சிவத்தேரியம்

சிவத்தேரியம்
புதைப்படிவ காலம்:Late Miocene to Early Pleistocene, 7–0.8 Ma
சி. ஜிகாண்டியம் எலும்ப்புச் சட்டகம்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ஜிராபிடே
பேரினம்:
சிவத்தேரியம்

லைடெக்கர், 1876
இனம்:
சி. ஜிகாண்டியம்
இருசொற் பெயரீடு
சிவத்தேரியம் ஜிகாண்டியம்
பால்கனர் & கெளலட்டி, 1836[1][2]
மாதிரி இனம்
சிவத்தேரியம் ஜிகாண்டியம்
பால்கனர் & கெளலட்டி, 1836
சிற்றினம்
  • சி. ஜிகானெட்டம்
  • ?சி. கெண்டே ஹாரிசு, 1976
  • சி. மெளரூசியம்
வேறு பெயர்கள்

லைபிதெரியம்

சிவத்தேரியம் (Sivatherium-சிவனின் கோரமா, சிவா - சிவன், தேரியம் (therium) மிருகம்; பண்டைக் கிரேக்கச் சொல்) என்பது அழிந்துபோன ஓர் ஒட்டகச் சிவிங்கியின் பேரினமாகும். சிவத்தேரியம் ஜிகாண்டியம் எடையின் அடிப்படையில், அறியப்பட்ட மிகப்பெரிய ஒட்டகச்சிவிங்கி சிற்றினமாகும். மேலும் இது அசைபோடும் மிகப்பெரிய விலங்குகளில் ஒன்றாகும்.[3]

சிவத்தேரியம் ஆப்பிரிக்காவில் 7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மியோசீன் காலத்தின் பிற்பகுதியில் தோன்றியது. இது பிlஇசுடோசீன் ஆரம்பக் காலம் வரை வாழ்ந்துள்ளது (காலாப்ரியன்). சி. ஜிகாண்டியம் எச்சங்கள் இமயமலை அடிவாரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இது சுமார் 1 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது.[4] சகாரா மற்றும் மத்திய மேற்கு இந்தியாவில் உள்ள பண்டைய பாறை ஓவியங்களிலிருந்து அறியப்பட்டதைப் போலவே, சி. மௌரசியம் சமீபத்தில் 8,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்திருக்கலாம் என்று பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.[5] இருப்பினும், இந்தக் கூற்றுக்கள் புதைபடிவச் சான்றுகளால் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் இந்தச் சித்தரிப்புகள் மற்ற விலங்குகளைக் குறிக்கின்றன.[6]

விளக்கம்

தொகு
 
நவீன, ஒட்டகச்சிவிங்கி போன்ற மறுசீரமைப்பு மேபன்
 
மூசு போன்ற ஐரோவாசியக் காட்டுமான்
 
அருங்காட்சியக மாதிரி

சிவத்தேரியம் நவீன ஒகாபியினை ஒத்திருந்தது. ஆனால் இவற்றை விட மிகப் பெரியதாகவும், மிகவும் கனமான உடலையும் கொண்டிருந்தது. இதன் தோள் சுமார் 2.2 m (7.2 அடி) மீட்டர் (2.2 ) உயரமும் (மொத்த உயரத்தில் 3 அடி) உடல் எடையும் 400 முதல் 500 கிலோ வரை இருந்தது.[7] ஒரு புதிய மதிப்பீடு சுமார் 1,250 kg (2,760 lb) kg (2,760 lb) அல்லது 1,360 kg (3,000 lb) kg (3,000 lb) உடல் நிறையுடன் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.[8] நவீன ஒட்டகச்சிவிங்கிகள் மற்றும் மிகப்பெரிய மாடு இனங்களுக்குப் போட்டியாக சிவத்தேரியம் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. சிவத்தேரியம், அறியப்பட்ட மிகப் பெரிய அசைபோடும் விலங்காகும். இந்த பேரினத்தின் ஆண்களுக்கு இருக்கும் பெரிய கொம்புகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாததால், இதன் உடல் எடை குறைத்து மதிப்பிடப்பட்டதாகக் கருதப்படுகிறது. சிவத்தேரியம் தன் தலையில் ஒரு பரந்த, கொம்பு போன்ற ஓர் இணை குழலான கூம்பு போன்ற உறுப்புகளை கொண்டுள்ளது. கண்களுக்கு மேலே இரண்டாவது இணை குழல் போன்ற கூம்பு உறுப்பும் காணப்படுகிறது. கனமான மண்டை ஓட்டை உயர்த்தத் தேவையான கழுத்து தசைகளுடன் இதன் தோள்கள் மிகவும் சக்திவாய்ந்தவை. நவீன அசைபோட்டும் பாலூட்டிகளுக்கும் வழக்கற்றுப் போன, பலதொகுதிமரபு உயிரினத் தோற்ற "பேக்கிடெர்ம்" எனப்படும் தடித்த தோலுடைய பாலூட்டிகளிடையேயான (யானைகள், காண்டாமிருகங்கள், குதிரைகள் மற்றும் டாப்பிர்) ஒரு தொன்மையான இணைப்பாக சிவத்தேரியம் இருந்தது என ஆரம்பத்தில் தவறாக அடையாளம் காணப்பட்டது. இக்குழப்பம் பெரும் உடலை தாங்கக்கூடிய இதன் உருவவியல் காரணமாக ஏற்பட்டது.[9]

உணவு

தொகு

தென்னாப்பிரிக்காவின் ஆரம்பக்கால பிளியோசீனில் காலத்தில் சி. கெண்டேயி பல் தேய்மானப் பகுப்பாய்வு, இதன் பற்கள் தாழ்ந்த பல்முடிநிலையிலானது என்று தெரிவிக்கிறது. ஆனால் ஓர் ஒட்டகச்சிவிங்கியை விட அதிக உயர் பற்கள் இதில் இருந்தது. மேலும் இது ஒரு கலப்பு உணவூட்டியாக வகைப்படுத்தப்பட்டது. மேய்ச்சல் மற்றும் உலாவுதல் ஆகிய இரண்டு வகையான உணவூட்ட முறையினை இதனால் மேற்கொள்ள முடியும்.[10]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Sivatherium in the Paleobiology Database
  2. Falconer, Hugh; Cautley, P. T. (1836). "Sivatherium giganteum, a new fossil ruminant genus, from the valley of the Markanda, in the Sivalik branch of the Sub-Himalayan Mountains". Journal of the Asiatic Society of Bengal: 38–50. https://archive.org/stream/journalofasiatic05asia#page/38/mode/1up. 
  3. Basu, Christopher; Falkingham, Peter L.; Hutchinson, John R. (January 2016). "The extinct, giant giraffid Sivatherium giganteum: skeletal reconstruction and body mass estimation". Biology Letters 12 (1): 20150940. doi:10.1098/rsbl.2015.0940. பப்மெட்:26763212. 
  4. "Fossilworks: Sivatherium". fossilworks.org. பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.
  5. "Rock paintings show species that roamed India". www.newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2016-09-14.
  6. Naish, Darren (April 25, 2011). "What happened with that Sumerian 'sivathere' figurine after Colbert's paper of 1936? Well, a lot". Tetrapod Zoology.
  7. http://www.geocities.ws/rsn_biodata/Data/Sivatherium_giganteum.html (in Portuguese)
  8. Black, Riley (February 10, 2016). "The Biggest Giraffe of All Time". National Geographic. பார்க்கப்பட்ட நாள் November 2, 2022.
  9. Palmer, D., ed. (1999). The Marshall Illustrated Encyclopedia of Dinosaurs and Prehistoric Animals. London: Marshall Editions. p. 278. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84028-152-1.
  10. Franz-Odendaal, Tamara A. Solounias, Nikos. Comparative dietary evaluations of an extinct giraffid (sivatherium hendeyi) (mammalia, giraffidae, sivatheriinae) from Langebaanweg, South Africa (Early Pliocene). இணையக் கணினி நூலக மைய எண் 631971239.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)

மேலும் வாசிக்க

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sivatherium
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
  • Barry Cox, Colin Harrison, R.J.G. Savage, and Brian Gardiner. (1999): The Simon & Schuster Encyclopedia of Dinosaurs and Prehistoric Creatures: A Visual Who's Who of Prehistoric Life. Simon & Schuster.
  • David Norman. (2001): The Big Book Of Dinosaurs. pg. 228, Walcome books.
  • After the Dinosaurs: The Age of Mammals (Life of the Past) by Donald R. Prothero
  • The Evolution of Artiodactyls by Donald R. Prothero and Scott E. Foss
  • Vertebrate Palaeontology by Michael J. Benton and John Sibbick
  • Evolving Eden: An Illustrated Guide to the Evolution of the African Large Mammal Fauna by Alan Turner and Mauricio Anton
  • Classification of Mammals by Malcolm C. McKenna and Susan K. Bell \
  • The Book of Life: An Illustrated History of the Evolution of Life on Earth, Second Edition by Stephen Jay Gould
  • World Encyclopedia of Dinosaurs & Prehistoric Creatures: The Ultimate Visual Reference To 1000 Dinosaurs And Prehistoric Creatures Of Land, Air And Sea ... And Cretaceous Eras (World Encyclopedia) by Dougal Dixon
  • Eyewitness: Prehistoric Life by William Lindsay
  • Walker's Mammals of the World (2-Volume Set) (Walker's Mammals of the World) by Ronald M. Nowak
  • Horns, Tusks, and Flippers: The Evolution of Hoofed Mammals by Donald R. Prothero and Robert M. Schoch
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவத்தேரியம்&oldid=3961733" இலிருந்து மீள்விக்கப்பட்டது