சிகார் பள்ளத்தாக்கு

பாகித்தானிலுள்ள பள்ளத்தாக்கு

சிகார் பள்ளத்தாக்கு (Shigar Valley ) என்பது வடக்கு பாக்கித்தானில் உள்ள கில்கிட் பால்டிஸ்தானில் அமைந்துள்ளது. பள்ளத்தாக்கு வழியே சிகார் ஆறு ஓடுகிறது. மேலும், இது சிகார் நகரத்தை மையமாகக் கொண்டுள்ளது. இந்த பள்ளத்தாக்கு ஸ்கர்டுவிலிருந்து அஸ்கோல் வரை சுமார் 170 கிமீ நீண்டு காரகோரத்தின் உயரமான மலைகளுக்கான நுழைவாயிலாகும்.. சிகார் நகரம் பள்ளத்தாக்கின் மிகப்பெரிய குடியேற்றப் பகுதியாக உள்ளது. பள்ளத்தாக்கு ஒரு தொலைதூர மற்றும் பெரும்பாலும் அணுக முடியாத இடமாக இருந்தாலும், பள்ளத்தாக்கில் பல கிராமங்கள் அமைந்துள்ளன. பள்ளத்தாக்கின் கடைசி குடியிருப்பு அஸ்கோல் ஆகும். இது உயரமான மலைகளிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. சிகார் நகரம் ஸ்கர்டு மாவட்டத்தின் நிர்வாக துணைப் பிரிவாக இருந்தது. அது இப்போது மாவட்டமாக உள்ளது.

சிகார்
சிகார் மாவட்டம்
ஆள்கூறுகள்: 35°25′32″N 75°43′59″E / 35.42556°N 75.73306°E / 35.42556; 75.73306
நாடுபாக்கித்தான்
பிராந்தியம்வடக்கு நிலங்கள்
மாவட்டம்சிகார்
நேர வலயம்ஒசநே+5 (பாக்கித்தானின் நேரவலயம்)
 • கோடை (பசேநே)ஒசநே+6 (GMT+5)

இந்த பள்ளத்தாக்கு சிந்து ஆறுக்கு நீரை வழங்குகிறது. இது ஸ்கர்டு நகருக்கு அருகில் உள்ளது. கடினமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், மலையேறுபவர்களுக்கு இது ஒரு பிரபலமான இடமாகும். மேலும், உலகின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான கே-2 கொடுமுடி காரகோரம் மலைகளுக்கான நுழைவாயிலாக இருப்பதால், இந்த பள்ளத்தாக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.[1]

சினா மொழி மற்றும் கோசிரி மொழி பேசும் இரண்டு இனக்குழுக்கள் இங்குள்ளன.[2] உள்ளூர் பால்டி சமூகத்தின் மருத்துவத் தாவரங்களின் பயன்பாடு இனவியல் ஆய்வில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Shigar Valley". 31 August 2008.
  2. "Attractions :Gilgit Baltistan".
  3. Abbas, Zaheer; Khan, Shujaul Mulk; Alam, Jan; Khan, Sher Wali; Abbasi, Arshad Mehmood (2017-09-25). "Medicinal plants used by inhabitants of the Shigar Valley, Baltistan region of Karakorum range Pakistan". Journal of Ethnobiology and Ethnomedicine 13 (1): 53. doi:10.1186/s13002-017-0172-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:1746-4269. பப்மெட்:28946889. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகார்_பள்ளத்தாக்கு&oldid=3862460" இலிருந்து மீள்விக்கப்பட்டது