சுலோவீனியா தேசிய காற்பந்து அணி

சுலோவீனியா தேசிய காற்பந்து அணி (Slovenia national football team) ஆண்கள் பன்னாட்டுக் காற்பந்தில் சுலோவீனியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது சிலோவீனியக் காற்பந்து சங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. தேசிய அணியானது பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பான பீஃபாவின் உலகளாவிய அதிகார வரம்பிற்கு உட்பட்டது, அத்துடன் ஐரோப்பாவில் ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் யூஈஎஃப்ஏ-இனால் நிர்வகிக்கப்படுகிறது. இவ்வணி ஐரோப்பிய நாடுகளுக்குக் கிடைக்கும் உலகக்கோப்பை காற்பந்து, யூஈஎஃப்ஏ தேசிய லீக், ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி ஆகிய மூன்று முக்கிய தொழில்முறை போட்டிகளில் பங்கேற்கிறது. சுலோவீனியா தனது முதல் அதிகாரப்பூர்வ போட்டியை யுகோசுலாவியாவிலிருந்து நாடு விடுதலை பெற்ற ஒரு ஆண்டிற்குப் பிறகு 1992 இல் விளையாடியது.[2] சுலோவீனிய அணியின் பெரும்பாலான உள்ளூர்ப் போட்டிகள் தலைநகர் லியுப்லியானாவில் உள்ள இசுடோச்சிசு திடலில் விளையாடப்படுகின்றன.

சுலோவீனிய தேசிய காற்பந்து அணி
Shirt badge/Association crest
கூட்டமைப்புசுலோவீனியா காற்பந்துச் சங்கம்
கண்ட கூட்டமைப்புஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா)
தன்னக விளையாட்டரங்கம்இசுதோச்சிசு திடல்
பீஃபா குறியீடுSVN
பீஃபா தரவரிசை 63 2 (6 அக்டோபர் 2022)[1]
அதிகபட்ச பிஃபா தரவரிசை15 (அக்டோபர்–நவம்பர் 2010)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை134 (திசம்பர் 1993)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
அதிகாரபூவமற்றது
யூகோஸ்லாவிய இராச்சியம் சுலோவீனியா 0–5 பிரான்சு 
(லியுப்லியானா, யுகோசுலாவியா; 23 சூன் 1921)
அதிகாரபூர்வம்
 எசுத்தோனியா 1–1 சுலோவீனியா 
(தாலின், எசுத்தோனியா; 3 சூன் 1992)
பெரும் வெற்றி
 ஓமான் 0–7 சுலோவீனியா 
(மஸ்கத், ஓமான்; 8 பெப்ரவரி 1999)
பெரும் தோல்வி
 பிரான்சு 5–0 சுலோவீனியா 
(சான்-டெனி, பிரான்சு; 12 அக்டோபர் 2002)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்2 (முதற்தடவையாக 2002 இல்)
சிறந்த முடிவுகுழுநிலை (2002, 2010)
ஐரோப்பிய வாகை
பங்கேற்புகள்2 (முதற்தடவையாக 2000 இல்)
சிறந்த முடிவுகுழுநிலை (2000, 2024)
இணையதளம்nzs.si

சுலோவீனியா பெரும் போட்டிக்கு நான்கு முறை தகுதி பெற்றது, இரண்டு முறை உலகக்கிண்ணப் போட்டிகளிலும், இரண்டு முறை ஐரோப்பிய வாகைப் போட்டிகளிலும் விளையாடியது, ஆனால் ஒரு இறுதிப் போட்டியின் குழு நிலைக்கு அப்பால் அது முன்னேறவில்லை.[3] 2010 பீஃபா உலகக்கிண்ணத்தில், சுலோவீனியா அல்சீரியாவை 1-0 என்ற கணக்கில் தோற்கடித்து பெரும் சுற்று ஒன்றில் முதல் (இதுவரை மட்டும்) வெற்றி பெற்றது. 2004 இல் இத்தாலியை 1-0 என தோற்கடித்தது போன்ற சில குறிப்பிடத்தக்க முடிவுகளை அந்த அணி அடைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "The FIFA/Coca-Cola World Ranking". FIFA. 6 அக்டோபர் 2022. பார்க்கப்பட்ட நாள் 6 அக்டோபர் 2022.
  2. "Zgodovina" [History]. Football Association of Slovenia. பார்க்கப்பட்ட நாள் 11 June 2017.
  3. "European Championship 1996 qualifications". The Rec.Sport.Soccer Statistics Foundation. பார்க்கப்பட்ட நாள் 5 July 2021.

வெளி இணைப்புகள்

தொகு