சுதேசாபிமானி இராமகிருட்டிண பிள்ளை

இந்தியப் பத்திரிகையாளர்

கே. இராமகிருட்டிண பிள்ளை (K. Ramakrishna Pillai ) (1878-1916) இவர் ஓர் தேசியவாத எழுத்தாளரும், பத்திரிகையாளரும், ஆசிரியரும், அரசியல் ஆர்வலரும் ஆவார் .[1][2] இவர் சுதேசாபிமானி (தேசபக்தர்) என்ற செய்தித்தாளை வெளியிடுள்ளார். இது ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாகவும், திருவிதாங்கூர் ( கேரளா ) முந்தைய சுதேச அரசாகவும், சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாகவும் மாறியது. திருவிதாங்கூர் திவான், பெ. ராஜகோபாலாச்சாரி, மகாராஜா ஆகியோரைப் பற்றிய இவரது விமர்சனம் இறுதியில் செய்தித்தாளை பறிமுதல் செய்ய வழிவகுத்தது. இராமகிருட்டிண பிள்ளை 1910 இல் திருவிதாங்கூரில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.[3][4][5][6][7] மலையாளத்தில் இவரது மிகவும் குறிப்பிடத்தக்க படைப்புகளில் விருந்த பத்ர பிரவர்த்தனம் (1912) [8], காரல் மார்க்சு (1912) ஆகியவை உள்ளன. கார்ல் மார்க்சு என்ற நூல் எந்த இந்திய மொழியிலும் வெளிவராத முதல் சுயசரிதையானது. ஆனால் கொல்கத்தாவிலிருந்து 1912 மார்ச் இதழில் வெளியிடப்பட்ட மாடர்ன் ரிவுயூ என்ற இதழில் லாலா அர்தயால் எழுதிய கார்ல் மார்க்ஸ்: எ மாடர்ன் ரிஷி என்ற கட்டுரையிலிருந்து இவர் இச்சுயசரிதையை திருடியதாகக் கூறப்படுகிறது (ராமச்சந்திரன், கிரந்தலோகம், சனவரி, 2018).[9][10][11][12]

கே. இராமகிருட்டிண பிள்ளை
Bust of Swadeshabhimani Ramakrishna Pillai in Thiruvananthapuram, Nov 2014
திருவனந்தபுரத்தில் சுதேசபிமானி இராமகிருட்டிண பிள்ளையின் மார்பளவு சிலை
பிறப்புஇராமகிருட்டிணன்
1878 மே 28
நெய்யாற்றிங்கரை, திருவிதாங்கூர்
இறப்பு1916 மார்ச் 28 (வயது 37)
கண்ணூர்
இருப்பிடம்திருவனந்தபுரம்
தேசியம்இந்தியன்
பணிசுதேசாபிமானி என்ற செய்தித்தாள் ஆசிரியர்
பெற்றோர்நரசிம்மன் போற்றி, சக்கியம்மா
வாழ்க்கைத்
துணை
நாணிக்குட்டி அம்மா,
B. கல்யாணி அம்மா
பிள்ளைகள்ஆர். கோமதி அம்மா,
ஆர். மாதவன் நாயர்
'சுதேசபிமானி' பட்டம்'

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இவர் 1878 மே 25 அன்று அதியனூரில் (திருவிதாங்கூரின் நெய்யாற்றிங்கரையின் அரங்கமுகல்) [13] கோயில் பூசாரி சக்கியம்மா, நரசிம்மன் போற்றி ஆகியோருக்கு இளைய மகனாகப் பிறந்தார்.[14]

இவரது குடும்பத்தின் தலைவர் ஒருவர் ( தெக்கேகோட்டு வீடு ) ஒரு காலத்தில் இளவரசர் மார்தாண்டா வர்மனின் உயிரை எதிரிகளிடமிருந்து காப்பாற்றியிருந்தார். மார்த்தாண்ட வர்மன் திருவிதாங்கூர் மகாராஜாவாகவோ ஆனபோது, இவரது குடும்பத்திற்கு 50 ஏக்கர் (200,000 மீ 2) நிலம், 12 அறைகள் கொண்ட மாளிகை, நெய்யாற்றிங்கரையில் உள்ள கிருட்டிணர் கோவிலில் சில சலுகைகள் ஆகியவற்றை பரிசளித்தார். இவர் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு பிறந்தார்.

தாய்வழி உறவு முறையில் நாயர் பாரம்பரியத்தை பின்பற்றி, இராமகிருட்டிண பிள்ளை தனது சிறுவயதில் பெரும்பகுதியை தனது மாமனான வழக்கறிஞர் கேசவ பிள்ளையுடன் கழித்தார். அவர் தனது ஆரம்பக் கல்வியை நெய்யாற்றிங்கரை ஆங்கில நடுத்தரப் பள்ளியிலும், திருவனந்தபுரத்திலுள்ள அரசப் பள்ளியான மகாபாடசாலையிலும் பெற்றார். கட்டுபனை நாகநாதையர், கே.வேலுபிள்ளை, ஆர். கேசவபிள்ளை ஆகியோர் இவரது ஆரம்பகால ஆசிரியர்களாக இருந்தனர். இவர் திருவனந்தபுரத்தில் தனது குறைந்த கட்டுப்பாட்டு வாழ்க்கையை புதிய புத்தகங்கள், செய்தித்தாள்கள், புதிய இடங்கள், புதிய நண்பர்களுடன் வழக்கப்படுத்திக் கொண்டார்.[8]

இதழியல்

தொகு

கல்லூரியில் படிக்கும் போது, இராமகிருட்டிணன் செய்தித்தாள்களில் மிகுந்த ஆர்வம் காட்டத் தொடங்கினார். ஆர்வமுள்ள வாசகரான இவர் திருவிதாங்கூர், மலபார், கொச்சி மாநிலங்களில் இருந்து வெளியிடப்பட்ட ஒவ்வொரு செய்தித்தாளையும் படித்தார். அந்த நேரத்தில், கேரள வர்மா வல்லிய கோயி தம்புரான், ஆதித்யா தாசு, ஏ.ஆர்.இராஜராஜ வர்மா, உள்ளூர் எஸ். பரமேசுவர அய்யர், பேட்டயில் இராமன் பிள்ளை ஆசான், ஒடுவில் குஞ்சி கிருட்டிண மேனன், கண்டத்தில் வர்கீசு போன்ற பல இலக்கியவாதிகள், ஆசிரியர்களின் நட்பையும் வழிகாட்டலையும் பெற்றார். இது செய்தித்தாள்களுக்கான கட்டுரைகளை எழுத அவரைத் தூண்டியது. எழுத்திலும் செய்தித்தாள்களிலும் இவருக்கு இருந்த அதிக ஆர்வம், இவரது மாமன் குடும்பத்தினரின் கோபத்தை ஈட்டியது. 1898 இல் கல்லூரித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், இளங்கலை அறிவியல் பட்டத்திற்காக சென்னை செல்ல விரும்பினார். இருப்பினும், மாமனின் உத்தரவின் பேரில், திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் கலைப் பிரிவில் சேர்ந்தார்.[8]

திருமணம்

தொகு

இராமகிருட்டிண பிள்ளை அந்த காலத்தின் பழமையான முறைகேடுகளுக்கும், தவறான பழக்கவழக்கங்களுக்கும் எதிராக கடுமையாக எழுதத் தொடங்கினார். இவர் வார்த்தைகளை விட செயலில் நம்பிக்கை கொண்டிருந்தார். 1901 ஆம் ஆண்டில் நாயர் சமூகத்தின் கீழ் துணை ஜாதியைச் சேர்ந்த நாணிகுட்டி அம்மா என்ற பெண்ணை மணந்து வழக்கமான நடைமுறைகளுக்கு இவர் சவால் செய்தார்.

1904 ஆம் ஆண்டில் மலையாளி என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றுவதற்காக தனது குடும்பத்தினருடன் கொல்லத்திற்கு சென்றார். திருவிதாங்கூர் மக்களின் உரிமைகளையும் கடமைகளையும் பற்றி தலையங்கங்களை எழுதினார். சேர்த்தலை, பறவூர் பகுதிகளில் நடைபெற்ற மாநாடுகளிலும் சமூகத்தில் பரவலாக உள்ள தீமைகளையும் முறைகேடுகளையும் குறித்து இவர் பேசினார்.

1904 இல், இவரது மனைவி நாணிக்குட்டி அம்மா இறந்தார். இந்த காலகட்டத்தில், இலக்கிய சொற்பொழிவுகளும் கடிதங்களும் இராமகிருட்டிண பிள்ளை பி. கல்யாணி அம்மாவை நெருங்கின. பின்னர் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

சுதேசாபிமானி

தொகு

பிரபலமாக அறியப்பட்ட வைக்கம் மெளலவி, சுதேசாபிமானி என்ற பத்திரிகையின் உரிமையாளராகவும் சி பி கோவிந்த பிள்ளை இதன் ஆசிரியராகவும் இருந்தனர். இராமகிருட்டிண பிள்ளை 1906 சனவரியில் பத்திரிகையின் ஆசிரியராக பொறுப்பேற்றார். பின்னர், இவரும் இவரது குடும்பத்தினரும் சேறயின்கீழ் என்ற ஊரிலிருந்து செய்தித்தாள் அலுவலகமும் அச்சகமும் அமைந்துள்ள வைக்கம் பகுதிக்கு மாறினர். 1907 சூலையில், சுதேசாபிமானியின் அலுவலகம் திருவனந்தபுரத்திற்கு மாறியபோது குடும்பமும் திருவனந்தபுரத்திற்கும் மாற்றப்பட்டது. வைக்கம் மௌலவி தொடர்ந்து பத்திரிக்கையை வைத்திருந்தாலும், இவர் இராமகிருட்டிண பிள்ளைக்கு செய்தித்தாளை நடத்துவதற்கு முழு சுதந்திரம் அளித்திருந்தார். இவர்களுக்கு இடையே எந்தவொரு சட்ட அல்லது நிதி ஒப்பந்தங்களும் இருந்ததில்லை. ஆயினும், திருவனந்தபுரத்தில் பத்திரிகைகளை அமைக்க அனைத்து நிதி உதவிகளையும் மௌலவி வழங்கினார். இராமகிருட்டிண பிள்ளை, சாரதா என்ற பெண் பத்திரிகையையும், வித்யார்த்தி என்ற மாணவர் பத்திரிகையையும், கேரளன் என்ற மற்றொரு பத்திரிகையையும் தொடங்கினார்.

திருவிதாங்கூரின் அப்போதைய திவானாக இருந்த பி.ராஜகோபாலாச்சாரி செய்தித்தாளின் தாக்குதல்களின் மையமாக இருந்தார். திவானின் ஒழுக்கக்கேட்டையும் ஊழலையும் பத்திரிக்கை வெளியிட்டது. .[10] திருவிதாங்கூர் மகாராஜாவின் அரசாட்சியையும் இவர் தாக்கினார்:

பி. கல்யாணி அம்மா

தொகு

பி. கல்யாணி அம்மா ராமகிருஷ்ண பிள்ளையின் இரண்டாவது மனைவி. ஒரு குறிப்பிடத்தக்க கல்வியறிவாளராகவும் இருந்தார்.[15] இவரது முக்கியமான படைப்புகளில் வியாசவத்த சமரனக்கல், கர்மபலம், மகாதிகல் மற்றும் ஆத்மகதை ஆகியவை அடங்கும். இவரது வாழ்க்கை வரலாறு 'வியாசவத்தா சமரனக்கள் (12 வருட நினைவுகள்) இவர்களின் திருமண வாழ்க்கையின் 12 ஆண்டிளை பற்றியது. இரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஒரு புதினத்தையும் இவர் மொழிபெயர்த்தார். இவர் 1959 அக்டோபர் 9 அன்று இறந்தார்.

சுதேசாபிமானி சமாரக சமிதி

தொகு

சுதேசாபிமானி சமாரக சமிதி என்பது இராமகிருட்டிண பிள்ளையின் நினைவாக உருவான ஒரு அறக்கட்டளையாகும். ஒவ்வொரு ஆண்டும் சுதேசபிமானி இராமகிருட்டிண பிள்ளை நாடுகடத்தப்பட்ட ஆண்டை விழாவாக சமிதி அனுசரிக்கிறது, இதில் பல பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.[16]

சுதேசபிமானி இராமகிருட்டிண பிள்ளை விருது

தொகு

ஒவ்வொரு ஆண்டும் கேரள அரசு சர்பில் பத்திரிகைக்காக சுதேசாபிமானி இராமகிருட்டிண பிள்ளை 'விருது வழங்கப்படுகிறது.

மேலும் காண்க

தொகு

கேரளாவில் சமூக சீர்திருத்தவாதிகள்:

மேலும் படிக்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Proceedings - Indian History Congress.
  2. Who is who of Freedom Fighters in Kerala.
  3. "The criticism against the Diwan of Travancore that appeared in the daily irritated the authorities and eventually resulted in the confiscation of press during 1910". Archived from the original on 14 பிப்ரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 20 November 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Literary Criticism: Western Influence". PRD, Kerala Government. பார்க்கப்பட்ட நாள் 20 November 2008.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Constitutionalism in Travancore and Cochin.
  6. Ende Naadukadathal.
  7. In Quest of Kerala.
  8. 8.0 8.1 8.2 Vyazhavatta Smaranakal.
  9. Communism in Kerala.
  10. 10.0 10.1 Jeffrey, Robin. "THE THREE STAGES OF PRINT : Testing Ideas of "Public Sphere," "Print-Capitalism" and "Public Action"" (PDF). Archived from the original (PDF) on 7 அக்டோபர் 2009. பார்க்கப்பட்ட நாள் 20 November 2008.
  11. "Marx comes to India : earliest Indian biographies of Karl Marx / by Lala Hardayal and Swadeshabhimani Ramakrishna Pillai". Archived from the original on 14 டிசம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 20 November 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. TANEJA, NALINI. "ndian communism during the Raj". Front line - India's National Magazine. Archived from the original on 12 மே 2008. பார்க்கப்பட்ட நாள் 20 November 2008.
  13. "RAMAKRISHNA PILLAI, SWADESHABHIMANI". பார்க்கப்பட்ட நாள் 20 November 2008.
  14. "IMPORTANT PERSONALITIES : RAMAKRISHNA PILLAI, SWADESHABHIMANI". பார்க்கப்பட்ட நாள் 20 November 2008.
  15. "KALYANI AMMA B." பார்க்கப்பட்ட நாள் 20 November 2008.
  16. "Anniversary of banishment". The Hindu. 27 September 2004. Archived from the original on 20 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 20 November 2008.