தாக்சி அல்லது தியாக்சி (Takshi, also known as Tyakshi),இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதி, லே மாவட்டம், நூப்ரா பள்ளத்தாக்கு வருவாய் வட்டத்தில் அமைந்த கிராமம் ஆகும். [1]இக்கிராமம் இந்திய-பாகிஸ்தானை பிரிக்கும் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ளது. இக்கிராமத்தில் சியோக் ஆறு பாய்கிறது. இது இமயமலை மற்றும் காரகோரம் மலைக்களுக்கு இடையே உள்ளது.

தியாக்சி
தாக்சி
கிராமம்
தியாக்சி is located in லடாக்
தியாக்சி
தியாக்சி
தியாக்சி is located in இந்தியா
தியாக்சி
தியாக்சி
ஆள்கூறுகள்: 34°52′42″N 76°48′57″E / 34.8783°N 76.8159°E / 34.8783; 76.8159
நாடு இந்தியா
ஒன்றியப் பகுதிலடாக்
மாவட்டம்லே
வருவாய் வட்டம்நூப்ரா
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்886
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
194401

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தாக்சி கிராமத்தின் மக்கள் தொகை 886 மட்டுமே.[2] இங்குள்ள இசுலாமிய பழங்குடி மக்களான பால்டி மக்கள் பால்டி மக்கள் மொழி பேசுகின்றனர்.

வரலாறு

தொகு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித்-பல்டிஸ்தானின் ஒரு கிராமமாக இருந்த தாக்சி கிராமம், 1971 இந்திய பாகிஸ்தான் போரின் முடிவில் தாக்சி, துர்டுக், தாங், சாளுங்கா ஆகிய நான்கு கிராமங்களை இந்திய இராணுவம் கைப்பற்றி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 2019ம் ஆண்டில் இக்கிராமத்தை லடாக் ஒன்றியப் பகுதியில் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Block wise Village Amenity Directory" (PDF). Ladakh Autonomous Hill Development Council. பார்க்கப்பட்ட நாள் 2015-07-23.
  2. Nubra Tehsil Population census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியாக்சி&oldid=4042047" இலிருந்து மீள்விக்கப்பட்டது