawar Selatan 092/01/05 SRA Tebuk Mufrad Sungai Air Tawar
Sungai Tengar Selatan 092/01/06 SK Sungai Tengar
Kampung Parit Baharu 092/01/07 SK Parit Baharu
Kampung Teluk Belaga 092/01/08 SK Seri Cempaka
Beting Kepah 092/01/09 SJK (C) Phooi Min Telok Rhu
Kampung Teluk Rhu 092/01/10 SK Teluk Ru
Simpang Empat 092/01/11 SK Simpang 4 Bagan Nakhoda Omar
Kampung Sekendi 092/01/12 SK Sekendi Sabak Bernam
Kampung Banting 092/01/13 SK Kampong Banting
Kampung Batu 38 Buruh 092/01/14 SK Batu 38 Sabak Bernam
Kampung Baharu 092/01/15 SK Kampung Baharu Sabak Bernam
சபாக்
(Sabak)
(N02)
Sabak Bernam Barat 092/02/01 SMA Muhamamdiah Pekan Sabak
Kampung Air Manis 092/02/02 Balai Kampung Batu 37 Darat
Kampung Seri Aman 092/02/03 SK Panchang Bendera Sungai Besar
Teluk Pulai 092/02/04 SK Tun Doktor Ismail
Torkington 092/02/05 SJK (T) Ladang Sabak Bernam
Sabak Bernam Timur 092/02/06
  • Kolej Tunku Abdul Rahman Putra Sabak Bernam
  • SK Doktor Abdul Latiff
Bagan Nira 092/02/07 SRA Hidayatul Hasanah Bagan Nira'
Kampung Sapintas 092/02/08 SRA Batu 2 Sapintas
Kampung Bagan Terap 092/02/09 SK Bagan Terap
Bagan Terap Parit Sembilan 092/02/10 SK Seri Bahagia Sungai Besar
Tebuk Kenchong 092/02/11 SK Pair Enam Sungai Besar
Parit Enam 092/02/12 SRA Parit 6 Timur Sungai Besar
Parit Dua Timur 092/02/13 Dewan Orang Ramai Parit Enam Sungai Besar
Parit Tiga & Empat 092/02/14 Balai Parit 4 & 5 Barat
Parit Satu Barat 092/02/15 SK Seri Makmur Sungai Besar
Sungai Lias 092/02/16 SJK (C) Sin Min Sungai Besar
Batu 4 Sapintas 092/02/17 SK Sapintas

சபாக் பெர்ணம் மக்களவைத் தொகுதி

தொகு
சபாக் பெர்ணம் மக்களவை உறுப்பினர்கள் (1959 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
உலு சிலாங்கூர் தொகுதியில் (Ulu Selangor Federal Constituency) இருந்து உருவாக்கப்பட்டது
கூட்டரசு சட்ட மேலவை
1-ஆவது மலாயா மக்களவை P077 1959–1963 சையது அசிம்
(Syed Hashim)
கூட்டணி
(அம்னோ)
மலேசிய நாடாளுமன்றம்
1-ஆவது மலேசிய மக்களவை P077 1963–1964 சையது அசிம்
(Syed Hashim)
கூட்டணி
(அம்னோ)
2-ஆவது மக்களவை 1964–1969 முஸ்தபா அப்துல் ஜாபர்
(Mustapha Abdul Jabar)
1969–1971 நாடாளுமன்றம் முடக்கப்பட்டது[4][5]
3-ஆவது மக்களவை P077 1971–1974 முஸ்தபா அப்துல் ஜாபர்
(Mustapha Abdul Jabar)
கூட்டணி
(அம்னோ)
1973–1974 பாரிசான்
(அம்னோ)
4-ஆவது மக்களவை P073 1974–1978
5-ஆவது மக்களவை 1978–1982 சமாலுதீன் சுகைமி
(Jamaluddin Suhaimi)
6-ஆவது மக்களவை 1982–1986
7-ஆவது மக்களவை P082 1986–1990 உசைன் தாயிப்
(Hussein Taib)
8-ஆவது மக்களவை 1990–1995 மகபுத் அசிம்
(Mahbud Hashim)
9-ஆவது மக்களவை P086 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004 சைனல் டகலான்
(Zainal Dahlan)
11-ஆவது மக்களவை P092 2004–2008 மாட் யாசிர் இக்சான்
(Mat Yasir Ikhsan)
12-ஆவது மக்களவை 2008–2012 அப்துல் ரகுமான் பக்ரி
(Abdul Rahman Bakri)
2012–2013 காலி [6]
13-ஆவது மக்களவை 2013–2018 முகமட் பசியா முகமட் பக்கே
(Mohd Fasiah Mohd Fakeh)
பாரிசான்
(அம்னோ)
14-ஆவது மக்களவை 2018
2018–2019 சுயேச்சை
2019–2020 பாக்காத்தான்
(பெர்சத்து)
2020–2022 பெரிக்காத்தான்
(பெர்சத்து)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் கலாம் சலாம்
(Kalam Salan)

சபாக் பெர்ணம் சட்டமன்ற தொகுதிகள்

தொகு
நாடாளுமன்ற தொகுதி சட்டமன்ற தொகுதிகள்
1955–59* 1959–1974 1974–1986 1986–1995 1995–2004 2004–2018 2018–தற்போது
சபாக் பெர்ணம் சபாக்
சுங்கை ஆயர் தாவார்
சுங்கை ஆயர் தாவார்
சுங்கை பெசார்
சுங்கை ஆயர் தாவார்
சுங்கை பெசார்

சபாக் பெர்ணம் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)

தொகு
# சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N1 சுங்கை ஆயர் தாவார் ரிசாம் இசுமாயில் பாரிசான் (அம்னோ)
N2 சபாக் சாலேகான் முக்கி பெரிக்காத்தான் (பாஸ்)

சபாக் பெர்ணம் தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (சபாக் பெர்ணம் தொகுதி)
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
51,609 -
வாக்களித்தவர்கள்
(Turnout)
41,485 79.40%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
40,977 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
62 -
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
446 -
பெரும்பான்மை
(Majority)
5,056 12.34%
வெற்றி பெற்ற கட்சி பெரிக்காத்தான்
[7]

சபாக் பெர்ணம் வேட்பாளர் விவரங்கள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (சபாக் பெர்ணம் தொகுதி)
சின்னம் வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
  கலாம் சலான்
(Kalam Salan)
பெரிக்காத்தான் 17,973 43.86% 43.86  
  அப்துல் ரகீம் பக்ரி
(Abdul Rahman Bakri)
பாரிசான் 12,917 31.52% 7.05
  சம்சுல் மாரிப் இசுமாயில்
(Shamsul Ma'arif Ismail)
பாக்காத்தான் 9,627 23.49% -10.06
  எயிசுலான் யூசோப்
(Eizlan Yusof)
உள்நாட்டு போராளிகள் கட்சி 460' 1.12% +1.12  

மேற்கோள்கள்

தொகு
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A) Polling Hours For the General Eelection of the Legislative Assembly of the State of Selangor" (PDF). Attorney General's Chambers. 15 July 2023. Archived from the original (PDF) on 28 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 பிப்ரவரி 2024. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. Ahmad Fauzi Mustafa (2012-03-12). "Hanya Yang di-Pertuan Agong ada kuasa panggil Parlimen bersidang". Utusan Online. http://ww1.utusan.com.my/utusan/info.asp?y=2012&dt=0312&pub=Utusan_Malaysia&sec=Rencana&pg=re_05.htm. 
  5. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-09.
  6. "Najib: Sabak Bernam MP Remains UMNO Member". 3 March 2012. Archived from the original on 2016-10-12. பார்க்கப்பட்ட நாள் 2016-05-09.
  7. "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SELANGOR" (PDF). ATTORNEY GENERAL’S CHAMBERS. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.

மேலும் காண்க

தொகு