சுந்தா செம்பகம்

சுந்தா செம்பகம் (Sunda coucal)(சென்ட்ரோபசு நிக்ரோரூபசு) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள ஒரு குயில் சிற்றினமாகும். இது இந்தோனேசியாவின் சாவகம் தீவில் காணப்படுகிறது. இது அலையாத்திக் காடுகள், நன்னீர் சதுப்பு நிலக் காடுகள் மற்றும் உவர் நீருக்கு அருகிலுள்ள புல்வெளிகளில் வாழ்கிறது. இது 1994ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில்அழிவாய்ப்பு இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. சிறிய அளவிலான இதன் எண்ணிக்கை வாழ்விட அழிவு மற்றும் வேட்டையாடுதலால் அச்சுறுத்தப்படுகிறது.[1] இது வெட்டுக்கிளிகள், தரை வண்டுகள், அந்துப்பூச்சிகள், பல்லி, பாம்பு மற்றும் தவளைகளை உண்ணும். நெல் வயலில் நெல் விதைகளைக் கொறிப்பதும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.[2]

சுந்தா செம்பகம்
அலையாத்திக் காடுகள் அருகே, சூராபாயா, கிழக்கு சாவகம்
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
Phylum: முதுகுநாணி
வரிசை: குக்குலிபார்மிசு
குடும்பம்: குக்குலிடே
பேரினம்: சென்ட்ரோபசு
இனம்: C. nigrorufus
இருசொற் பெயரீடு
Centropus nigrorufus
(குவியர், 1817)

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தா_செம்பகம்&oldid=3578646" இருந்து மீள்விக்கப்பட்டது