சித்ரா நாயக்

சித்ரா ஜெயந்து நாயக் (Chitra Jayant Naik)(1918-2010) என்பவர் இந்தியக் கல்வியாளர், எழுத்தாளர் மற்றும் சமூக சேவகர் ஆவார். இவர் இந்தியக் கல்வி நிறுவனத்தின் தலைவர் மற்றும் இந்தியத் திட்டக் குழுவின் உறுப்பினர் ஆவார்.[1][2] இவர் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட முறைசாரா கல்வி குழுவின் தலைவராக இருந்தார். தேசிய கல்வியறிவு திட்டத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.[3] இந்திய அரசு 1986ஆம் ஆண்டில் இவருக்கு நாட்டின் நான்காவது மிக உயர்ந்த இந்தியக் குடிமகனுக்கான விருதான பதம்சிறீ விருதினை வழங்கி கௌரவித்தது.[4]

சித்ரா நாயக்
பிறப்பு(1918-07-15)15 சூலை 1918
புனே, மகாராட்டிரம், இந்தியா
இறப்பு24 திசம்பர் 2010(2010-12-24) (அகவை 92)
புனே, மகாராட்டிரம், இந்தியா
பணிகல்வியாளர்
எழுத்தாளர்
சமூக சேவகர்
அறியப்படுவதுகல்விச் சீர்திருத்தம்
வாழ்க்கைத்
துணை
ஜெயந் பாண்டுரங் நாயக்
விருதுகள்பத்மசிறீ
பிரனாவாண்ந் விருது
ஜீவன் சதானா விருது
கர்ம வீர் பகுராவ் பட்டீல் சமாஜ் சேவா விருது
தாகூர் கல்வியறிவு விருது
யுனெஸ்கோ இராஜா ராய் சிங் விருது
ராஜீவ் காந்தி விருது
யுனெஸ்கோ ஜான் அமோசு கோமெனியசு பன்னாட்டு விருது
ஜம்னாலால் பஜாஜ் விருது
வலைத்தளம்
Website of IIE

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

சித்ரா நாயக் 1918 ஜூலை 15 அன்று மேற்கு இந்திய மாநிலமான மகாராட்டிராவில் உள்ள புனேயில் பிறந்தார்.[5] இவர் கலைப்பிரிவில் பட்டம் பெற்றார்.[6] கல்வியியலில் மற்றொரு பட்டப்படிப்பைப் பெறத் தனது படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[1] 1953ஆம் ஆண்டில், இவர் முழு ஆய்வு நிதி பெற்று[7] நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மேலாய்வினை மேற்கொண்டார்.[1] கோலாப்பூர் மாவட்டத்தின் புதான்காட்டில் கிராமப்புற நிறுவனத்தின் தனது பணியினைத் தொடங்கினார். இங்கு இவர் கல்வி முகாம்களை ஏற்பாடு செய்து ஆதி திராவிடர், பெண்கள் சங்கங்கள் துவங்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தினப்பராமரிப்பு மையங்கள் (குழந்தைக் காப்பகம்) மற்றும் ஒரு சுகாதார மருத்துவமனை நிறுவ உதவினார்.[6]

பதவி

தொகு

1948ஆம் ஆண்டில், இவர் தனது கணவரும் புகழ்பெற்ற கல்வியியலாளருமான ஜெயந்து பாண்டுரங் நாயக்குடன் இணைந்து, இந்தியக் கல்வி நிறுவனத்தை நிறுவ உதவினார்.[8] இதன் மூலம் மும்பை பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனமாக, ஆசிரியர்களுக்கு உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகளை எளிதாக்கினார்.[9] சித்ரா நாயக் கடந்த 25 நூற்றாண்டுகளின் 100 குறிப்பிடத்தக்கக் கல்வி சிந்தனையாளர்களின் யுனெஸ்கோ சிறந்த சிந்தனையாளர்கள் என்ற தொகுப்பினை தொகுக்க ஜெயந்து நாயக்கின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்கினார்.[10] இவர் இந்தியக் கல்வி நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றினார். இக்காலத்தில் வீட்டில் செவிலியம், முதலுதவி, தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகிய துறைகளில் பெண்களுக்குப் பயிற்சி மையங்களை அமைத்தார்.[6] இவர் சிறுவர் இல்லம் (பால பவன்) மற்றும் சமூக சேவகர்களுக்கான பயிற்சி மையத்தை நிறுவினார். பெண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு குறித்த கல்வி முகாம்களை ஏற்பாடு செய்தார். கிராமப்புற வளர்ச்சிக்கான கிராம ஊராட்சிகளை தயார்ப்படுத்துவது குறித்த திட்ட ஆய்களை நடத்தினார்.[6]

நாயக் புது தில்லியின் தேசிய அடிப்படை கல்வி நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் முறைசாரா கல்வி குழுவின் தலைவராகவும் இருந்தார்.[3] இவர் இந்தியத் திட்டக் குழுவின் உறுப்பினராக இருந்தார். ஒன்பதாவது இந்திய ஐந்தாண்டு திட்ட (1997-2002) குழுவின் உறுப்பினராக பொதுக் கல்வி, சமூக நலன் மற்றும் பட்டியல் சாதி/பட்டியல் பழங்குடியினரின் நலன் சார்ந்த குழுவில் கலந்து கொண்டார்.[2] இவர் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வயதுவந்தோர் கல்வி (1978-83) செயற்குழுவில் உறுப்பினராக இருந்தார்.[11] மத்திய ஆலோசனை வாரியத்தால் அமைக்கப்பட்ட கல்வி பரவலாக்கப்பட்ட மேலாண்மைக்கான குழுவின் நிரந்தர உறுப்பினர் (1993)[12] பணியாற்றினார். தேசிய எழுத்தறிவு திட்டம்[3] மற்றும் அதன் பன்னாட்டு ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் வயது வந்தோர் சர்வதேச கழகம் மற்றும் வாழ்நாள் கல்வி குழு உறுப்பினராகவும் செயல்பட்டார்.[13] இவர் மகாராட்டிரா அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பிலிருந்தார். மகாராட்டிரா மாநில உயர் நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி இயக்குநராகவும், உயர் கல்வி இயக்குநராகவும், கல்வி இயக்குநராகவும் பல்வேறு கல்வித் தொடர்பான உயர் பதவிகளில் பணியாற்றியுள்ளார்.[1] நாயக், ஷிக்ஷன் அனி சமாஜ் [14] ( மராத்தி ), இந்தியாவில் கல்வியில் புதுமை,[15] கல்வி சிந்தனையாளர் லோக்மான்ய திலக் உள்ளிட்ட பல புத்தகங்களின் ஆசிரியராக உள்ளார்.[16] குழந்தைகளுக்காக இவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். இதில் நான்கு புத்தகங்கள் தேசிய புத்தக அறக்கட்டளையால் பதினான்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.[1]

இறப்பு

தொகு

இவரது வாழ்க்கையின் பிற்பகுதியில், இதயம் மற்றும் நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டார். நாயக் திசம்பர் 2010இல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.[7] ஆனால் சிகிச்சைப் பலனின்றி 2010ஆம் ஆண்டு கிறித்துமசு தினத்தன்று, தனது 92 வயதில், புனேயில் மரணமடைந்தார்.[1]

விருதுகளும் கவுரவங்களும்

தொகு

சித்ரா நாயக் பல்கலைக்கழக மானியக் குழுவின் கல்வி ஆராய்ச்சிக்கான பிரணவானந்த் விருது மற்றும் புனே பல்கலைக்கழகத்தின் ஜீவன் சாதனா விருது பெற்றவர்.[7] இந்திய அரசு 1986இல் இவருக்கு பத்மசிறீ விருதை வழங்கியது.[4] 1989இல் கர்ம வீர் பாஹுராவ் பாட்டீல் சமாஜ் சேவா முதல் விருதினையும்[5] இந்திய வயது வந்தோர் கல்வி சங்கத்தின் தாகூர் எழுத்தறிவு விருதினை 1992இல் பெற்றார். மேலும் இதே ஆண்டு, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் பண்பாட்டு நிறுவனம் இவருக்கு ராஜா ராய் சிங் விருதினை 1992ஆம் ஆண்டு வழங்கியது.[6][17] இதைத் தொடர்ந்து சமூக சேவைக்கான ராஜீவ் காந்தி விருது மற்றும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் நிறுவன ஜான் அமோசு கொமேனியசு பன்னாட்டு விருதினையும் 2002இல் ஜம்னலால் பஜாஜ் அறக்கட்டளையின் ஜம்னாலால் பஜாஜ் விருதினையும் பெற்றார்.[6][17]

நூல் விளக்கம்

தொகு
  • Chitra Naik (1975). "Shikshan ani Samaj". Indian Institute of Education. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  • Chitra Naik. Educational innovation in India. UNESCO Press.
  • Chitra Naik (2004). "Lokmanya Tilak as Educational Thinker". Indian Institute of Education. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Educationist Chitra Naik No More". DNA Syndication. 25 December 2010. Archived from the original on 11 May 2018. பார்க்கப்பட்ட நாள் 20 July 2015.
  2. 2.0 2.1 Indian Public Administration: Institutions and Issues. New Age International.
  3. 3.0 3.1 3.2 "Educating the Society" (PDF). Sparrow Online. April 2011. Archived from the original (PDF) on 28 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 18 June 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. 5.0 5.1 "Pune's Pride". Pune Diary. 2015. Archived from the original on 20 October 2017. பார்க்கப்பட்ட நாள் 20 July 2015.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 "Jamnalal Bajaj Award". Jamnalal Bajaj Foundation. 2015. Archived from the original on 17 August 2013. பார்க்கப்பட்ட நாள் 20 July 2015.
  7. 7.0 7.1 7.2 "Educationist Chitra Naik dead". 25 December 2010. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  8. "Remembering a legend". 5 September 2008. பார்க்கப்பட்ட நாள் 20 July 2015.
  9. "About Us". IIE. 2015. Archived from the original on 26 May 2015. பார்க்கப்பட்ட நாள் 20 July 2015.
  10. "UNESCO Roll of Honour". UNESCO. 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  11. Committees and Commissions in India. Concept Publications.
  12. Development of Education in India, Volume 5. Concept Publications.
  13. "Administrative Set Up – IIALE". International Institute of Adult and Lifelong Education. 2015. பார்க்கப்பட்ட நாள் 20 July 2015.
  14. Chitra Naik (1975). "Shikshan ani Samaj". Indian Institute of Education. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  15. Educational innovation in India. UNESCO Press.
  16. Chitra Naik (2004). "Lokmanya Tilak as Educational Thinker". Indian Institute of Education. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  17. 17.0 17.1 "Founders". IIE. 2015. Archived from the original on 24 May 2017. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்ரா_நாயக்&oldid=3929823" இலிருந்து மீள்விக்கப்பட்டது