சிவ பிரதாப் சுக்லா

இந்திய அரசியல்வாதி

சிவ பிரதாப் சுக்லா (Shiv Pratap Shukla)(பிறப்பு 1 ஏப்ரல் 1952) ஓர் இந்திய அரசியல்வாதியும் தற்போதைய இமாச்சல பிரதேச ஆளுநரும் ஆவார். இவர் மோதி தலைமையிலான முதலாவது அமைச்சரவையில் நிதித்துறை இணை அமைச்சராக இருந்தார். இவர் இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையில் (மாநிலங்களவை) உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

சிவ பிரதாப் சுக்லா
Shiv Pratap Shukla
சுக்லா 2018-ல்
22வது இமாச்சலப் பிரதேச ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
18 பிப்ரவரி 2023
முன்னையவர்இராசேந்திர அர்லேகர்
நிதி அமைச்சகம் (இந்தியா)
பதவியில்
3 செப்டம்பர் 2017 – 30 மே 2019
முன்னையவர்சந்தோஷ் குமார் கங்க்வார்
பின்னவர்அனுராக் தாகூர்
நாடாளுமன்ற உறுப்பினர்-மாநிலங்களவை-உத்தரப் பிரதேசம்[1]
பதவியில்
5 சூலை 2016 – 5 சூலை 2022
முன்னையவர்முக்தர் அப்பாஸ் நக்வி, பாரதிய ஜனதா கட்சி
தொகுதிஉத்தரப் பிரதேசம்
துணைத்தலைவர், பாரதிய ஜனதா கட்சி (உ.பி.)
பதவியில்
2012–2017
சிறைத்துறை அமைச்சர்
பதவியில்
1996–1998
கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர்
பதவியில்
1998–2002
சட்டமன்ற உறுப்பினர், உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
1989–2002
முன்னையவர்சுனில் சாத்திரி
பின்னவர்இராதா மோகன் தாசு அகர்வால்
தொகுதிகோரக்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 ஏப்ரல் 1952 (1952-04-01) (அகவை 72)
உருத்ராபூர், உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)ஆளுநர் மாளிகை, சிம்லா
முன்னாள் கல்லூரிதீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம்
வேலைLawyer

அரசியல் வாழ்க்கை

தொகு

சட்டமன்ற உறுப்பினர்

தொகு

சுக்லா 1989-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் சுனில் சாத்திரியைத் தோற்கடித்தார்.[2] இவர் 1989, 1991, 1993 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

பாஜக அரசில் மாநில அமைச்சர்

தொகு

உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான அரசாங்கங்களில் சுக்லா மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் 1996-1998 காலத்தில் சிறைத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3][4][5][6] பாரதிய ஜனதா கட்சி - பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதி மற்றும் கல்யாண் சிங் ஆகியோரின் குறுகிய கால கூட்டணி அரசாங்கத்தின் கீழ் 1996-1998-ல் நியமிக்கப்பட்டார் பின்னர் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சராக 1998-2002ஆம் ஆண்டு ராஜ்நாத் சிங்கின் பாஜக ஆட்சியில் நியமிக்கப்பட்டார்.[4]

ஆளுநராக

தொகு

சுக்லா 13 பிப்ரவரி 2023 முதல் இமாச்சலப்பிரதேச ஆளுநராகப் பதவி வகித்து வருகின்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Samajwadi Party Wins 7 Rajya Sabha Seats in UP, Kapil Sibal Emerges Victorious".
  2. 2.0 2.1 "Gorakhpur Election Results since 1977". Election Commission of India.
  3. "The Great Lucknow Circus". Frontline. 15–28 November 1997. Archived from the original on 18 October 2007.
  4. 4.0 4.1 "Neither Ram nor Rahim, Gorakhpur voters seek solution to problem of floods". Rediff. 22 February 2002.
  5. "Jailed gangster's reach gobsmacks UP police". Rediff. 17 December 1998.
  6. "BJP bandh stirs up trouble in UP towns". Rediff. 23 February 1998.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ_பிரதாப்_சுக்லா&oldid=3926472" இலிருந்து மீள்விக்கப்பட்டது