சுல்தான் இசுமாயில் பெட்ரா வானூர்தி நிலையம்
சுல்தான் இசுமாயில் பெட்ரா வானூர்தி நிலையம் அல்லது கோத்தா பாரு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: KBR, ஐசிஏஓ: WMKC); (ஆங்கிலம்: Sultan Ismail Petra Airport அல்லது Kota Bharu Airport; மலாய்: Lapangan Terbang Sultan Ismail Petra) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில் கோத்தா பாரு மாநகரில் அமைந்துள்ள வானூர்தி நிலையம் ஆகும்.[1][2]
வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
உரிமையாளர் | மலேசிய வானூர்தி நிலையங்கள் நிறுவனம் | ||||||||||
இயக்குனர் | மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம் Malaysia Airports Holdings Berhad | ||||||||||
சேவை புரிவது | கோத்தா பாரு, கிளாந்தான் மற்றும் பெசுட், திராங்கானு | ||||||||||
அமைவிடம் | பெங்காலான் செப்பா, கிளாந்தான்,, மலேசியா | ||||||||||
நேர வலயம் | மலேசிய நேரம் ({{{utc}}}) | ||||||||||
உயரம் AMSL | 16 ft / 5 m | ||||||||||
ஆள்கூறுகள் | 6°10′02″N 102°17′32″E / 6.1672560°N 102.2922092°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (2018) | |||||||||||
|
இந்த வானூர்தி நிலையம், கோத்தா பாரு, கிளாந்தான், திராங்கானு மாநிலத்தின் பெசுட் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு வானூர்திச் சேவையை வழங்கும் நிலையமாக விளங்குகிறது.
1979-ஆம் ஆண்டில் இருந்து 2010-ஆம் ஆண்டு வரை கிளாந்தான் மாநிலத்தை ஆட்சி செய்த சுல்தான் இஸ்மாயில் பெட்ராவின் (Ismail Petra of Kelantan) நினைவாக இந்த விமான நிலையத்திற்குப் பெயரிடப்பட்டது.
பொது
தொகுசுல்தான் இசுமாயில் பெட்ரா வானூர்தி நிலையத்தின் தற்போதைய புதிய முனையம் செப்டம்பர் 2002-இல் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. இந்த வானூர்தி நிலையம் 12,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. அதிகப் பட்சமாக 1.45 மில்லியன் பயணிகளைக் கையாள்வதற்கு ஆற்றல் கொண்டது.
விமான நிலையம் 9 பயணிகள் பதிவுச் சாவடிகளை (check-in counters) கொண்டுள்ளது. மலேசியா எயர்லைன்சு, ஏர்ஏசியா, பயர்பிளை மற்றும் மலின்டோ ஏர் ஆகியவற்றின் 7 உள்நாட்டு இடங்களுக்கு இடையிலான விமானச் சேவைகளை வழங்குகிறது. கிழக்கு கடற்கரையில் மிகவும் பரபரப்பான வானூர்தி நிலையமாகவும் கருதப் படுகிறது.
வரலாறு
தொகுஇந்த வானூர்தி நிலையம் முன்னாள் பிரித்தானிய இராணுவத்தின் வானூர்தி நிலையமாகும். இரண்டாம் உலகப் போரின் போது மலாயா மீதான ஜப்பானியர் படையெடுப்பில் இந்த நிலையம் தரையிறங்கும் தளமாகப் பயன்படுத்தப்பட்டது.
1941-ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி, மலாயாவில் முதல் ஜப்பானிய வானூர்தியின் தரையிறக்கம் இந்த நிலையத்தில் தான் நடைபெற்றது. போருக்குப் பிறகு, பொதுமக்களுக்கான நிலையமாக மாற்றப்பட்டது. பயணிகள் முனையம் கட்டப்பட்டது. பின்னர் பெங்காலான் செப்பா வானூர்தி நிலையம் என்று அழைக்கப்பட்டது.
புதிய முனையம்
தொகுநிலையத்தின் முனையம் விரிவுபடுத்தப்பட்டது. அதன் பிறகு, சுல்தான் இஸ்மாயில் பெட்ரா வானூர்தி நிலையம் என்று அறிவிக்கப்பட்டது.
1999-இல், சுல்தான் இசுமாயில் பெட்ரா வானூர்தி நிலையம் ஒரு புதிய முனையக் கட்டிடத்திற்கு மாற்றப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. இந்தத் திட்டம் செப்டம்பர் 2000-இல் தொடங்கப்பட்டு ஜூன் 2002-இல் நிறைவடைந்தது. மொத்த செலவு 55 மில்லியன் ரிங்கிட்.
ஓடுபாதை விரிவாக்கம்
தொகுஅக்டோபர் 2008-இல், ஓடுபாதையை 2,400 மீ (7,874 அடி) நீளத்திற்கு நீட்டிக்க இருப்பதாக அரசாங்கம் அறிவித்தது. அந்தத் திட்டம் 14 ஜூன் 2010-இல் தொடங்கியது.
நிலையத்தின் பழைய ஓடுபாதை 1,981 மீட்டரில் இருந்து 2,400 மீட்டருக்கு நீட்டிக்கப்பட்டது. போயிங் 737-800 மற்றும் ஏர்பஸ் ஏ 320 ரக வானூர்திகள் தரை இறங்கும் அளவிற்கு ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்பட்டது.
ஏர்ஏசியா ஒப்பந்தம்
தொகுபிப்ரவரி 2013-இல், ஏர்ஏசியா மற்றும் பயர்பிளை ஆகிய நிறுவனங்கள்; சுல்தான் இசுமாயில் பெட்ரா விமான நிலையத்தை தங்களின் இரண்டாம் நிலை மையமாக மாற்றும் ஒப்பந்தத்தில் மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனத்துடன் கையெழுத்திட்டன.
அக்டோபர் 2017-இல், விமான நிலையத்தின் முனையங்களை மேம்படுத்த மலேசிய மத்திய அரசு ரிங்கிட் 450 மில்லியன் தொகையை வழங்கியது.
வானூர்திச் சேவைகள்
தொகுசேவைகள் | சேரிடங்கள் |
---|---|
ஏர்ஏசியா | செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஜொகூர் பாரு); கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (சிப்பாங்); கோத்தா கினாபாலு; கூச்சிங்; லங்காவி; பினாங்கு |
பயர்பிளை | சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம் (கோலாலம்பூர்–சுபாங்); பினாங்கு |
மலேசியா எயர்லைன்சு | கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (சிப்பாங்) |
மலின்டோ ஏர் | சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம் (கோலாலம்பூர்–சுபாங்); லங்காவி; |
உள்நாட்டுச் சேவைகள்
தொகுஆண்டு | பயணிகள் வருகை |
பயணிகள் % மாற்றம் |
சரக்கு (டன்கள்) |
சரக்கு % மாற்றம் |
வானூர்தி நகர்வுகள் |
வானூர்தி % மாற்றம் |
---|---|---|---|---|---|---|
2003 | 589,950 | 315 | 10,010 | |||
2004 | 639,871 | 8.5 | 235 | ▼25.4 | 11,869 | 18.6 |
2005 | 635,397 | ▼0.7 | 168 | ▼28.5 | 11, 194 | ▼ 5.7 |
2006 | 678,306 | 6.7 | 210 | 25.0 | 38,352 | 242.6 |
2007 | 759,316 | 12.0 | 163 | ▼22.4 | 58,996 | 53.8 |
2008 | 836,060 | 10.1 | 181 | 11.0 | 57,102 | ▼ 3.2 |
2009 | 1,003,162 | 20.0 | 185 | 2.2 | 74,863 | 31.1 |
2010 | 1,047,755 | 4.4 | 177 | ▼4.3 | 75,906 | 1.4 |
2011 | 1,132,345 | 8.1 | 164 | ▼7.3 | 64,114 | ▼ 15.5 |
2012 | 1,259,205 | 11.2 | 147 | ▼10.4 | 50,991 | ▼ 20.5 |
2013 | 1,585,238 | 25.9 | 179 | 21.8 | 50,406 | ▼ 1.1 |
2014 | 1,800,836 | 13.6 | 397 | 121.6 | 44,628 | ▼ 11.5 |
2015 | 2,063,747 | 14.6 | 1,003 | 152.5 | 42,810 | ▼ 4.1 |
2016 | 2,062,248 | ▼ 0.1 | 780 | ▼ 22.2 | 31,956 | ▼ 25.4 |
2017 | 1,988,212 | ▼ 3.6 | 775 | ▼ 0.7 | 30,433 | ▼ 4.8 |
2018 | 1,688,625 | ▼ 15.1 | 1,073 | 38.4 | 24,481 | ▼ 19.6 |
2019 | 1,823,089 | 8.0 | 1,250 | 16.6 | 25,383 | 3.7 |
2020 | 711,480 | ▼ 61.0 | 545 | ▼ 56.4 | 13,460 | ▼ 47.0 |
சான்று: மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்[3] |
இலக்குகள்
தொகுதரவரிசை | இலக்குகள் | பயணங்கள் (வாரம்) | வானூர்தி நிறுவனங்கள் | Note |
---|---|---|---|---|
1 | கோலாலம்பூர்–சுபாங், சிலாங்கூர் | 72 | FY, OD | |
2 | கோலாலம்பூர்–சிப்பாங், கோலாலம்பூர் | 51 | AK, MH | |
3 | பினாங்கு, பினாங்கு | 5 | AK, FY | |
4 | லங்காவி, கெடா | 8 | AK, OD | |
5 | ஜொகூர் பாரு, ஜொகூர் | 3 | AK | |
6 | கோத்தா கினபாலு, சபா | 4 | AK | |
7 | கூச்சிங், சரவாக் | 1 | AK |
வானூர்தி நிலையக் காட்சியகம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "AIP Supplement Malaysia" (PDF). Department of Civil Aviation Malaysia. 14 July 2011. Archived from the original (PDF) on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 January 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Sultan Ismail Petra Airport, Kota Bharu at Malaysia Airports Holdings Berhad
- ↑ "Malaysia Airports: Airports Statistics 2020" (PDF). malaysiaairports. 2 April 2021. Archived from the original (PDF) on 28 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 5 October 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)