சாம்பல்-தலை தேன்சிட்டு

சாம்பல்-தலை தேன்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஏதோபைகா
இனம்:
ஏ. பிரிமிஜெனியா
இருசொற் பெயரீடு
ஏதோபைகா பிரிமிஜெனியா
காச்சுசுகா, 1941
வேறு பெயர்கள்

ஏதோபைகா பிரிமிஜெனிசு

சாம்பல் தலை தேன்சிட்டு (Grey-hooded Sunbird)(ஏத்தோபிகா பிரிமிஜெனியா) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

விளக்கம்

தொகு
 
2009-ல் பிலிப்பீன்சில் வெளியிடப்பட்ட அஞ்சல் முத்திரையில் சாம்பல் தலை தேன்சிட்டு

ஈபேர்டு அமைப்பு இப்பறவையினை "மிண்டானாவோவில் உள்ள - உயரமான மலைக்காடுகளின் சிறிய பறவை என்றும், சாம்பல் தலை மற்றும் மார்பினையும், ஆலிவ்-பச்சை முதுகு மற்றும் இறக்கைகளையும், வெள்ளை மேல் வயிற்றினையும், மஞ்சள் நிற கீழ் வயிறு மற்றும் பக்கவாட்டினையும் கொண்டது. இதனுடைய வாலின் முனை வெண்மையாக உள்ளது. ஆணுக்குப் பச்சை நிற நெற்றி மற்றும் கன்னத் திட்டுகள் உள்ளன. வடகிழக்கு மிண்டானாவோவைச் சேர்ந்த ஆண்களுக்கு மேல் மார்புக்குக் கீழே மஞ்சள் நிறப் பட்டை உள்ளது. அபே மற்றும் தோபோலி தேன்சிட்டுகள் போன்றது இவை; ஆனால் சாம்பல் தலை தேன்சிட்டின் மேல் வயிறு வெள்ளை நிறமுடையது” என விவரிக்கின்றது.[2]

துணையினங்கள்

தொகு

இந்தச் சிற்றினத்தின் கீழ் இரண்டு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:

  • ஏத்தோபிகா பிரிமிஜெனியா பிரிமிஜெனியா: மேற்கு, மத்திய மற்றும் தெற்கு மிண்டானாவோவில் காணப்படுகிறது; வெற்று மார்பகம்
  • ஏத்தோபிகா பிரிமிஜெனியா டையுடே வடகிழக்கு மிண்டானாவோவில் காணப்படுகிறது; சாம்பல் நிற ஒட்டுமொத்த தோற்றம், மார்பகத்தில் மஞ்சள் புள்ளியுடன் வெள்ளைக் கோடு [3]

பரவல்

தொகு

சாம்பல் தலை தேன்சிட்டு வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் மற்றும் 1,000 மீ உயரத்திற்கு மேல் வன விளிம்புகளில் காணப்படுகிறது. இவை 1,700 மீ உயரம் வரை காணப்படலாம். இவை வாழைப்பூக்களைச் சுற்றி அடிக்கடி காணப்படும்.

நிலை

தொகு

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம், இந்த பறவையை 2020-ல் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக மதிப்பிட்டுள்ளது. இது முன்னர் அச்சுறு நிலைய அண்மித்த இனமாக இருந்தது. இதன் வரம்பு வரையறுக்கப்பட்டதாக இருந்தபோதிலும், இது உள்நாட்டில் பொதுவானது என்று கூறப்படுகிறது. இது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 50 பறவைகள் என்ற அளவில் காணப்படுகிறது. இதன் எண்ணிக்கை சுமார் 20,000 - 49,999 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கரடுமுரடான மற்றும் அணுக முடியாத மலைகளில் காணப்படுவதா, இதன் வாழ்விடத்தின் பெரும்பகுதியை அப்படியே இருக்க அனுமதித்துள்ளது. இருப்பினும், காடழிப்பு, சுரங்கம், நில மாற்றம் மற்றும் வெட்டுதல் மற்றும் எரித்தல் ஆகியவற்றின் மூலம் வாழ்விட இழப்பால் இதனுடைய வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வாழ்விடப் பகுதிகளுக்குப் பாதுகாப்பை வழங்குதல் மற்றும் ஹமிகியூட்டான் மலைப் போன்ற முக்கியமான பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தப் பல முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aethopyga primigenia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. BirdLife International (2020). "Aethopyga primigenia". IUCN Red List of Threatened Species 2020: e.T22718048A179048340. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T22718048A179048340.en. https://www.iucnredlist.org/species/22718048/179048340. பார்த்த நாள்: 14 November 2021. 
  2. "Grey-hooded Sunbird". Ebird.
  3. Allen, Desmond (2020). Birds of the Philippines. Barcelona: Lynx and Birdlife International Field Guides. pp. 360–361.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்-தலை_தேன்சிட்டு&oldid=3826865" இலிருந்து மீள்விக்கப்பட்டது