சிட்டிலம்சேரி
சிட்டிலம்சேரி (Chittilamchery, ⓘ) என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இந்த ஊர் வடக்கஞ்சேரி-கொல்லங்கோடு பிரதான சாலையில் அமைந்துள்ளது. இது ஆலத்தூர் வட்டம் மெலர்கோடு ஊராட்சிக்கு உட்பட்டது.[1][2]
சிட்டிலம்சேரி | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 10°36′N 76°33′E / 10.60°N 76.55°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பாலக்காடு |
நிறுவப்பட்டது | 1965 மார்ச் 15 |
பரப்பளவு | |
• நிலம் | 25.52 km2 (9.85 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 24,540 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீடு | 678704 |
இடக் குறியீடு | +91 4922 |
வாகனப் பதிவு | KL-49, KL-9 |
சொற்பிறப்பியல்
தொகுஇந்த பெயர் "சுடிலம் சேரி" என்பதிலிருந்து வந்திருக்கலாம், அதாவது" "இல்லங்கள்" (வீடுகள் நம்பூதிரிகள்) சூழப்பட்ட இடம். சிட்டிலம்சேரியில் உள்ள ஒடியங்காடு, தற்போது கொடியன்காடு என்று அழைக்கப்படுகிறது, இது பிரித்தானியர் ஆட்சியின் போது சூனியம் செய்யும் ஒடியன்களின் இடமாக இருந்தது. பெண்கள் இருளில் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர். பிரித்தானியர் ஆட்சி ஒடியம் வழிபாட்டு முறை அல்லது சேவை தடை செய்ததால் இந்த பாரம்பரியம் நிறுத்தப்பட்டது.
வரலாறு
தொகுசிட்டிலம்சேரியில் முதல் பள்ளி 1885 ஆம் ஆண்டில் இராமு ஐயரால் நிறுவப்பட்டது. 15 மார்ச் 1965 முதல் மெலர்கோடு ஊராட்சி டி. என். பரமேஸ்வரன் தலைமையில் உருவானது.[3]
பொருளாதாரம்
தொகுகிராமத்தின் பெரும்பான்மை மக்களின் வருவாய்க்கு வேளாண்மையே முதன்மை வருமான ஆதாரமாக உள்ளது. சிறு எண்ணிக்கையினர் வங்கி, தகவல் தொழில்நுட்பம், வணிகம் போன்ற பல்வேறு துறைகளில் இருந்து வருவாய் ஈட்டுகின்றனர். இணைய வசதிகள், அக்ஷயா மையம் மற்றும் செல்பேசி கோபுரத் தொடர்புகள் போன்ற வசதிகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. மாநில நெடுஞ்சாலை 58 இல் அமைந்துள்ள இந்த கிராமம் பயணிகளுக்கு ஒரு முக்கியமான சந்திப்பாகும். மேல் மருத்துவ வசதிகளுக்கும், மருத்துவ அவசர காலங்களிலும் கிராமவாசிகள் கோயம்புத்தூர் அல்லது திருச்சூர் போன்ற நகரங்களைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது இந்த கிராமம் மெலர்கோடு ஊராட்சியின் கீழ் வருகிறது. இது நெம்மர ஊராட்சி ஒன்றியத்துக்கும் , ஆலத்தூர் வட்டத்துக்கும் உட்பட்டது.[4]
திரைப்படம்
தொகுவினீத் சீனிவாசன் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான மனோகரம் திரைப்படம் இந்த இடத்தில் படமாக்கப்பட்டது.[5]
பிருத்விராஜ் நடித்த 2012 படம் மோலி அத்தை ராக்ஸ், படம் ஓரளவு இங்கு படமாக்கப்பட்டது.
கல்வி
தொகுசிட்டிலம்சேரியில் எம்.என். கே. எம் உயர்நிலைப் பள்ளி (1947 இல் நிறுவப்பட்டது), ஏ. யு. பி. எஸ் சிட்டிலம்சேரி, முத்துக்குன்னி ஏ. எல். பி பள்ளி, ஏ. யு. பி. எஸ் மெலர்கோடு, என். எஸ். எஸ் ஆங்கில வழி துவக்கப்பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகள் உள்ளன.
சமயம்
தொகுசெருநெட்டூரி பகவதி கோயில் அல்லது சிட்டிலம்சேரி காவு கோயில் இந்த கிராமத்தில் அமைந்துள்ளது. மூலத்தான தெய்வமாக செருநாட்டுரி அம்மா அல்லது செரிநாட்டுரி பகவதி உள்ளார். கிராமத்தில் பெரும்பாலும் இந்துக்களே உள்ளனர், என்றாலும் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் உள்ளனர். செருநத்தூரி பகவதி கோயிலில் சனவரி மாத இறுதியில் ஒரு வாரத்தில் ஆராட்டு விழா கொண்டாடப்படுகிறது, இதில் கலாச்சார நிகழ்ச்சிகள், பஜனைகள், பக்தி பாடல்கள் பாடப்படுகின்றன. மால்மா களி (போராட்டன் களி) கோயில் வளாகத்திற்குள் நடைமுறையில் உள்ளது.
சுவர்கநாதர் கோயில், அரக்குன்னி சிவன் கோயில், தாழகோட்டு காவு ஆகியவை மற்ற முக்கியமான கோவில்களாகும்.
திருவிழாக்கள்
தொகுசிட்டிலம்சேரி விழா என்பது ஒரு வகை பூரம் ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஒரு சமய விழா ஆகும். விஷூவுக்கு 15 நாட்கள் அடுத்து ஏப்ரல் 28 அல்லது 29 அன்று வேலா கொண்டாடப்படுகிறது, இது செருனட்டரி கோயிலை மையமாக்க் கொண்டு நடத்தப்படுகிறது. இது வெளிச்சம், பஞ்ச வாத்தியம், பட்டாசு, மேடை நிகழ்ச்சிகள் (கான மேளா) ஆகியவற்றைக் கொண்ட பல அடுக்குப் நிகழ்வுகளைக் கொண்டுள்ளது. திருவிழாவிற்கு முந்தைய நாளில் அருகிலுள்ள பள்ளி விளையாட்டு அரங்கில் சாமயா-பிராடர்சனம் [யானையின் அலங்காரங்களின் கண்காட்சி] நிகழ்கிறது.
கோயிலில் நடக்கும் பிற திருவிழாக்கள் ஆரட்டு மற்றும் மளமள களி ஆகும்.[6][7]
புவியியல்
தொகுசிட்டிலம்சேரி பல சிறிய குளங்களையும் (ஆனாரி குளம், கக்காட்டு குளம், பதியிலா குளம், சோரம் குளம், நொச்சுகுளம், கப்பல் குளம் உட்பட), நெல் வயல்களாலும் சூழப்பட்டுள்ள ஒரு கிராமமாகும்.
சிட்டிலம்சேரி நென்மாராவிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பொள்ளாச்சி-திருச்சூர் பேருந்து வழித்தடமான மா.நெ 58 பிரதான சாலையில் இந்த கிராமம் அமைந்துள்ளதால், இந்த கிராமமானது பரபரப்பான சந்திப்பாக உள்ளது.
- கிராம ஊராட்சி: മേലാർകോട് (மேலார்கோடு)
- வட்டம்: ആലത്തൂർ (ஆலத்தூர்)
- சட்டமன்றத் தொகுதி: ആലത്തൂർ (ஆலத்தூர்)
- பாராளுமன்ற தொகுதி: ആലത്തൂർ (ஆலத்தூர்) ( 2010இக்கு முன்பு பாலக்காடு)
- வார்டுகளின் எண்ணிக்கை: 16
- மக்கள் தொகை: 23,706
- ஆண்: 11,497
- பெண்: 12,209
- மக்கள் அடர்த்தி: 929
- ஆதாரம்: மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு 2001[8]
- எல்லைகள்
- வடக்கு: ஆலத்தூர், எரிமையூர்
- கிழக்கு: பல்லாசனா, நெம்மரா
- தெற்கு: ஆயிலூர்
- மேற்கு: வந்தாழி, வடக்கஞ்சேரி
அருகிலுள்ள நகரங்கள்
தொகுதிருச்சூர்-42.7 கி. மீ.
பாலக்காடு - 29.7 கி. மீ.
வடக்கஞ்சேரி-9.4 கி. மீ.
ஆலத்தூர்-7.6 கி. மீ.
முடபள்ளூர்-3.8 கி. மீ.
திரிபல்லூர்-6.2 கி. மீ.
நென்மறை-5.6 கி. மீ.
கொல்லங்கோடு - 18.1 கி. மீ.
கோவிந்தபுரம்-33.4 கி. மீ.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Chittilamchery, Palakkad". Chittilamchery.blogspot.in. பார்க்கப்பட்ட நாள் 2020-01-19.
- ↑ You Scenic Beauty. "You Scenic Beauty". Chittilamchery.home.blog. பார்க்கப்பட்ட நாள் 2020-01-19.
- ↑ "Sametham - Kerala School Data Bank". Sametham.kite.kerala.gov.in. 2019-02-20. பார்க்கப்பட்ட நாள் 2020-01-19.
- ↑ "Akshaya Centre of Chittalanchery in Palakkad - Akshaya Web Portal - Gateway of Opportunities". Akshaya.kerala.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-01-19.
- ↑ "Manoharam Movie Review: A sweet story that fills us with hope". Timesofindia.indiatimes.com. 2019-09-27. பார்க்கப்பட்ட நாள் 2020-01-19.
- ↑ "Chittilamchery Vela 2019 Promotion video". YouTube. 2019-02-24. பார்க்கப்பட்ட நாள் 2020-01-19.
- ↑ "Chittilamchery Utsavam arattu 2015". YouTube. 2015-01-11. பார்க்கப்பட்ட நாள் 2020-01-19.
- ↑ "Local Self Government Department | Local Self Government Department". Lsgkerala.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-01-19.