சுஜாதா சிங்

இந்திய அரசு ஊழியர்

சுஜாதா சிங் (Sujatha Singh) இந்திய வெளியுறத் துறையில் பணியாற்றிய இந்திய அரசு ஊழியர் ஆவார். இவர் ஆகத்து 2013 முதல் 2015 சனவரி வரை இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராக பணியாற்றினார். முன்னதாக இவர் ஜெர்மனிக்கான இந்திய தூதராகவும் (2012–2013) இருந்தார்.[2]

சுஜாதா சிங்
30வது இந்திய வெளியுறவுச் செயளாளர்
பதவியில்
1 ஆகத்து 2013 – 28 சனவரி 2015
முன்னையவர்இரஞ்சன் மத்தாய்
பின்னவர்சுப்பிரமணியம் செயசங்கர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூலை 1954 (அகவை 69)
சுஜாதா ராஜேஸ்வர் முதலியார், இந்தியா
தேசியம் இந்தியா
துணைவர்முனைவர் சஞ்சய் எம் சிங்[1]
பெற்றோர்டி. வி. ராஜேஸ்வர் - மகாலட்சுமி
வேலைஇந்திய வெளியுறவுப்பணி
தொழில்இந்திய அரசு ஊழியர்

குடும்பமும் கல்வியும் தொகு

சூலை 1954 இல் பிறந்த சுஜாதா சிங், முன்னாள் இந்திய உளவுத்துறையின் தலைவரும், பின்னர் ஆளுநராக பணிபுரிந்தவருமான டி. வி. ராஜேஸ்வரின் மகளும் ஆவார். இவர் புதுதில்லியில் உள்ள லேடி ஸ்ரீ ராம் கல்லூரி, தில்லி பொருளியல் பள்ளி ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார். அங்கு இவர் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். ஓய்வுபெற்ற இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான சஞ்சய் சிங்கை இவர் திருமணம் செய்து கொண்டார்.[3][4]

தொழில் தொகு

சுஜாதா 1976 தொகுப்பின் இந்திய வெளியுறவுப் பணி அதிகாரி ஆவார். இடாய்ச்சு மொழி தெரிந்தவரன இவர், பான், அக்ரா, பாரிஸ், பேங்காக் ஆகிய இடங்களிலுள்ள இந்தியத் தூதரகங்களில் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். 2000-04 காலப்பகுதியில் மிலனில் இந்தியாவின் தூதராகவும் இருந்தார். ஆஸ்திரேலியாவுக்கான இந்தியாவின் உயர் ஸ்தானிகராகவும் (2007–2012) பணியாற்றியுள்ளார். தில்லியில் இவர் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பொருளாதார ஒருங்கிணைப்பு பிரிவில் பணியாற்றியுள்ளார். மேலும், நேபாளம், மேற்கு ஐரோப்பா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இயக்குனர், துணைச் செயலாளர் மற்றும் இணை செயலாளராகவும் பணியாற்றினார்.[5] ஆஸ்திரேலியாவுக்கான உயர் ஸ்தானிகராக இருந்த இவரது பதவிக்காலம் இந்திய மாணவர்கள் மீதான இனத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்திய-ஆஸ்திரேலிய உறவுகளில் ஏற்பட்ட கொந்தளிப்பான சமயங்களில் இவரது பணி குறிப்பிடத்க்கது. அங்குள்ள இந்தியர்களுக்கு எதிரான இனத் தாக்குதல்களைக் கையாள்வதில் ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் கடுமையான நிலைப்பாட்டை எதிர்த்தார் பின்னர் யுரேனியம் விற்பனை தொடர்பாக இந்தியாவுக்கு விதிவிலக்கு அளிக்க ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சி எடுத்த முடிவுக்கும் வழி வகுத்தது. 1983ஆம் ஆண்டில் மழையால் பாதிக்கப்பட்ட கைலாசு மானசரோவர் யாத்திரையில் தொடர்பு அதிகாரியாக இருந்தார். மேற்கு ஐரோப்பாவைக் கையாளும் கூட்டுச் செயலாளராக, சிறிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட உதவிகளை ஏற்காத இந்தியாவின் நிலைப்பாட்டை இவர் ஆதரித்தார்.

வெளியுறவுச் செயலாளர் தொகு

2013 ஆம் ஆண்டில் சுஜாதா சிங், இரஞ்சன் மத்தாய்க்குப் பின் இந்திய வெளியுறவுச் செயலாளரானார். தற்போது இந்தியாவின் வெளியுறவு அமைச்சராக இருக்கும் சுப்பிரமணியம் செயசங்கர் இவருடன் பணி புரிந்தார். இவர், ஆகத்து 1, 2013 அன்று பதவியேற்றார். இந்தியாவின் எந்தவொரு அண்டை நாடுகளுக்கும் இவர் ஒருபோதும் தூதராக பணியாற்றவில்லை என்பது ஒரு சவாலாகக் கருதப்பட்டது. மேலும், இவர் ஒரு பெண்ணாக இருந்ததும் இவருக்கு இந்த பதவி சாதகமாக இருந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் சோனியா காந்தியும் இவரது பதவி உயர்வுக்கு அழுத்தம் கொடுத்தார். சோனியாவின் குடும்பத்துடன் இவரது தந்தையின் நெருக்கம் காரணமாக. சொக்கிலா ஐயர், நிருபமா ராவ் ஆகியோருக்குப் பிறகு இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றும் மூன்றாவது பெண் அதிகாரியாக இருக்கிறார் .

மேற்கோள்கள் தொகு

  1. "Sujatha Singh to be India's next Foreign Secretary". The Hindu. 2 July 2013 இம் மூலத்தில் இருந்து 3 July 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130703051720/http://www.thehindu.com/news/national/sujatha-singh-to-be-indias-next-foreign-secretary/article4872628.ece. 
  2. "Sujatha Singh takes charge as India's new foreign secretary". http://www.business-standard.com/article/politics/sujatha-singh-takes-charge-as-india-s-new-foreign-secretary-113080100368_1.html. 
  3. "Seniority prevails, Sujatha Singh is new Foreign Secy". The Tribune. 2 July 2013. http://www.tribuneindia.com/2013/20130703/main6.htm. பார்த்த நாள்: 3 July 2013. 
  4. "Sujatha Singh is India's next foreign secretary". Business Standard. 2 July 2013. http://www.business-standard.com/article/news-ians/sujatha-singh-is-india-s-next-foreign-secretary-113070200872_1.html. பார்த்த நாள்: 3 July 2013. 
  5. "Mrs Sujatha Singh, Ambassador of India, Embassy of India, Berlin". Embassy of India, Berlin. Archived from the original on 22 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 3 July 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஜாதா_சிங்&oldid=3930042" இலிருந்து மீள்விக்கப்பட்டது