சாபஸ் நதீம்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

சாபஸ் நதீம் (பிறப்பு: ஆகஸ்ட் 12, 1989) இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம் ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் ஆகிய உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். மேலும் இவர் 2004 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2005 ஆம் ஆண்டில் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமான இவர் 2019 ஆம் ஆண்டில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். இவர் தற்போது வரை 111 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 2,132 ஓட்டங்களையும் , 109 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 842 ஓட்டங்களையும் ,1 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 1 ஓட்டங்களையும் எடுத்துள்ளார். 14 வயதிற்குட்பட்ட பீகார் துடுப்பாட்ட அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது ஜார்க்கண்ட் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடுகிறார்.[1]

சாபஸ் நதீம்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சாபஸ் நதீம்
பிறப்பு12 ஆகத்து 1989 (1989-08-12) (அகவை 35)
போகாரோ, பீகார், இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைஇடது-கை வழமைச் சுழல்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 296)19 அக்டோபர் 2019 எ. தென்னாபிரிக்க
கடைசித் தேர்வு5 பெப்ரவரி 2021 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2004–தற்போதுவரைசார்க்கண்ட்
2011–2018டெல்லி கேபிடல்ஸ் (squad no. 88)
2019–2020சன்ரைசர்ஸ் ஐதராபாத் (squad no. 88)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது பஅ
ஆட்டங்கள் 1 111 106
ஓட்டங்கள் 1 2,132 830
மட்டையாட்ட சராசரி 14.60 15.09
100கள்/50கள் 0/0 1/7 0/1
அதியுயர் ஓட்டம் 1* 109 53
வீசிய பந்துகள் 104 27,096 5,638
வீழ்த்தல்கள் 4 428 145
பந்துவீச்சு சராசரி 10.00 28.42 27.80
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 19 4
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 5 0
சிறந்த பந்துவீச்சு 4/18 7/45 8/10
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 48/– 33/–
மூலம்: CricInfo, 5 பெப்ரவரி 2021

செப்டம்பர் 2018 இல், பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டியில் சிறந்த பந்துவீச்சு வீரருக்கான புதிய சாதனையை ராஜஸ்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 10 ஓட்டங்களுக்கு எட்டு இலக்குகளைக் வீழ்த்தினார் .அவர் 2019 ஆம் ஆண்டில் இந்தியா தேசிய துடுப்பாட்ட அணிக்காக சர்வதேச அளவில் அறிமுகமானார்.

துடுப்பாட்டப் போட்டிகள்

தொகு

முதல் தரத் துடுப்பாட்டம்

தொகு

இவர் 2004 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.2004 ஆம் ஆண்டில் ஜாம்செத்பூர் டிசம்பர் 4 இல் கேரளா துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் ஜார்க்கண்ட் துடுப்பாட்ட அணி சார்பாக இவர் விளையாடினார்.[2]

இருபது20

தொகு

2007 ஆம் ஆண்டில் இவர் இருபது20 போட்டியில் அறிமுகமானார். ஏப்ரல் 3 இல் கான்பூரில் ஒரிசா துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் இவர் ஜார்க்கண்ட் துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் போட்டியில் விளையாடினார்.

பட்டியல் அ

தொகு

2005 ஆம் ஆண்டில் இவர் பட்டியல் அ போட்டியில் அறிமுகமானார். சனவரி 13, கொல்கத்தா ஒரிசா துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் இவர் ஜார்க்கண்ட் ஆ துடுப்பாட்ட அணி சார்பாக போட்டியில் விளையாடினார்.

சர்வதேச போட்டிகள்

தொகு

2019 ஆம் ஆண்டில் இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். அக்டோபர் 19, ராஞ்சியில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணி சார்பாக போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 11 ஓவர்கள் வீசி 22 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.4 ஓவர்களை மெய்டனாக வீசி 2 இலக்குகளைக் கைப்பற்றினார்.பின் மட்டையாட்டத்தில் 5 பந்துகளில் ஓர் ஓட்டங்கள் எடுத்து இருதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 6 ஓவர்கள் வீசி 18 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். 1 ஓவர்களை மெய்டனாக வீசி 2 இலக்குகுகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இந்தியத் துடுப்பாட்ட அணி ஓர் ஆட்டப் பகுதி மற்றும் 202 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[3]

சான்றுகள்

தொகு
  1. "Shahbaz Nadeem - Delhi Daredevils player - IPLT20.com". IPLT20. Archived from the original on 2018-05-13. பார்க்கப்பட்ட நாள் 2019-12-07.
  2. "If a slot in the XI isn't empty, then you just wait for your chance - Shahbaz Nadeem". ESPN Cricinfo. 21 October 2019. பார்க்கப்பட்ட நாள் 21 October 2019.
  3. "Uncapped Krunal Pandya, Nadeem named in India squads for pakistan, Windies T20Is, Dhoni left out". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 26 October 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாபஸ்_நதீம்&oldid=3718834" இலிருந்து மீள்விக்கப்பட்டது