சித்பவானந்தர்

(சுவாமி சித்பவாநந்தர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுவாமி சித்பவானந்தர் (Swami Chidbhavananda, மார்ச் 11, 1898 - நவம்பர் 16, 1985) ராமகிருஷ்ண குருகுல மரபைச் சேர்ந்த துறவி. இவர் திருப்பராய்த்துறையில் இராமகிருஷ்ண தபோவனம் என்ற அமைப்பை நிறுவினார். அதனூடாக விரிவான கல்விச்சேவைகளை நிகழ்த்தினார். பகவத்கீதை, திருவாசகம் போன்ற நூல்களுக்கு புகழ்பெற்ற உரைகளை எழுதியிருக்கிறார்.

சித்பவானந்தர்
இயற்பெயர்சின்னுக் கவுண்டர்
குருராமகிருஷ்ணர்

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

தமிழ்நாடு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செங்குட்டைப்பாளையம் என்ற கிராமத்தில் பி. கே. பெரியண்ணக் கவுண்டர், நஞ்சம்மையார் ஆகியோருக்கு மகனாக சிபவானந்தர் பிறந்தார். இயற்பெயர் சின்னுக்கவுண்டர். ஆத்துப் பொள்ளாச்சி கிராமப் பள்ளியிலும், பொள்ளாச்சி கிராமப்பள்ளியிலும் ஆரம்பக்கல்வி கற்றார். கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலப் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிக் கல்வி கற்றார்.

இக்காலகட்டத்தில் பொள்ளாச்சிக்கு வந்த பழனிச் சாது சுவாமிகள் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. பழனிக்குச் சென்று வர ஆரம்பித்தார். சட்டிச் சுவாமிகள் அறிமுகமும் வாய்த்தது. 1918-இல் சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில் சென்னை மாகாணத்தில் 7-ஆம் இடம் பெற்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் எஃப்.ஏ. வகுப்பில் சேர்ந்தார்.

மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்லும் நிலையில் சுவாமி விவேகானந்தரது "சென்னைச் சொற்பொழிவுகள்" என்ற நூலின் ஒரு கட்டுரையால் கவரப்பட்டு பயணத்தை நிறுத்தினார். சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை படித்தார். அப்போது விக்டோரியா விடுதியில் தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார் அவர்களுடன் தோழர் ஆனார். இருவரும் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்குச் சென்று ஸ்ரீமத் சுவாமி சிவானந்தர், ஸ்ரீமத் சுவாமி பிரேமானந்தர் ஆகியோரின் அறிமுகம் பெற்றனர்.

1923-ல் இளங்கலை படிப்பை முடித்ததும் அகிலானந்த சுவாமிகளுடன் புவனேஸ்வரம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சென்று சுவாமி சிவானந்தரிடம் பிரம்மச்சரியத் தீட்சை பெற்றார். திரையம்பக சைதன்யர் என்ற பெயருடன் அங்கே இருந்தார். சுவாமி சிவானந்தரின் அனுமதி பெற்றுத் தென்னாட்டில் பயணம்செய்த சேரன்மகாதேவியில் தேச பக்தர் வ. வே. சு. ஐயரைச் சந்தித்தார்.

1924 சூன் மாதம் சலவைத் தொழிலாளி ஒருவர் அளித்த நிலத்தில் சுவாமி சிவானந்தர் ஊட்டி ஆசிரமத்திற்கு அடிக்கல் நாட்டினார். திரையம்பக சைதன்யரின் குடும்பம் ஆசிரமம் அமைக்க உதவி செய்தனர். 1926 சூலை 25 இல் சுவாமி சிவானந்தர் இவருக்குச் சந்நியாச தீட்சை வழங்கி சுவாமி சித்பவானந்தர் என்று பெயரிட்டார்.

1930 முதல் 1940 வரை உதகை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்தார். அப்போது காந்தியடிகள், நாராயணகுரு ஆகியோர் அங்கே வருகை புரிந்தார்கள். சிவானந்தர் சமாதியடைந்த பின்னர் ராமகிருஷ்ண மடத்தில் இருந்து விலகிக் கைலாய யாத்திரை ஒன்றை மேற்கொண்டார்.

திருச்சி அருகே திருப்பராய்த்துறைக்குச் சென்ற சித்பவானந்தர் தாருகாவனேசுவரர் கோயிலில் 1940 ஆம் ஆண்டில் நடந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்றார். அதை நடத்திய ராமநாதன் செட்டியார், கானாடுகாத்தான் அருணாசலம் செட்டியார் ஆகியோருடன் சந்திப்பு ஏற்பட்டது. திருப்பராய்த்துறையில் தங்க முடிவெடுத்தார். நூற்றுக்கால் மண்டபத்தில் ஆரம்பப் பள்ளி ஒன்றை ஆரம்பித்தார். திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலில் வாரம் ஒருமுறை தாயுமானவர் பாடலுக்கு விளக்கம் அளித்தார்.

1942-ல் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தை நிறுவினார். குருகுல முறையில் விவேகானந்த வித்யாவன நடுநிலைப் பள்ளி மற்றும் விவேகானந்த மாணவர் விடுதி ஆகியவற்றைத் தொடங்கினார். உள்ளூர் மாணவர்களுக்காகத் திருப்பராய்த்துறையில் நடுநிலைப் பள்ளி தொடங்கினார். 1951 ல் தர்ம சக்கரம் மாத இதழை ஆரம்பித்தார். தொடர்ந்து பல கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தார்.

சேலத்தில் சாரதா வித்யாலயாப் பெண்கள் பள்ளி, விவேகானந்த ஆசிரியர் கல்லூரி ஆகியவை ஆரம்பிக்கப்பட்டன. 1964ல் மதுரை மாவட்டம் திருவேடகத்தில் ராமகிருஷ்ண ஆசிரமம் ஆரம்பிக்கப்பட்டது. கோவை மாவட்டம் சித்திரச் சாவடியில் இன்னொரு கிளை ஆரம்பிக்கப்பட்டது. 1967 இல் தமிழகத்தில் பெண்களுக்கெனத் துறவுத் தொண்டு நிறுவனமாக சேலத்தில் சாரதா தேவி சமிதி தொடங்கப்பட்டது. 1971-ல் திருவேடகத்தில் விவேகானந்த குருகுலக் கல்லூரி அமைக்கப்பட்டது.

மறைவு

தொகு

1985 நவம்பர் 16 ஆம் தேதி மகாசமாதி அடைந்தார். அவரது சமாதி திருப்பராய்த்துறையில் உள்ளது.

படைப்புகள்

தொகு
  • ஸ்ரீமத் பகவத் கீதை (தமிழ், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளில்)
  • ஸ்ரீமத் பகவத் கீதை (பாராயண கீதை)
  • ஸ்ரீமத் பகவத் கீதை - முன்னுரை (தமிழ் மற்றும் ஆங்கிலம்)
  • மஹாபாரதம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)
  • இராமாயணம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)
  • திருவாசகம்
  • ஸ்ரீ தாயுமானவ சுவாமி பாடல்கள்
  • பராபரக் கண்ணி
  • சுகவாரி
  • எங்கும் நிறைகின்ற பொருள்
  • கருணாகரக் கடவுள்
  • ஆனந்தமான பரம்
  • சின்மயானந்த குரு
  • மெளனகுரு வணக்கம்
  • பைங்கிளிக் கண்ணி
  • பரிபூரணானந்தம்
  • பரசிவவணக்கம்
  • மலைவளர்காதலி
  • தாயுமானவசுவாமி வரலாறு
  • தாயுமானவர் ஆலயத்தின் தத்துவ அமைப்பு
  • Thus Speaks Tayumana Swamigal
  • The Garland of Paraparam
  • அருள்மூவர் நூல்கள்
  • ஸ்ரீ பரமஹம்சரின் ஆப்தமொழி
  • ஸ்ரீ பரமஹம்சரின் பெருமை
  • ஸ்ரீ ராமகிருஷ்ண உபதேச மஞ்சரி
  • ஸ்ரீ சாரதா தேவியாரது சரிதம்
  • ஸ்ரீ ராமகிருஷ்ண சரிதம்
  • ஸ்ரீ விவேகானந்த ஜீவிதம்
  • விவேகானந்த விவரணம்
  • தமிழகத்தில் சுவாமி விவேகானந்தர்
  • சுவாமி விவேகானந்தர்
  • விவேகானந்த உபநிஷதம்
  • அனுஷ்டான வேதாந்தம்
  • கர்மயோக விளக்கம்
  • ஞானயோக விளக்கம்
  • ராஜயோக விளக்கம்
  • பக்தியோக விளக்கம்
  • Ramakrishna Lives Vedantha
  • Man making Message of Swami Vivekananda
  • நாடகங்கள்
  • ஏகலைவனின் குருபக்தி
  • ஹரிச்சந்திரன்
  • விரதவீரர் பீஷ்மர்
  • வாலி மோட்சம்
  • பாண்டவ கௌரவ பெருமை
  • தானவீரன் கர்ணன்
  • பாதுகா பட்டாபிஷேகம்
  • தவப்புதல்வர்கள்
  • விபீஷணன் சரணாகதி
  • பார்வதி, லட்சுமி, சரஸ்வதி கர்வபங்கம்
  • பிரஹ்லாதன்
  • மார்க்கண்டேயன்
  • தபோபலன்

பிறநூல்கள்

தொகு
  • ஐயம் தெளிதல் (3 பகுதிகள்)
  • அருள் விருந்து (3 பாகங்கள்)
  • சந்தேகம் தெளிதல் (3 பாகங்கள்)
  • கடவுளின் வடிவங்கள்
  • கணபதி
  • முருகக் கடவுள்
  • சிவதத்துவம், சக்தி தத்துவம், விஷ்ணு தத்துவம்\
  • சூரிய நாராயணன்
  • ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்
  • கல்வி
  • வர்ணாச்ரம தர்மம்
  • சந்நியாசி கீதம்
  • நோய்க்கு இடம் கொடேல்
  • மாணவர்க்கு ஒரு சொல்
  • குழந்தைகளின் களிக்கூடம்
  • ஆசிரியன்
  • மாணாக்கன்
  • எதிர்கால இந்தியா
  • கண்ணன் என்னும் கடவுள்
  • திருக்கைலாயகிரி யாத்திரை
  • நவதிருப்பதிகளும் ஆழ்வார்களின் ஆலய வழிபாடு
  • சைவன் யார்?
  • ஈசன் எங்கும் நிறைந்துள்ளான்
  • செத்தவர்கள் நம்மோடு பேசுகிறார்களா?
  • கர்மகாண்டம் எது? ஞான காண்டம் எது?
  • தவழ்கின்ற தெய்வம்
  • தெய்வீக மகிமைகள்
  • உலகை உய்வித்த உத்தமன்
  • அறம் வளர்த்த நம்பி
  • ஞான ரதம்
  • சந்நியாசி
  • தேவ ரகசியம் (முதலிய கதைகள்)
  • இராவண தத்துவம்
  • மனிதனது நிஜ சொரூபம்
  • ஹிந்து மதமும் கிறிஸ்துவ மதமும்
  • சகோதரி நிவேதிதை
  • Sri Lalithambika Sahasranama Stotram
  • Siva Sahasranama Stotram
  • Sri Vishnu Sahasranama Stotram
  • Facts of Brahman
  • The Indian National Education
  • Daily Divine Digest
  • Mind and Spirituality
  • Key to Higher Life
  • My Dear Students - A Counsel
  • The Nursery School
  • The Teacher
  • The Student
  • The School
  • Sri Krshna - The Manifest Divinity
  • Tirukkural
  • Hinduism Hosts Christianity
  • Bible in the Life of Vedanta
  • Reminiscences of Master Mahashaya

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்பவானந்தர்&oldid=3772550" இலிருந்து மீள்விக்கப்பட்டது