வைன் என்பது திராட்சைச் சாறை புளிக்க வைத்து பெறப்படும் ஒரு மதுசார பானமாகும். இவற்றில் இருக்கும் சில வேதிப்பொருட்களால் இவை சர்க்கரை, நொதியம், அமிலம் போன்ற எவற்றின் உதவியும் இன்றி தானாகவே நொதித்து புளித்து விடுகின்றன. கி.மு. 5000 – 6000 ஆண்டுகளிலேயே வைன் தயாரித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.[1]
2012 ஆம் ஆண்டில் இத்தாலி நாடே மிகவும் அதிகளவிலான வைனை உற்பட்டிசெய்யும் நாடுகளில் முதலிடம் பெற்றது. அதன் பின் முறையே பிரான்சு, ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் ஆர்ஜென்டீனா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப்பெற்றன.
2009 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட வைன்களின் மதிப்பீட்டுத்தொகையில் முதல் 12 நாடுகள்.[2]
2003 ஆம் ஆண்டில் உலக வைன் உற்பத்தியானது 269 மில்லியன் ஹெக்டா லீட்டர்களை அண்மித்தது: 2003 ஆம் ஆண்டில் இருந்த முதல் 15 பிரதான உற்பத்தியாளர்கள் கீழ் வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளனர்.