சம்தா பிரசாத்

பண்டிட் சம்தா பிரசாத் (Samta Prasad) (20 சூலை 1921 - 1994) பனாரசு கரானாவைச் (பள்ளி) சேர்ந்த ஒரு இந்திய பாரம்பரிய இசைக்கலைஞரும், கைம்முரசு இணைக் கலைஞருமாவார். [1] மேரி சூரத் தேரி அங்கென் (1963) மற்றும் சோலே (1975) உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் இவர் கைம்முரசு இணையை வாசித்துள்ளார். மேலும் திரைப்பட இசையமைப்பாளர் ராகுல் தேவ் பர்மன் இவரது சீடர்களில் ஒருவராவார்.[2]

சம்தா பிரசாத்
ஒரு நிகழ்ச்சியில் சித்தார் கலைஞர் சாகித் பர்வேசுவுடன் சம்தா பிரசாத்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்சமதா பிரசாத் மிசுரா
பிற பெயர்கள்குடாய் மகாராஜ்
பிறப்புசூலை 18, 1921(1921-07-18)
பிறப்பிடம்வாரணாசி, உத்தரப் பிரதேசம்
இறப்பு1994 (வயது 73)
இசை வடிவங்கள்இந்திய பாரம்பரிய இசை
இசைக்கருவி(கள்)கைம்முரசு இணை

இவர் பச்சா மிசுரா என்றும் அழைக்கப்படும் பண்டிட் அரி சுந்தரின் மகனாவார். இவரது தாத்தா பண்டிட். ஜெகந்நாத் மிசுரா, இவரது மூதாதையர்கள் பண்டிட். குடாய் மகாராஜ் என்றும் அழைக்கப்படும் பிரதாப் மகாராஜ் ஆகியோரும் திறமையான இசைக்கலைஞர்கள் ஆவர். [3]

1979 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய இசை, நடனம் மற்றும் நாடக அகாதமியான சங்கீத நாடக அகாதமி, இவருக்கு சங்கீத நாடக அகாதமி விருதினை வழங்கியது. 1991இல் இந்திய அரசிடமிருந்து பத்ம பூசண் விருதினையும் பெற்றுள்ளார். [4] [5]

ஆரம்பகால வாழ்க்கையும் பயிற்சியும் தொகு

பண்டிட் சம்தா பிரசாத், உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி அருகே உள்ள கபீர் சௌரா, என்ற ஊரில் கைம்முரசு இணை, பக்கவாத்தியம் பாரம்பரியத்தில் மூழ்கிய ஒரு குடும்பத்தில் 20 சூலை 1921 இல் பிறந்தர்.

இவரது ஆரம்பப் பயிற்சி தனது தந்தையிடமிருந்து தொடங்கியது. இவருக்கு ஏழு வயதாக இருந்தபோது இவரது தந்தை இறந்தார். அதன்பிறகு, இவர் பண்டிட். பிக்கு மகாராஜிடமும், பல்தேவ் சகாய் என்பவரிடமும் சீடராக இருந்தார். தினமும் நீண்ட நேரம் பயிற்சி செய்யத் தொடங்கினார். [6]

தொழில் தொகு

தனது முதல் பெரிய நிகழ்ச்சியை 1942 இல் அலகாபாத் சங்கீத மாநாட்டில் வழங்கினார். அங்கு இவர் அங்குள்ள இசைக் கலைஞர்களைக் கவர்ந்தார். பின்னர், விரைவில் தன்னை ஒரு துணையாகவும் தனிமனிதராகவும் நிலைநிறுத்திக் கொண்டார்.

தனது வாழ்நாள் முழுவதும், கொல்கத்தா, மும்பை, சென்னை மற்றும் இலக்னோ போன்ற இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தினார். பிரான்ஸ், உருசியா, எடின்பரோ போன்ற இடங்களில் இந்திய கலாச்சார அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

ஜனக் ஜனக் பாயல் பாஜே, மேரி சூரத் தேரி ஆங்கென், பசந்த் பஹார், அசாமப்தா, சோலே போன்ற இந்தி படங்களிலும் கைம்முரசு இணையை வாசித்தார். இசை இயக்குனர் எஸ். டி. பர்மன் மேரி சூரத் தேரி ஆங்கேன் படத்தில் முகமது ரபி பாடிய "நாச் மோரா மன்வா மாகன் திக்தா திகி திகி" என்ற பாடலுக்கு இவர் வாரணாசியிலிருந்து வரும்வரை பாடல் பதிவை ஒத்திவைத்தார்.

இறப்பு தொகு

இவர் மே 1994 இல் இந்தியாவின் புனேவில் காலமானார்.

விருதுகளும், அங்கீகாரமும் தொகு

1972 ஆம் ஆண்டில் இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. மேலும் 1979இல் சங்கீத நாடக அகாதமி விருது 1987இல் குடியரசுத் தலைவர் உதவித்தொகை ஆகியவற்றைப் பெற்றார். இவர் 1991இல் பத்ம பூசண் விருதினைப் பெற்றார். [7]

சீடர்கள் தொகு

இவரது குறிப்பிடத்தக்க சீடர்களில் பண்டிட் போலா பிரசாத் சிங், பாட்னா, பண்டிட் சசாங்கா சேகர் பக்சி, நிதின் சாட்டர்ஜி, நாபா குமார் பாண்டா, ராகுல் தேவ் பர்மன் (ஆர்.டி.பர்மன்), குர்மித் சிங் விர்தி, பார்த்தசாரதி முகர்ஜி, சத்யநாராயண் பசிஸ்ட் . மாணிக்கராவ் போபட்கர், தனது மகன் குமார் லால் மிசுரா ஆகியோர் அடங்குவர். [6]

குறிப்புகள் தொகு

12. ^ Life history of the Pandit Gudai Maharaj பரணிடப்பட்டது 2016-01-29 at the வந்தவழி இயந்திரம்.

வெளி இணைப்புகள் தொகு

காணொளி இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்தா_பிரசாத்&oldid=3552934" இருந்து மீள்விக்கப்பட்டது