சுஜாதா சிவக்குமார்

இந்திய நடிகை

சுஜாதா பாலகிருஷ்ணன் என்பவர் தமிழக நடிகை ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் துணை நடிகையாக நடிக்கிறார். அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார்.‌ அதன்பின் கதாநாயகன், நாயகியின் அம்மா வேடங்களில் நடித்துள்ளார்.

சுஜாதா பாலகிருஷ்ணன்
பிறப்புமதுரை, தமிழ் நாடு, இந்தியா [1]
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2007 -தற்போது

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி (2004) திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். எனினும் அவர் கவனிக்கப்படவில்லை.[2] அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார்.‌ இவரை பருத்திவீரன் சுஜாதா ஏன் அழைத்தனர்.

சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ், விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகை) போன்றவற்றை பெற்றுள்ளார்.[3][4] பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க (திரைப்படம்) (2009) மற்றும் கேடி பில்லா கில்லாடி ரங்கா (2013) போன்றவை கவனிக்கதக்கதாக இருந்தன.

விஜய் மில்டன் இயக்கத்தில் கோலி சோடா (2014) என்ற திரைப்படத்தில் கோயம்பேடு சந்தையில் உணவகம் நடத்துபவராக நடித்தார். அத்திரைப்படத்தில் நாயகர்களுக்கு இணையான கதாப்பாத்திரமாக நடித்துள்ளார். [5][6] 2015 வரை 50 திரைப்படங்களை நெருங்கியுள்ளார்.[7]

சில திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2004 விருமாண்டி பேச்சி (கொத்தாக தேவர் மனைவி)
2007 பருத்திவீரன் கலிவரதன் மனைவி சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகை)
2008 பிரிவோம் சந்திப்போம்
2008 தோட்டா (திரைப்படம்)
2008 குருவி (திரைப்படம்) வெற்றிவேல் அத்தை
2009 பசங்க (திரைப்படம்) சொக்கலிங்கம் மனைவி பரிந்துரை, சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
2010 ஏழாம் அறிவு அரவிந்த் அத்தை
2010 சுறா சுரதாவின் அம்மா
2010 களவாணி (திரைப்படம்) ராஜி
2011 மௌனகுரு (திரைப்படம்) கருணாகரன் அம்மா
2012 சுந்தர பாண்டியன் (திரைப்படம்) அர்ச்சனா அத்தல
2012 கோழி கூவுது
2013 கேடி பில்லா கில்லாடி ரங்கா முருகனின் அம்மா
2014 வீரம் நல்லசிவம் சகோதரி
2014 ரம்மி
2014 கோலி சோடா ஆச்சி
2014 நான் தான் பாலா கட்டோரன் மனைவி
2015 காக்கி சட்டை (2015 திரைப்படம்) திவ்யாவின் அம்மா
2015 36 வயதினிலே ராணி
2016 போக்கிரி ராஜா சஞ்சீவி யின் அம்மா
2016 திருநாள் (திரைப்படம்)
2017 பிச்சுவா கத்தி
2018 செம குழந்தைவேலுவின் அம்மா
2019 விசுவாசம் தூக்குதுரையின் அத்தை

ஆதாரங்கள்

தொகு
  1. http://www.dinamalar.com/news_detail.asp?id=1439217
  2. "Sujatha Sivakumar speaks at Goli Soda Success Meet - YouTube". youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2015-11-23.
  3. "Paruthi Veeran rules the roost at filmfare awards - Tamil Movie News". indiaglitz.com. பார்க்கப்பட்ட நாள் 2015-11-23.
  4. "Paruthiveeran dominates Filmfare awards - Behindwoods.com Ameer Karthi Priyamani Saravanan Sujatha K V Anand A R Rahman Sivaji Unnale Unnale Mozhi Kreedom movie news picture gallery stills images". behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2015-11-23.
  5. "Fizz on the streets - The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2015-11-23.
  6. "Goli Soda: Little men - The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2015-11-23.
  7. CF. "Sivakarthikeyan presents Sujatha with an expensive wrist-watch - KOLLY TALK". kollytalk.com. Archived from the original on 2015-11-24. பார்க்கப்பட்ட நாள் 2015-11-23.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஜாதா_சிவக்குமார்&oldid=4167725" இலிருந்து மீள்விக்கப்பட்டது