கருங்கடல் பிராந்தியம்

கருங்கடல் பிராந்தியம் (Black Sea Region, துருக்கியம்: Karadeniz Bölgesi ) என்பது துருக்கியின் புவியியல் பகுதி ஆகும்.

கருங்கடல் பிராந்தியம்
Karadeniz Bölgesi
துருக்கியின் பிராந்தியம்
சோங்குல்தக் துறைமுகம்
சோங்குல்தக் துறைமுகம்
துருக்கியில் (சிவப்பு நிறத்தில்) கருங்கடல் பிராந்தியம்
துருக்கியில் (சிவப்பு நிறத்தில்) கருங்கடல் பிராந்தியம்
நாடுதுருக்கி
பரப்பளவு
 • மொத்தம்143,537 km2 (55,420 sq mi)

இதன் மேற்கில் மர்மாரா பிராந்தியம், தெற்கே மத்திய அனடோலியா பிராந்தியம், தெற்கில் மத்திய அனதோலியா பிராந்தியம், தென்கிழக்கில் கிழக்கு அனடோலியா பிராந்தியம், வடகிழக்கில் ஜார்ஜியா குடியரசு மற்றும் வடக்கே கருங்கடல் ஆகியவை எல்லைகளாக உள்ளன.

உட்பிரிவு தொகு

மாகாணங்கள் தொகு

கருங்கடல் பிராந்தியத்தில் முழுவதுமாக உள்ள மாகாணங்கள்:

மக்கள் தொகை தொகு

2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கருங்கடல் பிராந்தியத்தின் மக்கள் தொகையானது 8,439,213 ஆகும். இதில் நகரங்களில் வாழ்பவர்கள் 4,137,166 பேரும், கிராமங்களில் வாழ்பவர்கள் 4,301,747 பேரும் உள்ளனர்.. துருக்கியின் ஏழு பிராந்தியங்களில் இந்த பிராந்தியத்திலேயே, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிக மக்கள் வாழ்கின்றனர்.

பிராந்தியத்தில் வாழ்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் துருக்கியர்கள் என்றாலும், இப்பகுதியின் கிழக்கில் லாஸ் மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் கார்ட்வெலி மொழிகள் பேசும் மக்களாவர். இது சியார்சிய மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது மற்றும் இவர்கள் ஒட்டோமான் காலத்தின் பிற்பகுதியில் ஜார்ஜிய மரபுவழியிலிருந்து இஸ்லாத்துக்கு மதத்திற்கு மாறியவர்கள் மேலும் முஸ்லீம் ஜார்ஜியர்கள், ஹெம்சின், இஸ்லாத்துக்கு மாறிய ஆர்மீனியர்கள், மற்றும் 17 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிற்கு மாறிய போன்டிக் கிரேக்கர்கள் போன்றோர்கள் உள்ளனர். கிறித்தவ போன்டிக் கிரேக்கர்களின் என்பது ஒரு பெரிய சமூகம் (மக்கள் தொகையில் சுமார் 25%) ஆகும்.[1] 1920 கள் வரை பான்டசு பகுதி முழுவதும் (வடகிழக்கு துருக்கி / ரஷ்ய காகசஸ் உள்ளிட்ட டிராப்ஸன் மற்றும் கார்ஸ் உட்பட), 2010 வரை ஜார்ஜியா மற்றும் ஆர்மீனியாவின் சில பகுதிகளில், அவர்களின் சொந்த பழக்கவழக்கங்கள் மற்றும் கிரேக்க மொழியையின் பேச்சுவழக்கு போன்றவற்றை பாதுகாத்து வந்தனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் முக்கியமாக கிரேக்கத்திற்கு சென்றுவிட்டனர். இருப்பினும், பெரும்பாலான முஸ்லீம் பொன்டிக் கிரேக்கர்கள் துருக்கியில் இருக்கின்றனர்.

நிலவியல் தொகு

இப்பிராந்தியத்தில் உள்ள போன்டிக் மலைகளின் விரிந்த பார்வை.

கருங்கடல் பிராந்தியத்தில் செங்குத்தான பகுதிகள் உள்ளன. இந்த பாறை நிறைந்த கரையோர மலைத்தொடர்களின் வழியாக ஆறுகள் அருவிகாளக விழுகின்றன. சில பெரிய ஆறுகள், போன்டிக் மலைகள் (டோசு கரடெனிஸ் டாஸ்லாரே) வழியாக அவற்றை வெட்டிக்கொண்டு பாய்கின்றது. மேலும் இது துணை நதிகளைக்யும் கொண்டுள்ளது, கடற்கரையிலிருந்து உள்நாட்டிற்குள் செல்ல சில குறுகிய பள்ளத்தாக்குகளுகள் மட்டுமே உள்ளன. ஏனெனில் மேற்கில் 1,525 முதல் 1,800 மீட்டர் உயரமும், கிழக்கில் 3,000 முதல் 4,000 மீட்டர் உயரமும் கொண்ட காஸ்கர் மலைகளின் மலை முகடுகள் உள்ளன. இவை கடற்கரையை உட்புறப் பகுதியை பிரிக்கக்கூடிய கிட்டத்தட்ட உடைக்கப்பட முடியாத சுவரை போல உள்ளன. வடமேற்கில் எதிர்கொள்ளும் உயர்ந்த சரிவுகள் அடர்த்தியான காடுகளாக இருக்கின்றன. இந்த இயற்கை அரண்கள் காரணமாக, கருங்கடல் கடற்கரை பகுதியானது வரலாற்று ரீதியாக அனடோலியாவிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கருங்கடல் கடற்கரையின் லேசான, ஈரமான கடல் காலநிலை வணிக வேளாண்மையை லாபகரமாக்குகிறது. மேற்கில் சோங்குல்டக்கிலிருந்து கிழக்கில் ரைஸ் வரை நீளும், குறுகிய கரையோரப் பகுதி பல இடங்களில் வளமான, தீவிரமாக பயிரிடப்பட்ட வடிநிலமாக விரிவடைகிறது. சம்சூன் பகுதியானது, நடுப்பகுதிக்கு அருகில் உள்ளது. இது புகையிலை வளரும் முக்கியப் பகுதியாகும்; அதன் கிழக்கே ஏராளமான ஆரஞ்சுவகை தோப்புகள் உள்ளன. கிழக்கு சம்சூனுக்கு கிழக்கே ட்ரேப்சோனை சுற்றியுள்ள பகுதிகள் ஹேசல்நட் உற்பத்திக்கு உலகப் புகழ் பெற்ற ஒன்றாகும்.மேலும் கிழக்கே ரைஸ் பிராந்தியத்தில் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. மலை சரிவுகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் சாகுபடி பகுதிகளாகவோ அல்லது மேய்ச்சல் நிலங்களாக உள்ளன. காரணம் இவை மிகவும் செங்குத்தானவை அல்ல. கருங்கடல் பிராந்தியத்தின் மேற்கு பகுதி, குறிப்பாக சோங்குல்டக் பகுதி நிலக்கரி சுரங்க மற்றும் கனரக தொழில்துறையின் மையமாகும்.

இதனையும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. Pentzopoulos, Dimitri (2002). The Balkan exchange of minorities and its impact on Greece. C. Hurst & Co. Publishers. pp. 29–30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85065-702-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருங்கடல்_பிராந்தியம்&oldid=3833580" இலிருந்து மீள்விக்கப்பட்டது