சும்காயித் நகரம்

சும்காயித் (Sumgayit) என்பது அசர்பைஜானில் மூன்றாவது பெரிய நகரமாகும். இது காசுப்பியன் கடலுக்கு அருகில் அமைந்துள்ளது. தலைநகர் பக்கூவிலிருந்து 31 கிலோமீட்டர்கள் (19 மைல்கள்) தொலைவில் உள்ள, இந்த நகரம் சுமார் 265,000 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. 83 சதுர கிலோமீட்டர்கள் (32 சதுர மைல்) பரப்பளவுடன் இந்த நகரம் தலைநகர் பக்கூ மற்றும் கஞ்சா நகரத்திற்குப் பிறகு அசர்பைஜானில் மூன்றாவது பெரிய நகரமாக திகழ்கிறது. இது நவம்பர் 22, 1949 இல் நிறுவப்பட்டது. [1] நகரத்தில் ஜோரத் மற்றும் ஹாஜி ஜெய்னலாப்தீன் என்ற இரண்டு குடியேற்றங்கள் நகர நிர்வாகத்திற்குள் உள்ளன: எண்ணெய் தொழிலதிபர் மற்றும் பரோபகாரர் ஹாஜி ஜெய்னலாப்தீன் தாகியேவின் பெயரிடப்பட்டது. இது சும்காயிட் மாநில பல்கலைக்கழகத்தின் தாயகமாகும்.

சும்காயித்
குடியரசின் துணை நகரம்
ஆள்கூறுகள்: 40°35′23″N 49°40′07″E / 40.58972°N 49.66861°E / 40.58972; 49.66861
நாடு அசர்பைஜான்
அரசு
 • மேயர்சாகீர் பெராக்கோவ்
பரப்பளவு
 • மொத்தம்97.17 km2 (37.52 sq mi)
ஏற்றம்26 m (85 ft)
மக்கள்தொகை (2020)
 • மொத்தம்265 150
தொலைபேசி குறியீடு+994 18
இணையதளம்www.sumqayit-ih.gov.az

சொற்பிறப்பியல் தொகு

உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளின்படி இந்த நகரத்திற்கு சும்காயித் நதி என்று பெயரிடப்பட்டுள்ளது. பின்னோக்கிப் பார்த்தால், புராணக்கதை "சும்" என்ற பெயரில் ஒரு நாயகனின் கதையைச் சொல்கிறது. அவன் சும்காயித் நதியை ஓடவிடாமல் தடுத்த ஒரு அரக்கனை எதிர்த்துப் போராட சமூகத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறான் [2] இறுதியில் அசுரனைக் கொல்லும்போது தண்ணீரினால் அடித்துச் செல்லப்படுகிறான். மீண்டும் ஒருபோதும் காணப்படவில்லை. அவன் காணாமல் போனதால் அவனது காதலியான ஜெய்ரான் ஆற்றுக்குச் சென்று "சும் கயாத்!" என்கிறாள். (இதன் பொருள் அசர்பைஜான் மொழியில் "சும், திரும்பி வா!" எனப்பொருள் [3] எனவே இந்த ஆறு சும்காயித் என்று அழைக்கப்பட்டது. அதுவே நகரத்தின் பெயராகவும் ஆனது.

வரலாறு தொகு

இடைக்கால சகாப்தம் தொகு

வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, மீடியாப் பழங்குடியினர் இப்பகுதியில் வாழ்ந்தனர். கட்டுமான வளர்ச்சியின் போது, கட்டடத்தின் அஸ்திவாரம் தோண்டப்பட்டபோது, அந்த இடத்தில் ஒரு பழங்கால பயணியர் மாளிகையின் எச்சங்களும், தனிப்பட்ட பொருட்களுளும் கண்டுபிடிக்கப்பட்டன.

1580 ஆம் ஆண்டில், ஆங்கிலேயப் பயணி எச். பாரோ தனது எழுத்துக்களில் நகரத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். 1858 ஆம் ஆண்டில், அலெக்சாண்டர் டூமா தனது நினைவுக் குறிப்பான ட்ரிப் டு காகசஸ் என்ற நூலை நகரத்தைப் பற்றி எழுதியுள்ளார். அதற்குப் பிறகு 1920களில் சோவியத் ஒன்றியம் இப்பகுதியின் மீது கட்டுப்பாட்டைப் பெறும் வரை இதைப் பற்றி நகரின் குறிப்புகள் கணிசமான எதுவும் உருவாக்கப்படவில்லை . [4]

சோவியத் காலம் தொகு

மைக்கேல் கோர்பச்சேவ் ஆரம்பித்த கிளாஸ்னோஸ்டின் அரசியலைத் தொடர்ந்து, சோவியத் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் உள்நாட்டு அமைதியின்மை மற்றும் இன மோதல்கள் வளர்ந்தன, இதில் நாகோர்னோ-கராபாக், [5] அசர்பைஜான் குடியரசின் ஒரு பகுதியானது.

குடியரசு சகாப்தம் தொகு

முதல் நாகோர்னோ-கராபாக் போருக்குப் பிறகு, இந்த நகரம் பல அஜர்பைஜான் அகதிகள் உள்நாட்டில் இடம்பெயர்ந்த நபர்களின் வீடாக மாறியது. முக்கியமாக குபாட்லி மற்றும் ஜெங்கிலன் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். [6] 1994 ஆம் ஆண்டில், ஹெய்தார் அலியேவ் நகரின் எல்லையில் ஒரு பெரிய அளவிலான இலவச பொருளாதாரப் பகுதி திட்டத்தைத் தொடங்கினார். [7]

பொருளாதாரம் தொகு

1935 ஆம் ஆண்டில், சோவியத் அரசாங்கம் அப்செரோன் தீபகற்பத்தில் கனரக தொழிற்துறையை உருவாக்க முடிவு செய்தது. மேலும் பக்கூ உடனான அருகாமையும், தற்போதுள்ள இருப்புப்பாதைகளில் அதன் முக்கிய நிலையும் அடிப்படையில் சும்காயித்தின் எதிர்கால இருப்பிடம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

1938-1941 க்கு இடையில், பக்கூவின் வளர்ந்து வரும் பெட்ரோலியத் தொழிலுக்கு மின்சாரம் வழங்க ஒரு அனல் மின் நிலையம் கட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிக கனரக தொழில்கள் வந்தன. இரண்டாம் உலகப் போரின் காரணமாக, 1944 ஆம் ஆண்டில் உலோகவியல் மற்றும் வேதித் தொழிற்துறை போன்றவை கட்டப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தபோது இப்பகுதியின் கட்டுமானம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Sumqayıt şəhər icra hakimiyyəti. Şəhərin pasportu" [Sumgayit Executive Power. Resume]. Archived from the original on 2010-12-20. பார்க்கப்பட்ட நாள் 2010-12-29.
  2. "Əfsanələr". www.sumhistorymuseum.az (in Azerbaijani). Archived from the original on 13 November 2014. பார்க்கப்பட்ட நாள் 18 November 2014.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "Tarixi Əfsanə". www.sumqayit-ih.gov.az (in Azerbaijani). Archived from the original on 12 November 2014. பார்க்கப்பட்ட நாள் 18 November 2014.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "Sumqayıt şəhər icra hakimiyyəti. Yaranma tarixi" [Sumgayit Executive Power. History]. Archived from the original on 2010-12-20. பார்க்கப்பட்ட நாள் 2010-12-29.
  5. The Armenia-Azerbaijan Conflict: causes and implications. https://books.google.com/books?id=ZeP7OZZswtcC&q=17000&pg=PP1. 
  6. Abbasov, Shahin. "Azerbaijan: Sumgayit Becomes Font of Syria-Bound Jihadists". www.eurasianet.org. Archived from the original on 11 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
  7. "Renewed Dreams". www.thebusinessyear.com. Archived from the original on 11 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sumgayit
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சும்காயித்_நகரம்&oldid=3675791" இலிருந்து மீள்விக்கப்பட்டது