சிக்கபேட்டே
பெங்களூர் நகரத்தின் ஒரு பகுதி
(சிக்குப்பேட்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிக்கபேட்டே (Chickpet) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின், பெங்களூரிலுள்ள ஒரு பகுதியாகும். இது 400 ஆண்டுகள் வரலாறு சிறப்புமிக்கது. நகரின் பழமையான பகுதிகளில் ஒன்றான இது மொத்த மற்றும் சில்லறை துணி கடைகளுக்கு பிரபலமானது. இது பெங்களூரில் உள்ள எலக்ட்ரிக் மார்க்கெட் பகுதிக்கு அருகில் உள்ளது. பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இதன் வேர்கள் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.[2] சிவாஜி தனது குழந்தைப் பருவத்தின் ஆரம்ப ஆண்டுகளை தனது தந்தை சாகாஜி போஸ்லேவுடன் பெங்களூரில் கழித்ததாகவும் கூறப்படுகிறது. அவருடைய அரண்மனை இன்று சிக்பேட் என்று அழைக்கப்படும் பகுதியில் இருந்தது. இன்று தென்னிந்தியாவில் சென்னையிலுள்ள சௌகார்பேட்டைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மார்வாடி சமூகம் வசிக்கும் இடம்.
சிக்கபேட்டே Chikkapete | |
---|---|
அண்மைப்பகுதி | |
ஆள்கூறுகள்: 12°58′19″N 77°34′38″E / 12.97186°N 77.57721°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூரு நகர மாவட்டம் |
மெட்ரோ | பெங்களூர் |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 560053 [1] |
தொலைபேசி குறியீடு | 080 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் |
வாகனப் பதிவு | கேஏ 05 |
இணையதளம் | karnataka |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Chickpet Pin Code, Chickpet , Bangalore Map , Latitude and Longitude , Karnataka". Indiamapia.com. பார்க்கப்பட்ட நாள் 2 April 2019.
- ↑ "Chickpet | Kanjeevaram Sarees | Ancient Temples | Petes | Silk Saree Shops | Raja Market". Archived from the original on 23 July 2013. பார்க்கப்பட்ட நாள் 23 June 2013.