சி. பி. கிருட்டிணன் நாயர்

கேப்டன் சித்தரத் பூவக்கட் கிருட்டிணன் நாயர் (9 பிப்ரவரி 1922 - 17 மே 2014), மலையாளிகளால் சி. பி. கிருட்டிணன் நாயர் என்றும் அழைக்கப்படும், தி லீலா குழுமத்தை நிறுவிய ஒரு இந்தியத் தொழிலதிபர் ஆவார். [1] [2] இவருக்கு 2010 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம பூசண் வழங்கி கௌரவித்தது. [3] இந்திய இராணுவம் இவரது சேவை காரணமாக சில நேரங்களில் இவர் பிரபலமாக கேப்டன் நாயர் என்று அழைக்கப்படுகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் இராணுவ வாழ்க்கை

தொகு

நாயர் 1922 பிப்ரவரி 9 அன்று வடக்கு கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தார். அந்த நேரத்தில் பிரித்தானிய இராச்சியத்தின் சென்னை மாகணத்தின் மலபார் மாவட்டத்தில் இந்த கிராமம் அமைந்துள்ளது. நாயர் அவரது பெற்றொருக்கு எட்டு குழந்தைகளில் ஒருவராவார். இவரது தந்தை அரசாங்க வரி சேகரிப்பாளராக மாதந்தோறும் 9 வருமானம் ஈட்டினார். சிரக்கல் மகாராஜா இவர் படித்த பள்ளிக்குச் சென்றபோது, நாயர் மகாராஜாவின் மேல் ஒரு கவிதையை எழுதி படித்தார். இந்த கவிதை மகாராஜாவைக் கவர்ந்தது, என்வே, அவர் நாயருக்கு வாழ்நாள் உதவித்தொகையை வழங்கினார். நாயர் தனது இளம் பருவத்தில் பி. கிருஷ்ணப் பிள்ளை மற்றும் ஏ. கே. கோபாலன் போன்ற இந்திய பொதுவுடமைக் கட்சித் தலைவர்களை சந்தித்தார். [4]

நாயர் தனது 13 ஆவது வயதில் இந்திய சுதந்திர இயக்கத்தில் சேர்ந்தார். இந்திய இராணுவத்தில் சேர 1942 ல் பெங்களூருக்குச் சென்றார். இவரது நம்பிக்கை ஆட்சேர்ப்பு அதிகாரியைக் கவர்ந்தது, இவர் கம்பியில்லா ஒலிபரப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, அபோட்டாபாத்தில் (இன்றைய பாக்கித்தான் ) பணியமர்த்தப்பட்டார். பின்னர் இவர் மராத்தா லைட் காலாட்படையில் கேப்டன் பதவிக்கு உயர்ந்தார். 1950 ஆம் ஆண்டில், தொழிலதிபர் ஏ. கே. நாயரின் மகள் லீலாவை மணந்தார். அதன் பிறகு இவர் தனது எதிர்காலத் திட்டமான விடுதிச் சங்கிலிக்கு அடித்தளமிட்டார். [4] நாயர் 1951 இல் இந்திய ராணுவத்தில் இருந்து விலகினார்.

தொழில்

தொகு

1951 இல் இராணுவத்தில் இருந்து விலகிய பின்னர், அகில இந்திய கைத்தறி வாரியத்தை நிறுவ நாயர் உதவினார். வாரியத்தில் இவர் அமெரிக்காவில் கையால் சுழன்ற இந்திய நூலை விற்பனை செய்வதில் முக்கிய பங்கு வகித்தார். ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் அடிக்கடி வணிகப் பயணங்கள் மூலம், நாயர் சர்வதேச விடுதிகளான அட்லான் கெம்பின்ஸ்கி, தார்செஸ்டர் சவோய், ஜார்ஜ் ஷான்வ்க் மற்றும் வால்டோர்ஃப் அஸ்டோரியா ஆகிவற்ரின் அனுபவத்தைப் பெற்றார். இது விருந்தோம்பல் துறையில் தனது சொந்த நுழைவுக்கு ஊக்கமளித்தது. [4]

1958 ஆம் ஆண்டில், ப்ரூக்ஸ் பிரதர்ஸ் நிறுவனத்துடன் மெட்ராஸ் துணியை அறிவிக்க இவர் கைகோர்த்தார். பின்னர் டாமி ஹில்ஃபிகர், வால் மார்ட், லிஸ் கிளைபோர்ன் மற்றும் மேசிஸ் போன்ற வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தார்.   [ மேற்கோள் தேவை ] அந்த ஆண்டின் பிற்பகுதியில், மும்பையின் சகாரில் சரிகை நெசவுப் பிரிவைத் தொடங்கினார். [4]

லீலா விடுதிகள்

தொகு

1957 ஆம் ஆண்டில், நாயர் மேற்கு ஜெர்மனிக்கான அகில இந்திய கைத்தறி வாரியத்தின் ஒரு குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். இது பிராங்போர்ட் (கென்டக்கி), கோல்ன், மியூனிக் மற்றும் ஆம்பர்கு ஆகிய இடங்களுக்கு வருகை புரிந்தது. புடாபெஸ்டில் உள்ள கெம்பின்ஸ்கி விடுதியில் இவர் தங்கியிருந்த போது , இந்தியாவில் ஒரு ஆடம்பர விடுதிச் சங்கிலியின் அவசியத்தை உணர்ந்தார். இது சர்வதேச தரத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டுமெனவும் நினைத்தார். 1981 ஆம் ஆண்டில் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டவுடன், விமான நிலையம் அமைந்துள்ள மும்பை புறநகர்ப் பகுதியான அந்தேரியில் நல்ல விடுதிகள் ஏதுமில்லை என்பதை நாயர் உணர்ந்தார். [4] நாயர் 1983 ஆம் ஆண்டில் லீலாவென்ச்சர் விடுதிகள் என்ற நிறுவனத்தை நிறுவினார். மேலும் சகாரில் தனக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு விடுதியையும், இவர் குத்தகைக்கு எடுத்த 6.5 ஏக்கர் நிலத்திலும் கட்டத் தொடங்கினார்.

முதல் லீலா விடுதிகள் 1987 இல் மும்பையில் திறக்கப்பட்டது. [4] இதைத் தொடர்ந்து லீலா கோவா, பெங்களூரில் உள்ள லீலா அரண்மனை, திருவனந்தபுரத்தில் உள்ள லீலா கடற்கரை விடுதிகள் ஆகியவை திரக்கப்பட்டன.

இறப்பு

தொகு

கிருட்டிணன் நாயர் 2014 மே 17 அன்று மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில், குறுகிய கால உடல்நலக்குறைவால் காலமானார். [5]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

நாயர் 1950 இல் தொழிலதிபர் ஏ. கே. நாயரின் மகள் லீலாவை (இவரது பெயரை தனது விடுதி குழுமத்திற்கு பெயரிட்டார்) திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விவேக் நாயர் மற்றும் தினேஷ் நாயர் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். லீலாக் குழுமத்தின் தற்போதைய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக விவேக் உள்ளார். தினேஷ் லீலா குழுமத்தின் இணைத் தலைவராக உள்ளார். இந்தியாவில் பிரித்தான் ஆட்சியின் போது கடந்த மூன்று ஆளுநர்களுக்கு அரசியலமைப்பு ஆலோசகராகவும் அரசியல் சீர்திருத்த ஆணையராகவும் இருந்த இந்திய அரசு ஊழியர் வி .பி. மேனனின் உறவினர் ஆவார். [6]

குறிப்புகள்

தொகு
  1. "Chairman's message" பரணிடப்பட்டது 23 செப்டெம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம் Leela Group of Hotels website
  2. "History". The Leela website. Archived from the original on 2011-02-19. பார்க்கப்பட்ட நாள் 2020-01-11.
  3. "This Year’s Padma Awards Announced" Ministry of Home Affairs, January 25, 2010.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Sanjai, P.R. (17 May 2014). "C.P. Krishnan Nair, founder chairman of Hotel Leelaventure, dies at 92". Mint. பார்க்கப்பட்ட நாள் 2 September 2016.
  5. "Leela Group founder Capt. C P Krishnan Nair dies at 92". IANS. news.biharprabha.com. பார்க்கப்பட்ட நாள் 17 May 2014.
  6. Sanghvi, Vir. "Captain Nair always thought big". Vir Sanghvi. பார்க்கப்பட்ட நாள் 19 August 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._பி._கிருட்டிணன்_நாயர்&oldid=3553702" இலிருந்து மீள்விக்கப்பட்டது