சித்தாரா தேவி

சித்தாரா தேவி (Sitara Devi) (பிறப்பு: 1920 நவம்பர் 8 -இறப்பு: 2014 நவம்பர் 25) இவர் பாரம்பரிய கதக் பாணியிலான நடனக் கலைஞரும், பாடகியும் ஆவார். இவர் பல விருதுகள் மற்றும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். மேலும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹால் (1967) மற்றும் நியூயார்க்கின் கார்னகி ஹால் (1976) பல மதிப்புமிக்க இடங்களில், தனது நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். [2]

சித்தாரா தேவி
Sitara Devi 2009 - still 67757 crop.jpg
2009இல் சித்தாரா தேவி
பிறப்புதனலட்சுமி
நவம்பர் 8, 1920(1920-11-08) [1]
கொல்கத்தா, பிரித்தானிய இந்தியா
இறப்பு25 நவம்பர் 2014(2014-11-25) (அகவை 94)
மும்பை, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிகதக் நடனக் கலைஞர்
வாழ்க்கைத்
துணை
நசீர் அகமது கான் (முதல் கணவர்), கே. ஆசிப் (இரண்டாவது கணவர்), பிரதாப் பரோட் (மூன்றாவது கணவர்)
பிள்ளைகள்இரஞ்சித் பரோட், ஜெயன்ந்தி மாலா

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணிதொகு

சித்தாரா தேவி 1920 நவம்பர் 8 ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார், அந்த ஆண்டில் இந்திய தீபாவளியின் திருவிழாவிற்கு முந்தைய தண்டேராஸ் பண்டிகையுடன் இந்த நாள் ஒத்துப்போனது. [3] எனவே அந்த நாளில் குறிப்பாக வழிபடும் அதிர்ஷ்ட தெய்வத்தின் நினைவாக தனலட்சுமி என்று இவருக்கு பெயரிடப்பட்டது. [1] [4]

தனலட்சுமியின் தந்தைவழி குடும்பம் பிராமண பாரம்பரியத்தைச் சேர்ந்தது. இவர்கள் முதலில் வாரணாசியைச் சேர்ந்தவர்கள். ஆனால் பல ஆண்டுகளாக கொல்கத்தாவில் வசித்து வந்தனர். இவரது தந்தை சுகதேவ் மகாராஜ், ஒரு பிராமணரும், மற்றும் சமசுகிருதத்தில் வைணவ அறிஞரும் ஆவார். ஆனால் அவர் கதக் நடன வடிவத்தை கற்பிப்பதன் மூலமும், நிகழ்த்துவதன் மூலமும் தனது வாழ்வாதாரத்தைப் பெற்றார். இவரது தாயார் மத்சயா குமாரி என்பவரார். இவரது குடும்பம் கலைஞர்களின் சமூகத்தைச் சேர்ந்தது. நேபாள அரச குடும்பத்துடன் தொடர்பு கொண்டிருந்தது. சுகதேவ் மகாராஜ், நேபாள அரசவையில் பணியாற்றியபோது, பாரம்பரிய நடனம் மீதான தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். பரதநாட்டியம் மற்றும் நாட்டிய சாஸ்திரம் குறித்து ஆழமாக ஆய்வு செய்தார்; அவர் கதக் நடனத்தையும் பயிற்சி செய்தார். அதில் அவர் சிறந்து விளங்கினார். கலை நிகழ்ச்சிகளில் பின்னணி கொண்ட ஒரு பெண்ணுடன் அவர் திருமணம் செய்து கொண்டதன் மூலம் இது வளர்ந்தது. நடனத்தின் மீதான ஆர்வம் அவர் தனது மகள்களான அலக்நந்தா, தாரா மற்றும் தன்னோ ஆகியோருக்கு அனுப்பிய ஒன்று; மற்றும் அவரது மகன்களான சௌபே மற்றும் பாண்டே ஆகியோருக்கும் கடத்தினார்.

தனகட்சுமி இரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்தார். இழந்த இந்திய நிகழ்த்து கலைகளை (கதக் போன்றவை) புத்துயிர் பெறும்படி அவர் இவரை ஊக்குவித்தார். அதனை கண்ணியமான அந்தஸ்துக்கு உயர்த்துவதை உறுதி செய்தார். கதக் பாணியிலான நடனத்தை சீர்திருத்துவதில் பங்களிப்பதன் மூலம் சுகதேவ் மகாராஜ் இந்த இலக்கை அடைய முடிவு செய்தார். அந்த நேரத்தில், கதக் ஆடல் கணிகை பெண்கள் அல்லது சிறுவர்களால் நிகழ்த்தப்பட்டது. ஒழுக்கமான குடும்பங்களின் பெண்கள் இந்த நடனத்தை கற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படவில்லை. அவர் உள்ளடக்கத்திற்கு மத உள்ளீட்டை வழங்க முடிவு செய்தார். இது ஆடல் கணிகை பெண்கள் பயன்படுத்தும் உள்ளடக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மேலும், இந்த வகை நடனத்தை தனது மகள்களுக்கும் மகன்களுக்கும் கற்பிக்க முடிவு செய்தார். அவரது சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்களால் அவதூறு செய்யப்பட்டனர். சுகதேவ் மகாராஜ் கிட்டத்தட்ட அவர்களிடமிர்நுது வெளியேற்றப்பட்டார்.  

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

சித்தாரா தேவி மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அந்த நேரத்தில் (1956 க்கு முன்பு), வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதும், கணவன்-மனைவியாக வாழ்வதும் சாத்தியமில்லாமல் இருந்தது. இதற்காக சித்தாரா இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் இந்த திருமணம் குறுகிய காலமே நீடித்தது. எனவே அவர்கள் விரைவில் விவாகரத்து பெற்றனர். சித்தாரா தேவியின் இரண்டாவது திருமணம் திரைப்பட தயாரிப்பாளர் கே. ஆசிஃப் என்பவருடன் இருந்தது. இந்த திருமணமும் மிக நீண்ட காலம் நீடிக்கவில்லை. இரண்டாவது விவாகரத்துக்குப் பிறகு, சித்தாரா குஜராத்தி பாரம்பரியத்தைச் சேர்ந்த இந்து மனிதரான பிரதாப் பரோட்டை மணந்தார். [5] இந்த தம்பதியினர் 1950 இல் பிறந்த ரஞ்சித் பரோட் என்ற மகனுடன் ஆசீர்வதிக்கப்பட்டனர். [6]

அங்கீகாரம்தொகு

தேவி சங்கீத நாடக அகாதமி விருது (1969) மற்றும் பத்மசிறீ (1973), காளிதாஸ் சம்மன் (1995) மற்றும் நிருத்யா நிபுணா உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.  

பத்ம பூசண் விருதை ஏற்க மறுத்த இவர், "இது ஒரு அவமானம், ஒரு மரியாதை அல்ல" என்று அறிவித்தார். மேலும் இந்திய பத்திரிகை அறக்கட்டளையின் ஒரு அறிக்கை இவரை மேற்கோள் காட்டியது: "கதக்கிற்கு நான் செய்த பங்களிப்பை இந்த அரசு அறிந்திருக்கவில்லையா? பாரத ரத்னாவை விட குறைவான எந்த விருதையும் நான் ஏற்க மாட்டேன். " [7]

2017 நவம்பர் 8 அன்று, சித்தாரா தேவியின் 97 வது பிறந்தநாளுக்காக கூகுள் இந்தியாவில் ஒரு டூடுலைக் காட்டியது. [8] [9]

பின் வரும் வருடங்கள்தொகு

கதக் இவரது கோட்டை என்றாலும், பரதநாட்டியம் மற்றும் இந்தியாவின் பல வகையான நாட்டுப்புற நடனங்கள் உள்ளிட்ட பல நடனம் ஆகியவற்றில் இவர் ஒரு திறமையான நடனக் கலைஞராகவும் இருந்தார். இவர் உருசிய பாலே மற்றும் மேற்கத்திய உலகின் பிற நடனங்களையும் கற்றுக்கொண்டார். வயதாகும்போது, இவரது நடன நடவடிக்கைகள் குறைந்துவிட்டன, மேலும் நடனத் துறையில், குறிப்பாக கதக் பாணியிலான நடனத்தில், தனது தந்தையும் இவரும் செய்த ஆராய்ச்சியை இணைக்கும் ஒரு புத்தகத்தைத் தொகுப்பதில் இவர் ஈடுபட்டிருந்தார். பாலிவுட் பிரபலங்களான மதுபாலா, ரேகா, மாலா சின்ஹா, மற்றும் கஜோல் ஆகியோருக்கு கதக் நடனம் கற்றுக் கொடுத்தார். இவர் தனது போதனையை முறைப்படுத்துவதைக் கற்பனை செய்தார், மேலும் கதக் பயிற்சி அகாதமியை அமைக்கத் திட்டமிட்டார்.

நீண்டகால நோயால் பாதிக்கப்பட்ட இவர் மும்பையில் உள்ள ஜாஸ்லோக் மருத்துவமனையில் 2014 நவம்பர் 25 அன்று இறந்தார். [10] [11]

குறிப்புகள்தொகு

 1. 1.0 1.1 "Kathak queen Sitara Devi still youthful at 91". Hindustan Times. 2 September 2011. 7 April 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 April 2014 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
 2. "Sitara Devi – The Kathak Legend". India Travel Times. 30 March 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 January 2012 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Dhanteras on 8th November 1920".
 4. "Interview : State of the art". The Hindu. 31 July 2009. 4 ஆகஸ்ட் 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 April 2014 அன்று பார்க்கப்பட்டது.
 5. https://chiloka.com/celebrity/sitara-devi-hindi
 6. "My mother's responsible for my musical inclination: Ranjit Barot". The Times of India(TOI). 17 March 2013. 4 April 2014 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Sitara Devi turns down Padma Bhushan – Times of India". 14 July 2016 அன்று பார்க்கப்பட்டது.
 8. https://www.google.com/doodles/sitara-devis-97th-birthday
 9. https://www.youtube.com/watch?v=Jktv3PdWiBg
 10. "Danseuse Sitara Devi passes away – The Economic Times". 25 November 2014. 25 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
 11. "Kathak danseuse Sitara Devi passes away in Mumbai". Zee News. 25 November 2014. 25 November 2014 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தாரா_தேவி&oldid=3553942" இருந்து மீள்விக்கப்பட்டது