சாளுங்கா (Chalunka, also known as Chalunkha), இந்தியாவின் வடக்கில் லடாக் ஒன்றியப் பகுதி, நூப்ரா பள்ளத்தாக்கு வருவாய் வட்டம், துர்டுக் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த கிராமம் ஆகும்.[1][2]இக்கிராமம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள பல்டிஸ்தானை பிரிக்கும் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே உள்ளது. லடாக் மலைத்தொடர்-காரகோர மலைகளுக்கு இடையே அமைந்த இக்கிராமத்தில் சியோக் ஆறு பாய்கிறது.

சாளுங்கா
சுளுங்கா
கிராமம்
சாளுங்கா is located in லடாக்
சாளுங்கா
சாளுங்கா
லடாக் ஒன்றியப் பகுதியின் நூப்ரா பள்ளத்தாக்கு வருவாய் வட்டத்தில் சாளுங்கா கிராமத்தின் அமைவிடம்
சாளுங்கா is located in இந்தியா
சாளுங்கா
சாளுங்கா
சாளுங்கா (இந்தியா)
ஆள்கூறுகள்: 34°49′26″N 76°56′06″E / 34.824°N 76.935°E / 34.824; 76.935
நாடு இந்தியா
ஒன்றியப் பகுதிலடாக்
மாவட்டம்லே
வருவாய் வட்டம்நூப்ரா பள்ளத்தாக்கு
கிராம ஊராட்சிசாளுங்கா
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்516
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, சாளுங்கா கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 516 ஆகும். இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் முறையே 53 மற்றும் 223 ஆக உள்ளனர். பால்டி மக்களான இவர்கள் பால்டி மொழியைப் பேசுகின்றனர்.

வரலாறு

தொகு

1947 இந்திய பாகிஸ்தான் போரின் போது, இக்கிராமம் உள்ளிட்ட கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமித்து கொண்டது. பின்னர் 1971 இந்திய-பாகிஸ்தான் போரின் முடிவில் பல்டிஸ்தான் பகுதியில் இருந்த சாளுங்கா, தியாக்சி, துர்டுக், தாங் உள்ளிட்ட நான்கு கிராமங்களை இந்தியா கைப்பற்றி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துடன் இணைத்தது. 2019ஆம் ஆண்டில் லடாக் ஒன்றியப் பகுதியில் இக்கிராமம் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Vohra, Mythic Lore from Nubra Valley (1990), ப. 231.
  2. "Blockwise Village Amenity Directory 2014–15" (PDF). Ladakh Autonomous Hill Development Council. Archived from the original (PDF) on 3 April 2018.
ஆதாரங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாளுங்கா&oldid=4042072" இலிருந்து மீள்விக்கப்பட்டது