சார்லி மகார்ட்னி
சார்லஸ் ஜார்ஜ் " சார்லி " மகார்ட்னி (Charles George "Charlie" Macartney 27 ஜூன் 1886 - 9 செப்டம்பர் 1958) ஒரு முன்னாள் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 1907 மற்றும் 1926 க்கு இடையில் 35 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். துடுப்பாட்ட வரலாற்றில் மிக நேர்த்தியான மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் அவரது நெருங்கிய நண்பரும் முன்மாதிரியுமான விக்டர் ட்ரம்பருடன் ஒப்பிடப்படுகிறார். இவர் "தி கவர்னர் ஜெனரல்" என்று அழைக்கப்பட்டார். வரலாற்றில் மிகப் பெரிய மட்டையாளர் என்று கருதப்படுபவரான டான் பிராட்மேன் மாகார்ட்னியின் மட்டையாடும் திறன் தனது துடுப்பாட்ட வாழ்க்கையில் உத்வேகம் அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | சார்லஸ் ஜார்ஜ் மகார்ட்னி | |||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | மேற்கு மைட்லாண்ட் நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா | 27 சூன் 1886|||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | செப்டம்பர் 9, 1958 லிட்டில் பே, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | தெ கவர்னர் ஜெனெரல் | |||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 3 அங் (1.60 m) | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடது-கை வழமைச் சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் | 13 டிசம்பர் 1907 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 14 ஆகஸ்ட் 1926 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
1905/06-1926/27 | நியூ சவுத் வேல்ஸ் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
1909/10 | ஒடாகோ ஓல்ட்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: CricInfo, அக்டோபர், 24 2007 |
ஆரம்ப ஆண்டுகளில்
தொகுமகார்ட்னி 1886 ஜூன் 27 அன்று நியூ சவுத் வேல்ஸின் வெஸ்ட் மைட்லேண்டில் பிறந்தார்.[1] விக்டோரியாத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்று முதல் வகுப்பு போட்டிகளில் நியூ சவுத் வேல்ஸை பிரதிநிதித்துவப்படுத்திய பந்துவீச்சாளரான அவரது தாய்வழி தாத்தா ஜார்ஜ் மூரிடம் இவர் குழந்தையாக இருந்தபோது துடுப்பாட்டம் விளையாட கற்றுக் கொண்டார்.
1898 ஆம் ஆண்டில், மகார்ட்னியும் அவரது குடும்பத்தினரும் மைட்லாண்டிலிருந்து சிட்னிக்கு குடிபெயர்ந்தனர். தனது பள்ளித் துடுப்பாட்ட போட்டிகளில் பன்முக வீரராக கலந்துகொண்டார். உள்ளூர் பூங்காவில் தனது சகோதரருடன் தொழில்முறையற்ற கோடைகால துடுப்பாட்டப் போட்டிகளின் போது விளையாட்டுகளின் போது துடுப்பாட்டம் பற்றி அதிகம் கற்றுக்கொண்டதாகக் கருதினார். அந்தப் போட்டிகளில் அவர்களின் நாய் ஒரு களத்தடுப்பாளராகச் செயல்பட்டது.[2] அவரது பள்ளி வாழ்க்கையின் போதுதான், பின்னாளில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைவரான மோன்டி நோபல் மாகார்ட்னியை கவனித்தார், அவர் ஒரு செய்தித்தாள் கட்டுரையில் இவரைப் பாராட்டினார்.[3]
பள்ளியை விட்டு வெளியேறிய பிறகு, மகார்ட்னி சிட்னியின் சசெக்ஸ் ஸ்ட்ரீட் கப்பல்துறைகளுக்கு அருகில் உள்ள ஒரு பழம் மற்றும் காய்கறி விற்பனை செய்யும் வணிகருக்காகப் பணிபுரிந்தார், மதிய உணவு இடைவேளையின் போது துடுப்பாட்ட பயிற்சி செய்வதன் மூலம் தனது மட்டையாடும் திறனை வளர்த்துக் கொண்டார்.[4]
1902 ஆம் ஆண்டில், சிட்னி கிரேடு கிரிக்கெட்டின் முதல் பிரிவில் மகார்ட்னி, வடக்கு சிட்னி துடுப்பாட்ட சங்கத்தில் சேர்ந்தார்.பின்னர் 1905-06 ஆம் ஆண்டில் வடக்கு புறநகரில் உள்ள கார்டன் சங்கத்திற்குச் சென்றார். அவர் அந்தச் சங்கத்திற்காக 1933–34 வரை 47 வயதாகும் வரை அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினார், அதில் 54.62 எனும் மட்டையாட்ட சராசரியோடு 7648 ஓட்டங்கள் எடுத்தார்.
முதல் தரத் துடுப்பாட்டம்
தொகுமாகார்ட்னியின் துடுப்பாட்டத் திறனை மாநில தேர்வாளர்கள் கவனித்தனர்.[4][5] மேலும் அவர் 1905-06 ஆண்டின் தொடக்கத்தில் குயின்ஸ்லாந்துக்கு எதிராக நியூ சவுத் வேல்ஸில் துடுப்பாட்டப் போட்டியில் இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[6] நியூ சவுத் வேல்ஸின் முதல் ஆட்டப் பகுதியில் அந்த அணி 691 ஓட்டங்கள் எடுத்தது. அந்தப் போட்டியில் இவர் 56 ஓட்டங்கள் எடுத்தார்.முதல் ஆட்டப் பகுதியில் இவருக்குப் பந்துவீச வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் இரண்டாவது ஆட்டப் பகுதியில் இவர் 80 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 இழப்புகளைக் கைப்பற்றினார்.
சான்றுகள்
தொகு- ↑ Andrews, B. G. (1986). "Macartney, Charles George (1886–1958)". Australian Dictionary of Biography. பார்க்கப்பட்ட நாள் 2007-06-04.
- ↑ Perry, pp. 113–114.
- ↑ Cashman; Franks; Maxwell; Sainsbury; Stoddart; Weaver; Webster (1997). The A-Z of Australian cricketers. pp. 178–179.
- ↑ 4.0 4.1 Cashman; Franks; Maxwell; Sainsbury; Stoddart; Weaver; Webster (1997). The A-Z of Australian cricketers. pp. 178–179.
- ↑ Perry, p. 114.
- ↑ "Player Oracle CG Macartney". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 2009-05-14.