சிர்ஹிந்த் போர் (1555)
சிர்ஹிந்த் போர் (Battle of Sirhind) என்பது கி.பி.1555 இல் முகலாயப் பேரரசுக்கும் சூரி பேரரசுக்கும் இடையே நடந்த ஒரு சண்டையாகும்.
சிர்ஹிந்த் போர்(1555) | |||||||
---|---|---|---|---|---|---|---|
தில்லி பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
முகலாயப் பேரரசு | சூர் பேரரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
நசிருதீன் உமாயூன் பைராம் கான் | சிக்கந்தர் ஷா சூரி | ||||||
பலம் | |||||||
100,000-140,000[1] | 90,000[2] |
பின்னணி
தொகுநசிருதீன் உமாயூன், பஷ்தூன் தளபதியான சேர் சா சூரியிடம் முகலாயப் பகுதிகளை இழந்தார். தப்பிச் சென்ற உமாயூன் 15 ஆண்டுகள் பெர்சியாவில் தங்கியிருந்தார். அங்கு அவர் இராணுவ தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு சபாவித்து அரச மரபின் உதவியுடன் ஆப்கானித்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானில் உள்ள தனது சகோதரர்களை தோற்கடித்த பிறகு, உமாயூன் அப்பகுதியின் மீது தனது பிடியை உறுதிப்படுத்திக் கொண்டு இந்தியாவுக்குத் திரும்பினார். அங்கு பாபுரின் முன்னாள் தலைநகரான தில்லியை வெற்றிகரமாக மீட்டெடுத்து முகலாய பேரரசை மீண்டும் நிறுவினார். [3]
இப்ரகிம் ஷா சூரியின் மரணத்திற்குப் பிறகு, சூரி பேரரசு ஒரு உள்நாட்டுப் போரைச் சந்தித்தது. அரியணைக்கு பல்வேறு போட்டியாளர்கள் சண்டையிட்டனர். சிக்கந்தர் ஷா சூரி, இப்ராகிம் ஷா சூரியை வீழ்த்தி தில்லியின் சுல்தானானார். இப்ராகிமுக்கு எதிரான போராட்டத்தில் மும்முரமாக இருந்தபோது, பிப்ரவரி 1555 இல் உமாயூன் 1555 இல் ரோடாசு கோட்டை மற்றும் லாகூரைக் கைப்பற்றினார். இவரது படைகளின் மற்றொரு பிரிவு திபால்பூர், குர்தாஸ்பூர் மற்றும் ஜலந்தர் ஆகியவற்றைக் கைப்பற்றியது. அவர்களின் ஒரு பிரிவு சிர்ஹிந்த் நோக்கி சென்றது. சிக்கந்தர் அவர்களை இடைமறிக்க 30,000 படையை அனுப்பினார். ஆனால் அவர்கள் மச்சிவாரா போரில் முகலாய இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டனர் மேலும், சிர்ஹிந்த் முகலாயர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. [4]
போர்
தொகுசிக்கந்தர், 90,000 பேர் கொண்ட இராணுவத்திற்கு தலைமை தாங்கி, சிர்இந்தில் முகலாயர்களை சந்தித்தார். [5] 22 ஜூன் 1555 அன்று இருவரும் போரில் சந்தித்தனர். உமாயூனை தோற்கடிக்க சேர் சா சூரிசௌசா போரில் செய்ததைப் போல உமாயூனும் பைராம் கானும் ஒரு மழைக்காலங்களில் துணிச்சலான தாக்குதலை நடத்தினர். [6] சிக்கந்தர் முகலாய இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டார். மேலும், வடகிழக்கு பஞ்சாபில் உள்ள சிவாலிக் மலைகளுக்கு பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வெற்றி பெற்ற முகலாயர்கள் தில்லிக்கு அணிவகுத்துச் சென்று, அதை ஆக்கிரமித்து, இந்தியாவில் தங்கள் பேரரசை மீண்டும் நிறுவினர். [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Begum, Gulbadan (1902). The History of Humāyūn (Humāyūn-nāmah). Royal Asiatic Society. p. 260.
- ↑ Majumdar, R.C. (ed.) (2007). The Mughal Empire, Mumbai: Bharatiya Vidya Bhavan, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7276-407-3, pp.94–6
- ↑ Sankaran, Sahaj. "22 June, 1555: Humayun Wins the Battle of Sirhind | Today in Indian History from Honesty Is Best". honestyisbest.com. பார்க்கப்பட்ட நாள் 2023-03-10.
- ↑ Majumdar, R.C. (ed.) (2007).
- ↑ 5.0 5.1 "Battles for India at Sirhind". Times of India Blog. பார்க்கப்பட்ட நாள் 2022-10-25.
- ↑ Battle of Sirhind 1555 | Sikandar Shah Suri | Humayun | Mughal⚔️Afghan War (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2022-10-25